கையும் களவுமாக சிக்கிய சௌந்தரபாண்டி.. சண்முகம் செய்த சம்பவம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சனியன் மனைவி போன் செய்ததால் அவர் சனியன் வீட்டிற்கு கிளம்பிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி சனியன் வீட்டிற்கு கிளம்பி வர இன்னொரு பக்கம் சனியன் பாரில் உட்கார்ந்து இருக்க வெட்டுக்கிளி சௌந்தரபாண்டி சனியனை அனுப்பிட்டு அவன் பொண்டாட்டியை இவர் பார்த்துக்க போறாரு என்று சொல்ல சனியன் அதிர்ச்சி அடைகிறான்.
உடனே சனியனும் அவனது வீட்டிற்கு கிளம்பி வருகிறான், மறுபக்கம் சௌந்தரபாண்டி சனியன் வீட்டிற்கு வந்து அவன் பொண்டாட்டியிடம் என்ன விஷயம் என்று கேட்க, பசியில் இருக்கும் போது எப்படி சொல்ல முடியும்? உலை கொதிக்குது உட்காருங்க என்று உட்கார வைத்து ஐஸ் கிரீமை கொண்டு வந்து சாப்பிட கொடுக்கிறாள்.
சௌந்தரபாண்டி ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்க சனியன் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி காரை பார்த்து பாரில் வெட்டுக்கிளி பேசியது உண்மை தான் என்று நம்புகிறான், ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க அப்போது சனியனின் மனைவி சௌந்தரபாண்டிக்கு ஐஸ் கிரீம் ஒட்டி இருக்க அதை தனது புடவையால் துடைத்து விட சனியன் இன்னும் அதிர்ச்சி அடைகிறான்.
உடனே வீட்டிற்குள் நுழைந்து இதனை வருஷமாக உங்களை நம்பி இருந்த எனக்கே இப்படி துரோகம் பண்றீங்க என்று கோபப்படுகிறான். நல்லவள் சூடாமணியை கெட்டவளாக்கிட்டீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி ஆமாம் சூடாமணி உத்தமி தான், அவ மேல பழியை போட்டு நான் ஜெயிலுக்கு அனுப்பினேன், அதுக்கு என்ன இப்போ என்று சொல்கிறான்.
மேலும் இந்த விஷயத்தை வெளியே சொல்லி இருந்தா நீயும் நானும் ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல சண்முகம் அதான் மாட்டிக்கிட்டிங்களே என்று கை தட்டியபடி உள்ளே என்ட்ரி கொடுக்க சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கல்யாண நாளில் குறிப்பதில் வந்த சிக்கல்.. கௌதம் எடுத்த ஸ்மார்ட் முடிவு
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மற்றும் ஜீவா இருவரும் சமாதானமாகிய நிலையில் இன்று, கௌதம் மற்றும் மதுமிதா குடும்பத்தினர் கல்யாணத்திற்காக நாள் குறிக்க ஒன்று கூடுகின்றனர், கௌதம் குடும்பத்தினர் ஏற்கனேவே ஒரு நாளை தேர்வு செய்து வந்துள்ள நிலையில் மதுமிதா குடும்பத்தினர் தங்களது ஜோதிடர் ஒரு தேதியை குறித்து கொடுத்ததாக சொல்ல இரண்டும் வெவ்வேறாக இருக்க என்ன செய்வது எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் உருவாகிறது.
இதையடுத்து கௌதம் சந்தோஷின் குழந்தையை கூப்பிட்டு இரண்டு தேதியையும் பேப்பரில் எழுதி போட்டு ஒன்றை எடுக்க சொல்ல அந்த குழந்தை எடுத்த தேதியை தேர்வு செய்கின்றனர். இதையடுத்து சகுந்தலாவும் ரேணுகாவும் பேசி கொண்டிருக்கும் போது கல்யானத்துக்கு நிறைய பேர் வருவாங்க, குறைந்தது 10 ஆயிரம் வருவாங்க என்று சொல்ல ரேணுகா அதிர்ச்சி அடைகிறாள்.
அதனை தொடர்ந்து கௌதம் மதுமிதா தனியாக பேசும் போது கௌதம் புடவை நன்றாக இருப்பதாக சொல்ல மது நீங்க சும்மா பொய் சொல்லாதீங்க, லாஸ்ட் டைம் நீங்க என் புடவையை பார்க்காமலே நல்லா இருக்குனு பொய் சொன்னீங்க என்று சொல்கிறாள். அதன் பிறகு கௌதம் இந்த முறை உண்மையாக தான் சொல்றேன் என்று சொல்ல மது அப்போ நான் அழகா இல்லயா என்று கோபப்படுகிறாள்.
இறுதியாக தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என்று முடிவெடுத்து நான் போறேன் என்று கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.