சண்முகத்திடம் கேம் விளையாட தயாராகும் தங்கைகள்.. சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பாக்கியம்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி தான் தங்களது அம்மா என்ற உண்மை ரத்னா மற்றும் இசக்கிக்கு தெரிய வந்த நிலையில் இன்று, இசக்கியும் ரத்னாவும் சூடாமணியை கட்டியணைத்து அழுகின்றனர். நீங்க தான் அம்மானு தெரியாமல் உங்ககிட்டயே அம்மாவை திட்டி பேசி இருக்கோம் என்று வருத்தப்பட, சூடாமணி உங்க இடத்தில் நான் இருந்து இருந்தாலும் அது தான் நடந்திருக்கும் என்று சொல்கிறாள்.
இதனை தொடர்ந்து இவர்கள் பேசுவதை கனியும் வீராவும் கேட்டு விட அவர்களுக்கும் உண்மை தெரிய வருகிறது. பிறகு அண்ணனுக்கு விஷயம் தெரிந்தும் எதுக்கு சொல்லல என்று கேட்க நான் தான் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டதாக சொல்கிறாள். அண்ணன் நம்ம கிட்ட உண்மையை சொல்லாத மாதிரி நாமளும் நமக்கு உண்மை தெரிந்த்துடுச்சுனு காட்டிக்க வேண்டாம், நாம ஒரு கேம் விளையாடுவோம் என்று முடிவெடுக்கின்றனர்.
அடுத்து பாக்யமும் இசக்கியும் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி துப்பாக்கியுடன் எதிரே நின்று அதிர்ச்சி கொடுக்கிறார். இனிமே அந்த வீட்டிற்கும் எனக்கும் ஒட்டும் இல்ல உறவும் இல்லனு சொன்னா உள்ளே விடுறேன் என்று சொல்ல, பாக்கியம் அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்கிறாள். சனியன் அம்மா நீங்க இங்கேயே இருங்க நான் ஐயா கிட்ட பேசி உங்களை உள்ளே கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறான்.
உடனே பாக்கியம் நீ என்னை உள்ள கூட்டிட்டு போறியா? வா இங்க என்று கேட்டு கன்னத்தில் ஒரு அறை விட சனியன் சௌந்தரபாண்டி காலடியில் வந்து விழ கையில் ஏந்திய துப்பாக்கி கீழே இறங்க இசக்கி ஒரு பாட்டிலை காட்டி இது என்னனு தெரியுமா? விஷம், இங்க தான் சாப்பிடணும் நியாபகத்துல வச்சிக்கோங்க என்று மிரட்டி விடுகிறாள்.
இதை தொடர்ந்து சண்முகத்தின் தங்கைகள் சூடாமணி கண்ணை கட்டி ஒளிந்து விளையாட வைகுண்டம் சூடாமணி கையை பிடித்து ரொமான்ஸ் செய்ய இதை பார்த்த வெட்டுக்கிளி மூணு தங்கைகளையும் தனியா கூட்டிட்டு போய் வீட்டிற்கு வந்திருப்பது உங்க அப்பாவோட செட்டப், அவங்க வீட்டில் இருக்கிறது நல்லது இல்ல என்று சொல்கிறான்.
இதை கேட்ட ரத்னா அப்பாவுக்கும் வயசாகுதுல, அவருக்கும் ஒரு துணை வேணும். செட்டப் தானே வச்சிக்கட்டும் என்று சொல்ல வெட்டுக்கிளி குடும்பமா இது? இனிமே இந்த வீட்டு வாசப்படியே மிதிக்க கூடாது என்று வெளியே வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணியை ஏற்றி விட்ட புவனேஸ்வரி.. சீனு கல்யாணத்தில் வர போகும் சிக்கல்
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் மாயாவை மகளாக ஏற்று கொண்டு வீட்டிற்க்கு வர புவேஸ்வரி வரதட்சணை வேண்டாம் என்று தட்டு மாற்றி கொண்ட நிலையில் இன்று, ரகுராம் ரூமில் மாயா திரும்பவும் இந்த வீட்டிற்கு வர அவ பெரியம்மா தான் காரணம் என்று சொல்ல ஜானகி மாயாவோட பெரியப்பாவும் பெரிய ஆளு தான்.. அவர் சொன்னதையும் சாதிச்சிட்டாரு என்று சொல்கிறார்.
அதன் பிறகு குடும்பத்தினர் எல்லாரும் ஒன்றாக உக்கார்ந்து சாப்பிட்டு சந்தோசப்பட சீனு மட்டும் வருத்தத்தில் இருக்கிறான், இதனை தொடர்ந்து மணி மொட்டை மாடியில் நின்று தம் அடித்து கொண்டிருக்கிறான். இந்த நேரத்தில் பசுபதி மற்றும் புவனேஷ்வரி என இருவரும் மேலே வர மணி தம்மை தூக்கி போட பசுபதி எதுக்கு தூக்கி போட்டீங்க, என்கிட்டயும் தம் இருக்கு என்று சொல்ல இருவரும் சேர்ந்து தம் அடிக்கின்றனர்.
சைடு கேப்பில் மாயா சீனு காதல் குறித்து எங்களுக்கு தெரியும் என்று பேச்சை ஆரம்பிக்கின்றனர். என்னதான் இருந்தாலும் நீங்க ஏன் இப்படி விட்டீங்க, உங்களுக்கு உங்க பையன் வாழ்க்கை மேலே அக்கறை இல்லையா என்று ஏற்றி விடுகின்றனர், இப்போ கூட இந்த கல்யாணத்த நிறுத்திடலாம் என்று சொல்கிறார்கள். இதை கேட்டதும் மணி நான் எப்படியாவது கல்யாணத்த நிறுத்தி என் பையனுக்கும் மாயாவுக்கும் கல்யாணம் செய்து வைப்பேன் என்று சொல்கிறான்.
அதன் பிறகு மாயாவிடம் அவளது அம்மாவை பற்றி பேச மாயா உணர்ச்சிவசப்பட்டு அழுகிறாள். மணி அழாத மா.. மாமா நான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்ல சீனு தூரத்தில் இருந்து இதை பார்க்கிறான். மாயா எதுக்கு எழுறா என்று கேட்க என்னதான் இருந்தாலும் காதலிச்ச பையனுக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம்னா அழுகை வர தானே செய்யும் என்று மாற்றி கொளுத்தி போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.