ஷாக் கொடுத்த மாயா.. ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ், தனத்திற்கு விழுந்த அறை
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மற்றும் சீனு என இருவரும் தனத்தை தேடி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது கார்த்திக் தனத்திற்கு ஜூஸ் கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க மறு பக்கம் மாயா மற்றும் சீனு இருவரும் இவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேர்கின்றனர்.
இதையடுத்து இருவரும் ரிசப்ஷனில் வந்து விசாரிக்க முயற்சி செய்ய குடி போதையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்க ஒரு பக்கம் சீனு ரெஜிஸ்டரை பார்க்க அதில் கார்த்திக் மற்றும் தனம் ஆகியோரின் பெயர் இருப்பதை கண்டு பிடிக்கிறான். அதேபோல் மாயா அவர்களின் ஆதார் கார்டு இருப்பதையும் கண்டு பிடிக்கிறாள். இதையடுத்து போலீஸ் உள்ளே நுழைய மாயா இவர்களை தேடிச் சென்றுவிட்ட சீனுவை பார்த்த போலீஸ் இங்க யாராவது தப்பான விஷயத்துக்காக தங்கியிருக்காங்களா என்று கேட்க ஒரு நிமிஷம் சார் என்று வேலை செய்பவன் போல ரெஜிஸ்டரை பார்த்து ரூமையும் ப்ளோரையும் மாற்றி சொல்கிறான்.
போலீஸ் சீனு சொன்ன ப்ளோருக்கு சென்ற நேரத்தில் மாயா தனம் மற்றும் கார்த்திக் இருக்கும் இடத்தை தேடி பிடிக்கிறாள். தனம் ஜூசை குடிக்க போகும் நேரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டு ஜூசை குடிக்காமல் கதவை திறக்க மாயா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். தனத்தை பார்த்த மாயா கன்னத்தில் பளார் என்று அறை விட சீனு கார்த்திகை பிடித்து கிட்ட அவன் மன்னிப்பு கேட்கிறான்.
இதையடுத்து மீண்டும் போலீஸ் கீழே வர அதற்குள் இவர்கள் அங்கிருந்து எஸ்கேப்பாக முயற்சி செய்ய போலீஸ் வேக வேகமாக சுற்றி வளைக்க சீனு கரண்ட்டை கட் பண்ணி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர். பிறகு ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி கார்த்திகை திட்டி அனுப்பி விட்டு தனத்தை கூட்டிக்கொண்டு கிளம்பி செல்கின்றனர். கார்த்திக் புவனேஸ்வரிக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல அவள் பயங்கர கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பட்டாசை கொளுத்தி போட்டு பதற விட்ட சண்முகம்.. சௌந்தர பாண்டிக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி
அண்ணா. சீரியலின் நேற்றைய எபிசோடில் வீல் சேரில் வெளியே வந்த சௌந்திர பாண்டியை ஷண்முகம் மடக்கி பிடித்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சண்முகம் பட்டாசை கொளுத்தி போட்டு சௌந்திர பாண்டியை பதற வைத்து ஓட விட சௌந்தரபாண்டி நாடகம் போட்டது முத்துப்பாண்டி மற்றும் பாண்டியம்மாவிற்கு தெரிய வர இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்தது பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் அவரை பிடித்து கண்டமேனிக்கு திட்டுகின்றனர். இசக்கி இதுக்கு நீங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறீர்கள் என்று முத்துப்பாண்டியை திட்ட அவன் ஒன்றும் புரியாமல் இருக்கிறான்.
அடுத்ததாக பதவி ஏற்று வீட்டுக்கு வந்த பரணி மற்றும் சண்முகம் சூடாமணியை பார்க்க முடிவெடுக்கின்றனர். பிறகு வைகுண்டத்துடன் கேரளா ஜெயில் அம்மனை பார்க்க போவதாக சொல்ல தங்கைகள் யார் அந்த ஜெயில் அம்மன் என்று பெருமையாக பேசுகிறாள். இதனால் சண்முகத்தின் தங்கைகள் நாங்களும் வருகிறோம் என்று சொல்ல பரணி நீங்க எல்லாம் வரக்கூடாது என்று சொல்லி விடுகிறாள்.
கேரளா அம்மனை பார்க்க நானும் வரேன் என்று சொல்ல சண்முகம் அப்பா உனக்கு எல்லாம் தெரியும் நீ அமைதியா இரு என்று சொல்லி விட்டு பரணியோட கிளம்பி வருகிறான். ஜெயில் வைத்து சூடாமணியை பார்த்து தர்மகத்தா பதவியில் ஜெயித்த விஷயத்தை சொல்ல அவள் சந்தோஷப்படுகிறாள். கூடிய விரைவில் நகைகளை கண்டுபிடித்து உங்களை வெளியே எடுக்கிறோம் என்று சொல்லி சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு பேச வைக்க சூடாமணி கூடிய சீக்கிரம் நான் வருவேன் டா என்று மிரட்ட அவர் அதிர்ந்து போகிறார்.
இதையடுத்து சௌந்தரபாண்டி பாண்டியம்மா, சனியன் ஆகியோரிடம் அந்த சூடாமணி கூடிய சீக்கிரம் வெளியே வரப் போறா.. அந்த கோவில் நகை பரணி கையில சிக்காம ஏதாவது செய்யணும் என்று சொல்ல பாண்டியம்மாவும் நீ சொல்ற மாதிரியே செய்வோம் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“