Advertisment

அண்ணனை ஜெயிக்க வைத்த தங்கை... தம்பியை வீழ்த்த நினைக்கும் அண்ணன் : யார் வெல்வார்?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சந்தியாராகம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
KP ANNA SR

அண்ணா - கார்த்திகை தீபம் - சந்தியா ராகம்

கார்த்திக்காக முருங்கை மரத்தையே கொண்டு வந்த தீபா.. ஆப்பு வைக்க புது பிளான் போட்ட ஆனந்த் - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ‌ கார்த்தியை வேற ஒரு ஆபீஸ் அனுப்ப பிளான் செய்த நிலையில் இன்று, ஆனந்த் ரம்யா ஒரு லேடி ஹிட்லர் கார்த்தியை அவ கம்பெனிக்கு அனுப்பினா கண்டிப்பா கஷ்டப்படுவான் என்று சொல்லி ரம்யாவுக்கு போன் போட்டு எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு உன் கம்பெனில வேலையை கொடு என்று சொல்கிறான்‌. ரம்யா நீயே கம்பெனி வச்சிட்டு தான இருக்க இங்க கொடுக்கலாமே என்று கேட்க இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல என்று சொல்கிறான்.

மேலும் அவன் தப்பு பண்ணா நான் ரெகமெண்ட் பண்ண ஆளு என்றெல்லாம் பார்க்க வேண்டாம் வேலையை விட்டு அனுப்பிடு என்று சொல்லி ஃபோனை வைக்கிறான். மார்க்கெட் சென்று வந்த தீபா முருங்கக்காய் முருங்கைப்பூ என அனைத்தும் முருங்கை ஐட்டமாக வாங்கிட்டு வர மீனாட்சி மைதிலி அவளை கலாய்கின்றனர்.

அபிராமி வந்து என்ன சமையல் என்று கேட்க எல்லாம் தீபா முருங்கைக்காய் அழுத்தமா சமைக்கிற என்று சொல்ல அபிராமி உடம்புக்கு நல்லது தானே கல்யாணமான புதுசுல நானும் இப்படி தான் சமைச்சு கொடுத்தேன் என்று சொல்ல அபிராமியையும் சேர்த்து கலாய்க்கின்றனர். அதன் பிறகு கார்த்திக் ஆபீஸ் கிளம்பி வரேன் ஆனந்த் அவனை கூப்பிட்டு நீ நம்ப ஆபீஸ்க்கு வர வேண்டாம், வேற ஒரு ஆபீஸோட அட்ரஸ் கொடுக்கிறேன் அங்க போ என்று சொல்கிறான்.

கார்த்தி உங்களுக்கு என்னைய இடம் மாத்திக்கிட்டே இருக்கிறதே வேலையை போச்சு என்று சொல்லி சரி குடுங்க என்று ரம்யா கம்பெனிக்கு கிளம்பி செல்கிறான். மறுபக்கம் தண்ணீர் பிடித்த ஒரு பெண் தவறுதலாக வந்து ரம்யா மீது மோதிவிட அந்த ரம்யா அந்தப் பெண்ணிடம் சண்டை போடுகிறார். அந்தப் பெண்ணோ உங்கமேல தப்பு என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாயா விஷயத்தால் ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. ரகுராமிடம் உண்மையை மறைக்கும் ஜானகி - சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுமங்கலி பூஜை நடந்து முடிய புருஷன் சாப்பிட்ட தட்டில் தான் பொண்டாட்டி சாப்பிடணும் என்று ரமணி சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மாயா யாருக்கும் தெரியாமல் கிச்சனுக்கு வந்து சீனு சாப்பிட்ட தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து சாப்பிட திடீரென விக்கல் வர சீனுவே தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க மாயா அவனிடம் மாட்டி கொள்கிறாள். அதன் பிறகு இருவரும் ரொமான்ஸாக பேசி கொள்கின்றனர். சீனு சென்றதும் ஜானகி வர மாயா சீனு சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

அடுத்து ஜோசியரை வந்து சந்திக்க அவர் உன்னுடைய சொந்தம் ஒன்னு உன்கூடவே இருக்க போகுது, அதனால் உன் குடும்பத்துக்கும் உன் கௌரவத்துக்கும் களங்கம் வர போகுது. ரெண்டுத்துல எதையாவது ஒன்னை தான் நீ தடுத்து நிறுத்த முடியும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். பிறகு வீட்டிற்கு வரும் ஜானகி மாயாவிடம் சீனு விஷயமாக பேச போகிறாள்.

அப்போது குறுக்கே வரும் தனம் ஸ்டேட் லெவல் மேட்சில் வெளியூர் போய் விளையாட போறேன், இதுவரைக்கும் காலேஜ்லயே விளையாடியதுனால் அப்பாவை சமாளிச்சிட்டேன், இப்போ வெளியூர் போகணும், நீதான் என்னை கூட்டிட்டி போகணும் என்று சொல்ல ஜானகி சரி என்று சம்மதம் சொல்கிறாள். மேலும் மாயாவிடம் அப்பறம் பேசி கொள்ளாமல் என்றும் தள்ளி போடுகிறாள்.

பிறகு பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு மாயாவையும் தனத்தையும் அழைத்து செல்வதாக ரகுராமிடம் முதல் முறையாக பொய் சொல்லி அழைத்து வருகிறாள் ஜானகி. சீனுவும் மணிவண்ணனும் வேலையாட்களுக்கு பணம் கொடுக்க போவதாக சொல்லி விட்டு இவர்களுடன் கிளம்பி வருகின்றனர். சீனு லவ் பாடல்களை போட்டு மாயாவை பார்க்க ஜானகி எதுவும் பேச முடியாமல் தவிக்கிறாள். அடுத்து இவர்கள் கோவிலுக்கு வர ஷாருவின் அப்பா லிங்கம் இதை பார்த்து சாருவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார்.

ஷாரு சீனு அங்க இருக்கானா, அப்படினா ஏதோ தப்பா தெரியுது அவங்கள பாலோ பண்ணுங்க என்று சொல்லி போனை வைக்க லிங்கம் இவர்களை பின் தொடர்ந்து வர தனம் காஸ்ட்யூமை மாற்றி கொண்டு பேட்மிட்டன் விளையாடுவதையும் இவர்கள் அங்கு இருப்பதையும் பார்த்து ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெயித்து காட்டிய வீரா.. கோபத்தில் பரணி, சௌந்தரபாண்டிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த சண்முகம் - அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியின் சூழ்ச்சியை முறியடிக்க வீரா என்ட்ரி கொடுத்து சிலம்பாட்டம் ஆட தொடங்கிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் ரவுண்டில் வீரா அடி வாங்க சௌந்தரபாண்டியும் முத்துபாண்டியும் சந்தோசப்பட்டு சிரிக்க அடுத்த ரவுண்ட் தொடங்குகிறது, இந்த ரவுண்டியில் யார் முதலில் எதிரில் இருப்பவர் நெற்றியில் பொட்டு வைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று சொல்கின்றனர்.

இதனை தொடர்ந்து வீரா ருத்ரா வெளுத்தெடுத்து அவளது நெற்றியில் பொட்டை வைத்து போட்டியில் ஜெயித்து காட்ட எல்லாரும் வீராவை கொண்டாடுகின்றனர், மேடையில் கலெக்டர் இருந்தும் சௌந்தரபாண்டி கையால் தான் பரிசை வாங்குவேன் என்று சொல்லி பரிசு தொகையை வாங்கி கொள்ள சண்முகம் என்னவெல்லாம் பேசுனீங்க என்று அவர்களை கலாய்த்து விட்டு வீட்டிற்கு வருகிறான்.

வீட்டிற்கு வந்து பார்க்க பரணி இருக்க அனைவரும் ஷாக்காகின்றனர். அவர் தான் வேணும்னே உங்களை வம்பிழுக்கிறாரு, நீயும் போவியா என்று திட்ட சண்முகம் வீரா ஜெயித்த விஷயத்தை சொல்லி சமாதானம் செய்கிறான். அடுத்து இரவில் தூங்கி கொண்டிருக்கும் போது சண்முகத்திற்கு கோவிலில் மாற்று திறனாளி ஒருவரை சந்தித்தது. அதன் பிறகு பழனிக்கு போக ஒரு அம்மா உதவி கேட்டது. கும்பாபிஷேகம் நடத்த உண்டியல் வைத்தது போன்ற விஷயங்கள் வந்து வந்து போக சண்முகத்திற்கு ஐடியா ஒன்று தோன்றுகிறது.

உடனே ரத்னாவை எழுப்பி உன் ஸ்கூலில் படிக்கிற பசங்களோட அப்பா அம்மாவை நாளைக்கு கோவிலுக்கு வர சொல்லு என்று சொல்ல ரத்னா காரணம் கேட்க நீ எல்லாருக்கும் சொல்லு, எதுக்குன்னு நாளைக்கு சொல்றேன் என்று சொல்கிறான். மறுநாள் எல்லாரும் கோவிலில் ஒன்று கூடுகின்றனர். அப்போது உடன்குடி ஒரு உண்டியலை கொண்டு வந்து வைக்க சண்முகம் இந்த ஸ்கூல்ல தான் உங்க வீட்டு பிள்ளைங்க எல்லாம் படிக்குதுங்க. இந்த இடத்தை வாங்கி ஒயின் ஷாப்பா மாத்த பிளான் போடுறாரு சௌந்தரபாண்டி.

அதனால் இந்த இடத்தை வாங்க உங்களால் முடிந்த பணத்தையோ நகையையோ போடுங்க, நாளைக்கு வரைக்கும் இந்த உண்டியல் இங்க இருக்கும் என்று சொல்ல வைகுண்டம் இதெல்லாம் நடக்குற விஷயமா என்று சொல்ல சண்முகம் அவரை அடிக்க துரத்துகிறான். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்து பார்க்க அங்கு ஒருத்தனும் இல்லாமல் இருக்க சண்முகம் வருத்தம் அடைகிறான்.

கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் படிக்கும் பெண் அம்மாவுடன் வந்து நகையையும் பணத்தையும் போட்டுட்டு போக ஊர் காரர்கள் எல்லாரும் போட தொடங்குகின்றனர், இதனால் சண்முகம் மனதுக்குள் ஸ்கூலை வாங்கி விடலாம் என்ற சந்தோசம் தோன்றுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment