Advertisment

பதவி ஏற்கும் மகள், பக்கவாதத்தில் அப்பா: சூழ்ச்சியை கண்டுபிடிப்பாரா ஹீரோ; ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோடு

author-image
WebDesk
New Update
zee tamil serial 155
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தீபாவை தீர்த்துக் கட்ட தயாரான திட்டம்.. ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரியா

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமிக்கு ஆபரேஷன் தொடங்க ரம்யா தீபாவை தீர்த்து கட்ட ஒரு புதிய பிளானை போட்ட நிலையில் இன்று, போலீஸ்காரர்கள் அபிராமியை சுட்டது யாராக இருக்கும் என விசாரணை மேற்கொள்கின்றனர். எல்லோரும் ரியா தான் என்று சொல்ல துப்பாக்கியில் ஆனந்தின் கைரேகை தான் இருக்கிறது, ரியாவின் கைரேகை இல்லை என சொல்கின்றனர். அதேபோல் சிசிடிவி கேமராவிலும் ரியா குறித்து எந்த ஆதாரமும் இல்லை என சொல்கின்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு பிறகு கேமராமேன் சம்பவ இடத்தில் இல்லை அதனால் அவன் மேலயும் சந்தேகம் இருக்கிறது என்று சொல்கின்றனர். அடுத்ததாக ரம்யா வீட்டுக்கு வர அவருடைய அப்பா இப்போ அபிராமி எப்படி இருக்காங்க என்று கேட்பதோடு கார்த்திக்கு போன் செய்து தர சொல்லி அபிராமி குறித்து நலம் விசாரிக்க கார்த்திக் தற்போதைய நிலவரத்தை சொல்கிறான். பிறகு ரம்யா வெளியே கிளம்பும்போது சாமியார் வேடத்தில் சேகர் வந்து நிற்க ரம்யா யார் நீ என்று கேட்கிறாள்.

அதன்பிறகு அவன் நான்தான் மேடம் சேகர் என்று சொல்கிறான். உங்களாலயே என்னைய அடையாளம் கண்டுபிடிக்க முடியல அப்பவே நாம பாதி ஜெயிச்சுட்டோம் என்று சொன்னதும் ரம்யா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ரகசியமாக சொல்கிறாள். அதன் பிறகு அருணாச்சலம் திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து அபிராமியை நினைத்து அழுது புலம்ப எல்லோரும் அங்கு ஒன்று கூடி விடுகின்றனர்.

எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆனந்த் தான் இவனை போட்டு அடித்துக் கொள்ளுங்கள் என்று ஆவேச பட, தீபா நீங்க இப்படி வருத்தப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க மாமா நான் போய் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரேன் என்று உள்ளே செல்கிறாள். எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்னை மன்னிச்சிடுங்க என்று அருணாச்சலத்திடம் ஆனந்த் மன்னிப்பு கேட்க அருணாச்சலத்துக்கு பால் கொண்டு வந்த தீபா ரியா பத்தி பேப்பர்ல செய்தி வந்திருக்கு கூடிய சீக்கிரம் போலீஸ் அவள கண்டுபிடிச்சிடுவாங்க என்று ஆறுதல் செல்கிறாள். 

ரியாவை கண்டுபிடித்து கொடுத்தால் 10 லட்சம் என பேப்பரில் விளம்பரம் வந்திருப்பதால் ஐஸ்வர்யா பேசாம நாமலே பிடிச்சு கொடுத்துட்டு பத்து லட்சத்தை வாங்கிடலாமா என்று யோசிக்க ரியா போன் செய்து பேப்பர்ல நியூஸை பார்த்து மாட்டி விட்டுடலாம்னு கூட யோசிக்காத உன் அம்மாவையும் உன்னையும் கொன்னுட்டு போயிட்டே இருப்பேன் என்று எச்சரிக்கிறாள்.

ஐஸ்வர்யா நான் அப்படியெல்லாம் யோசிக்கல என்று சமாளித்து உன்கிட்ட இருக்க வைரத்தோட மதிப்பு எவ்வளவு இருக்கும்? நீ அதெல்லாம் என்ன பண்ணுவ என்று கேட்க ரியா உன்கிட்ட கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல அதை இப்பவே கொடுத்துடு என ஐஸ்வர்யா கேட்கிறாள். ரியா எதுக்கு உன்கிட்ட வைரத்தை கொடுத்து பிறகு நான் ஜெயிலுக்கு போறதுக்கா என்று மடக்கி கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதவி ஏற்கும் பரணி.. சௌந்தரபாண்டிக்கு வந்த பக்கவாதம்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சனியனை கொல்ல முயற்சி செய்ய சண்முகத்தின் அட்வைஸால் அது நடக்காமல் போன நிலையில் இன்று, சண்முகம் குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருக்க அப்போது ஊர் பெரியவர்கள் வீட்டிற்கு வந்து தர்மகத்தா தேர்தல்ல நீங்க தான் ஜெயிச்சு இருக்கீங்க எப்ப பதவி ஏத்துக்க போறீங்க என்று கேள்வி எழுப்புகின்றனர். பரணி நாளைக்கே ஏத்துகிறேன் என்று சொல்ல இந்த விஷயம் அறிந்த சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார்.

பரணி பதவி ஏத்துக்கிட்டா கணக்கு வழக்கு எல்லாம் கொடுக்கணும். கூட இருக்கும் அதிகாரிகள் கணக்கு வழக்கை செக் பண்ணா நகை திருடு போன விஷயம் எல்லாம் தெரிய வந்துடும். அதனால இதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும் என யோசிக்கிறார். அதன் பிறகு திடீரென கை கால் இழுத்துக் கொண்டது போல நாடகம் போட அதை பார்த்து எல்லோரும் பதறி போய் பரணிக்கு போன் போட்டு வீட்டுக்கு வர சொல்கின்றனர். சௌந்தரபாண்டியை பரிசோதனை செய்த பரணி உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை, அப்படி இருந்தும் ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியல.. ஹாஸ்பிடல் கொண்டு போய் தான் பார்க்கணும் என்று சொல்கிறாள்.

ஆனால் சௌந்தரபாண்டி ஹாஸ்பிடலுக்கு போனால் நடிப்பு உறுதியாக விடும் என்பதால் வீட்டிலேயே வைத்தியம் பார்க்க சொல்கிறார். சண்முகம் அதெல்லாம் வேண்டாம் மாமாவை நான் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் என்று அலேக்காக தூக்கிக் கொண்டு கிளம்ப முத்துப்பாண்டி, பாண்டியம்மா ஆகியோர் சண்முகத்தை தடுக்க முயற்சி செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழிலை கரம் பிடிக்க எல்லை மீறும் மனோகரி.. அரங்கேறிய புது நாடகம்

நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மனோகரி மாப்பிள்ளை உன்னையும் என்னையும் சேர்த்து வைத்து தப்பா பேசினதாக சொல்லி புது நாடகத்தைப் போட எழில் நம்ப மறுக்க மனோகரி கோபப்பட்டு சென்ற நிலையில் இன்று, திடீரென மனோகரியை வீட்டில் காணாத நிலையில் அவளை எல்லோரும் தேட எழில் ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு விசாரிக்க அங்கும் வரவில்லை என்பது தெரிய வருகிறது.

இந்நிலையில் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருக்கும் மனோகரி செல்விக்கு போன் போட்டு நான் சொல்ற மாதிரி செய்யணும் என ரகசியமாக ஏதோ சொல்ல உடனே செல்வி போனை வைத்துவிட்டு ஒரு லெட்டரை எடுத்துக் கொண்டு கீழே சென்று மனோகரி அம்மா லெட்டர் எழுதி வச்சுட்டு போயிட்டு இருக்காங்க என்று சொல்ல எழில் உண்மையை சொல்லு மனோகரி எங்கே என அதட்டி கேட்க ஹோட்டலில் இருக்கும் விஷயத்தை சொல்லி விடுகிறாள்‌.

அதன் பிறகு எழில் ஹோட்டலுக்கு கிளம்பிச் செல்ல செல்வி மனோகரிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரியே பண்ணிட்டேன் ஐயாவும் நம்பிட்டாரு என சொல்கிறாள். மேலும் ஹோட்டலுக்கு கிளம்பி வரும் விஷயத்தையும் சொல்கிறாள். அதே நேரத்தில் செல்வி பேசியதை சுடர் கேட்டு விடுகிறாள். அடுத்ததாக எழில் ஹோட்டலுக்கு வர ஜன்னல் வழியாக இதை பார்த்த மனோகரி போலீசுக்கு போன் போட்டு ஹோட்டலில் இல்லீகளாக சில விஷயங்கள் நடப்பதாக பொய் சொல்கிறாள். பிறகு எழில் மனோகரியின் ரூமுக்குள் வந்து எதுக்கு இப்படி பண்ண என்று பேசிக் கொண்டிருக்க மனோகரி அவனை கட்டிப்பிடித்து கண் கலங்கியபடி டிராமா போட போலீஸ் உள்ளே நுழைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்ப எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Zeetamil Serial
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment