Advertisment

தங்கையின் தியாகத்தை புரிந்துகொண்ட அண்ணன்... அம்மாவை காப்பாற்றுவாரா மகன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial Update

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

பூனையால் கன்ஸ்யூசான கார்த்திக்.. காட்டி கொடுத்த தீபா

கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை தேடி குடோனுக்கு வந்திருந்த நிலையில் இன்று, அபிராமி பொருட்களால் மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக் அங்கிருந்து வெளியே வரும் போது ஒரு பொருள் கீழே விழ உடனே திரும்பி பார்க்க பூனை ஒன்று கத்த அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறான்.

இதனையடுத்து மீண்டும் பல இடங்களில் அபிராமியை தேடி பார்க்க எங்கும் கிடைக்காததால் வருத்தப்படுகிறான், தீபா ரவுடிகளை பார்த்ததால் அவரை வைத்து எதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறான். மறுபுறம் தீபா கட்டுடன் வீட்டிற்கு வர வீட்டில் என்னாச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு கார்த்திக் போலீசுடன் வீட்டிற்கு வந்து தீபா நீங்க சில ரவுடிகளை பார்த்தீங்கல அவங்களில் யாரவது இந்த லிஸ்டில் இருக்காங்களா பாருங்க என்று போலீஸ் அக்கியூஸ்ட் லிஸ்ட்டை காட்ட தீபா அதை பார்த்து சிலரை அடையாளம் காட்ட ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு அந்த தீபா உங்களை அடையாளம் காட்டிட்டா உஷாரா இருங்க என்று வார்னிங் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

வெளிவரும் இசக்கியின் தியாகம்.. கலங்கி நிற்கும் சண்முகம் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சௌந்தரபாண்டி கழுத்தில் அரிவாளை வைக்க முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் அரிவாளை வைத்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, முத்துப்பாண்டி என் அப்பாவை விடுவா இல்லனா உன் தங்கச்சி கழுத்தை அறுத்துடுவேன் என்று சொல்ல, இசக்கி என்னை பத்தி கவலைப்படாதே அண்ணே, அவன் கழுத்தை அறு என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

இதன்பிறகு சஷண்முகம் சௌந்தரபாண்டியை தள்ளி விட்டு இசக்கியை காப்பாற்றி முத்துபாண்டியை அடித்து கீழே தள்ளுகிறான். இசக்கி உனக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும் தான் நான் வந்தேன், நீ இவங்களை கொன்னுட்டு கொலைகாரனாகி ஜெயிலுக்கு போய்ட கூடாது, ரத்னா அக்காவுக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமையனும்னு தான் வந்தேன் என்று குடும்பத்திற்காக செய்த தியாகத்தை சொல்லும் இசக்கி, என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க என்று சொல்கிறாள்.

இதை கேட்ட சண்முகம் உன்ன இப்போ எல்லாம் கூட்டி போக மாட்டேன். உன்னை கூட்டி வந்ததற்காக இவங்க படாத பாடு படணும், உன்னை பார்த்தாலே தெறித்து ஓடணும். அப்பறம் என் தங்கச்சியாக வீட்டிற்கு கூட்டி போறேன் என்று கிளம்பி செல்கிறான். இசக்கி சொன்ன வார்த்தைகளை நினைத்து சண்முகம் கண்ணீருடன் வண்டியை ஓட்ட காற்றில் அவன் கண்ணீர் பரணி மீது பட அவளும் வருத்தப்படுகிறாள்.

இங்கே இசக்கி எதுவும் நடக்காதது போல தட்டு நிறைய சாப்பாட்டை போட்டு சாப்பிட இவ்ளோ கலவரம் நடந்திருக்கு சாதாரணமாக சாப்பிடுற என்று பாக்கியம் கேட்க இவனுங்கள ஓட ஓட விரட்டணும், அதுக்கு உடம்புல தெம்பு வேண்டும் என்று சாப்பிடுகிறாள். மறுபக்கம் சண்முகம் வீட்டிற்கு வர தங்கைகள் என்னாச்சு என்று கேட்க சண்முகம் ஒன்னும் ஆகல என்று ரூமுக்குள் சென்று விடுகிறான்.

பரணி தப்பா எதுவும் நடக்கல என்று சொல்லி கொண்டிருக்க ரூமுக்குள் சண்முகம் இசக்கி போட்டோவை வைத்து கொண்டு சத்தம் போட்டு கதறி அழ எல்லாரும் பதறி உள்ளே ஓடுகின்றனர். உன்ன நான் தப்பா நினைச்சிட்டேன், என் தங்கச்சி இந்த குடும்பத்தோட குல தெய்வம் என்று அழ தங்கைகளும் சண்முகத்தை கட்டி பிடித்து அழுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

சுடரை காப்பாற்றிய எழில்.. வேலுவுடன் ஏற்படும் மோதல், நடந்தது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரை வேலு மடக்கி பிடித்த நிலையில் இன்று, வேலு சுடரை பிடித்து விட சுடர் செய்வதறியாது தவிக்க அவளை காப்பாற்ற வருகிறான் எழில். இதனால் எழிலுக்கும் வேலுவுக்கும் மோதல் உருவாகிறது. வேலு எழிலை தாக்க பதிலுக்கு எழில் வேலுவை அடித்து கீழே தள்ளுகிறான்.

நீ யாரா வேணால் இரு, ஆனால் தமிழ் என் வீட்டில் இருக்கும் வரை நான் தான் அவளுக்கு பாதுகாப்பு என்று சுடரை காப்பாற்றி வேலுவை போலீசில் பிடித்து கொடுக்கிறான். மனோகரி அங்கு வந்து யார் அவன் என்று கேட்க எழில் அவ பயந்து போய் இருக்கா, இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம் என்று சொல்லி அழைத்து வருகிறான். சுடர் காரில் வரும் போது குற்ற உணர்ச்சியுடன் மன்னிப்பும் நன்றியும் சொல்லி கொண்டே வர எழில் எதுவும் பேசாமல் வருகிறான்.

பிறகு அப்பாவுக்கு போன் செய்து வேலு வந்த விஷயத்தையும் தன்னை எழில் காப்பாற்றிய விஷயத்தையும் சொல்கிறாள். எழில் சார் வீட்டில் இருக்கும் வரை நான் பாதுகாப்பு இருப்பேன் என்று சொல்ல அவர் நீ எங்கயும் போகாத, அந்த தம்பிக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல என்று சொல்லி கண் கலங்குகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment