Advertisment
Presenting Partner
Desktop GIF

சொத்தை பிடுங்க சதி: பெண் குழந்தையை கொன்ற அப்பா; வில்லி பக்கமும் நியாயம் இருக்குமோ?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம், அண்ணா மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee bd

கண் திறந்த ரத்னா.. காலை பிடித்து மன்னிப்பு கேட்ட வெங்கடேஷ், ரத்னா எடுக்க போகும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா கண் விழித்து அவளை கோமாவில் இருந்து மீட்டு கொண்டு வர ஒவ்வொருத்தராக பேச தொடங்கிய நிலையில் இன்று, சண்முகம் ரத்னாவிடம் என்னை மன்னிச்சுடுல என்று மனம் உருகி மன்னிப்பு கேட்க ரத்னா கண் திறக்கிறாள். ரத்னா கண் திறந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் மொத்த குடும்பமும் சந்தோசப்படுகின்றனர்.

பிறகு சண்முகம் பரணியை பார்த்து கோவத்துல ஏதோதோ பேசிட்டேன், என்னை மன்னிச்சுரு.. நீ என் குலசாமி என்று சொல்லி கையெழுத்து கும்பிட்டு கண் கலங்க பரணியும் அவனை கட்டியணைத்து கொண்டு கண் கலங்குகிறாள். மேலும் நீ கோவத்துல என்ன வேணாலும் பேசு.. ஆனால் எனக்கும் உன் தங்கச்சி மேலே அக்கறை இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் இன்னொரு முறை ஏதாவது சொன்னா நான் உன் கண்ணு முன்னாடியே இருக்க மாட்டேன். உன் வாழ்க்கையை விட்டு கண் காணாத இடத்திற்கு போய்டுவேன் என்று வார்னிங் கொடுக்கிறாள்.

அதை தொடர்ந்து ரத்னாவுடன் வீட்டிற்கு கிளம்பும் போது வீட்டிற்கு போகுறதுக்கு முன்னாடி ஒரு இடத்திற்கு போக வேண்டி இருக்கு என்று ஸ்டேஷனுக்கு வண்டி விட சொல்கிறாள் பரணி. அங்கு ஜெயிலுக்குள் இருக்கும் வெங்கடேஷை பிடித்து அடி வெளுக்கின்றனர். பிறகு வெங்கடேஷ் திமிராக அதான் அவள் பிழைத்து விட்டாளே எங்களை வெளியே விடுங்க என்று சொல்ல போலீஸ் உன்னால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு எல்லாம் யார் பொறுப்பா? ஸ்கூலை வேற கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி இருக்க என்று வெளியே விட மறுக்கின்றனர்.

இதனால் வெங்கடேஷ் பம்பியபடி ரத்னாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல சண்முகம் கதவை திறந்து விட சொல்கிறான், வெளியே வந்த அவன் ரத்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உயிலை ஸ்வேதா பெயருக்கு மாற்றி எழுத நடந்த வேலைகள்.. உண்மையை காட்டிக் கொடுத்த இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்வேதாவின் மீது சுடருக்கு சந்தேகம் வந்த நிலையில் இன்று, ராமையா பாலை கொண்டு வந்து கொடுத்து எழில் சார்க்கு கொண்டு போய் கொடுங்க என்றது சுடரிடம் சொல்ல சுடர் சோகமாக இருப்பதை பார்த்து ராமையா எனக்கு என்னமோ வந்திருப்பது இந்த அம்மாவோட தங்கச்சி மாதிரி தெரியல என்று சொல்ல சுடர் எனக்கும் அந்த சந்தேகம் இருப்பதாக சொல்கிறாள்.

அதைத்தொடர்ந்து சுவேதாவின் போட்டோவை இந்துவின் போட்டோ முன்னாடி வைத்து சுடர் எனக்கு உண்மையான தங்கச்சி யாருன்னு காட்டுங்க.. இந்த ஸ்வேதா உங்க தங்கச்சி தானா என்பதை எனக்கு தெரியப்படுத்துங்க என வேண்டுகிறாள். இதையெல்லாம் ஆத்மாவாக பக்கத்தில் இருந்து கவனிக்கும் இந்து நீ சந்தேகப்பட்டது உண்மை தான் அந்த ஸ்வேதா என் தங்கச்சி கிடையாது என சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

அதன் பிறகு போட்டோவின் பக்கத்தில் இருந்த கேண்டில் கீழே விழுந்து ஸ்வேதாவின் போட்டோ தீப்பிடித்து எறிய ஸ்வேதா இந்துவின் தங்கச்சி இல்லை என்ற முடிவுக்கு வருகிறாள் சுடர். அதைத்தொடர்ந்து  வீட்டுக்கு வரும் லாயர் உயிலை ஸ்வேதா பெயருக்கு மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லி எழிலிடம் கையெழுத்து கேட்க எழிலும் கையெழுத்து போட போக அதை தடுக்கும் சுடர் ஸ்வேதா இந்து அக்காவோட தங்கச்சி இல்லை என சொல்கிறாள்.

சுடரை திட்டும் எழில் அவளது பேச்சை நம்பாமல் கையெழுத்து போட போக காற்று வேகமாக வீசி பேப்பர் எல்லாம் பறந்து செல்கிறது. உயிலை மாற்றி எழுதுவதில் தொடர்ந்து தடங்கல் ஏற்படுகிறது. கடைசி வரை சுடரும் கையெழுத்து போட விடாமல் தடுத்து விடுகிறாள். மேலே வந்த எழில் இந்த சொத்தை எல்லாம் நீயே அனுபவிக்கணும்னு இப்படி பண்றியா என சுடரிடம் கோபப்படுகிறான். போகப் போக உங்களுக்கே உண்மை தெரியும் என சுடர் பதிலடி கொடுக்கிறாள்.

மறுபக்கம் மனோகரி மற்றும் ஸ்வேதா கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிடுச்சு.. சுடர் இப்படி எல்லாத்தையும் தடுத்துட்டாளே என கோபப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்திக் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள்.. பகைக்கு காரணம் என்ன? உண்மையை உடைக்கும் சாமுண்டேஸ்வரி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை சிவனாண்டி கொல்ல வர கார்த்திக் அவனை ஓட விட்டு சாமுண்டீஸ்வரியை காப்பாற்றிய நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்ததும் செங்கல் சூளையில் நடந்த விஷயத்தை சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் கோவிலில் ஒரு முறை உங்களை கொல்ல வந்தாங்க.. திரும்பவும் ஒரு முறை கொல்ல வந்தாங்க..

எதுக்கு இப்படி பண்றாங்க எனக்கு தெரிந்தாக வேண்டும் என்று கேட்கிறான். 
சாமுண்டீஸ்வரி உனக்கு எதுக்கு சொல்லணும்? நீ இந்த வீட்டோட ட்ரைவர் தானே என்று சொல்ல கார்த்திக் நான் தான் உங்களை காப்பாத்தி இருக்கேன். யார் பக்கம் என்ன நியாயம் இருக்குனு நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல சாமுண்டேஸ்வரி அவனை ஒரு ரூமுக்குள் அழைத்து செல்கிறாள். ரூமுக்குள் அழைத்து சென்றதும் கார்த்திக் பல கேள்விகளை முன் வைக்க சாமுண்டீஸ்வரி காரணம் சொல்ல தொடங்குகிறாள்.

பிளாஷ்கட் ஓப்பனாக சிவகாமி (சாமுண்டேஸ்வரியின் அம்மா) என்பவர் பிரசவ வலியில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சாமுண்டேஸ்வரி உட்பட 3 ஏற்கனவே மகள்கள் உள்ள நிலையில் சிவகாமியின் கணவர் இந்த முறை ஆண் பிள்ளை பிறக்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் மருத்துவச்சி வெளியே வந்து பெண் குழந்தை பிறந்து இருப்பதாக சொல்ல கடுப்பாகும் சிவகாமியின் கணவர் குழந்தையை தூக்கி வீசி கொன்று விட்டு வீட்டையும் கொளுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment