Advertisment

அம்மாவை கடத்திய ரவுடிகள்... மனைவி கழுத்தில் கத்தி வைத்த கணவன் : அடுத்து என்ன நடக்கும்?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamils seria

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கடத்தப்படும் அபிராமி.. காயப்படும் தீபா, கார்த்திக் செய்யப் போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலை நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு அபிராமி குறித்த தகவல் தெரிய வந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று, கார்த்திக் கோவிலை நெருங்கும் நேரத்தில் அபிராமியை ரவுடிகள் கடத்தி விடுகின்றனர். உடனே கார்த்திக் வண்டி நம்பர் நோட் பண்ணி போலீசுக்கு தகவல் கொடுக்க கார்த்தியும் அபிராமியை தேடத் தொடங்குகிறான்.

இதற்கிடையில் கையில் காயம் ஏற்பட அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்கிறான் கார்த்திக். பிறகு போலீஸ் கார்த்திக்கு போன் போட்டு ரவுடிகள் இதை ஏரியாவை விட்டு தாண்டி இருக்க வாய்ப்புள்ள இங்கதான் எங்கேயாச்சும் இருக்கணும் சீக்கிரம் தேடி கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லி ஃபோனை வைக்கின்றனர்.

மறுபக்கம் ரவுடிகள் அபிராமியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்க இங்கே தீபா அபிராமி அத்தையை இங்கதான் பக்கத்துல எங்கயாச்சும் மறைத்து வைத்திருக்கணும் ஏதாச்சு குடோன்களில் தேடிப் பார்க்கலாம் என்று சொல்ல போலிஸ், கார்த்திக், தீபா என எல்லோரும் கிளம்பி செல்கின்றனர். போலீஸ் உடன் கார்த்திக் தீபா வருவதை பார்த்த ரவுடிகள் அபிராமியை அங்கிருந்து பொருட்களை வைத்து மூடி வைக்கின்றனர்.

கார்த்திக் குடோனுக்குள் நுழைந்து அபிராமி தேடி பார்க்க எங்கும் யாரும் இல்லாததால் குழப்பம் அடைகிறான். இந்த நேரத்தில் கண் வழிக்கும் அபிராமி கார்த்திக்கு எப்படியாவது தான் இங்கே இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்கிறாள். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வெளியே வரும்போது அபிராமி பக்கத்தில் இருந்த ஒரு பொருள் கீழே விழுகிறது. இந்த சத்தத்தைக் கேட்டு கார்த்திக் அபிராமியை தேடி கண்டு பிடிப்பானா இல்லையா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

அம்பலமாகும் சௌந்தரபாண்டி திட்டம், அறிவாலோடு கிளம்பிய சண்முகம், முத்துப்பாண்டி கொடுத்த ட்விஸ்ட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி கனியை சந்தித்து பேச, ரத்னா அவளை திட்டி அனுப்ப சௌந்தரபாண்டி அவர்களுடன் இருப்பதை பார்த்த நிலையில் இன்று, விஷயம் அறிந்த சண்முகம் ஆவேசமாக ஸ்கூலுக்கு கிளம்பி வர கனி பயந்து கிடக்க அவளை வீட்டிற்கு அழைத்து செல்கிறான், வைகுண்டம் விபூதி வைத்து விட்டு ஒன்னும் ஆகாது என்று ஆறுதல் சொல்கிறார்.

இதனையடுத்து ரத்னா பரணியை கூப்பிட்டு இதுக்கெல்லாம் காரணம் உங்க அப்பா சௌந்தரபாண்டி தான் என்ற உண்மையை உடைக்கிறாள். ஆமாம், முத்துப்பாண்டி சௌந்தரபாண்டினு ரெண்டு பேருமே அவங்க கூட இருந்தாங்க. எல்லாரும் ஒரே காரில் தான் கிளம்பி போனாங்க என்று சொல்ல இதை சண்முகம் கேட்டு விடுகிறான். இதனால் அவன் பயங்கர கோபத்துடன் கையில் அரிவாளை எடுத்து கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வர பரணியும் உடன் வருகிறாள்.

சண்முகம் வருவதை பார்த்து சௌந்தரபாண்டி ஓடி ஒளிய முயற்சி செய்ய பாண்டியம்மா குறுக்கே வந்து சண்முகத்தை எதிர்க்க பொம்பளையா இருக்கியேனு உன் மேல கை வைக்காமல் இருக்கேன் என்று சொல்ல அவள் நான் பொம்பளைக்கு பொம்பள, ஆம்பளைக்கு ஆம்பள என்ற டைலாக் பேச பரணி பளாரென ஒரு அறையை விட்டு நீ வெட்டுடா எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம் என்று சொன்னதும் சௌந்தரபாண்டி ரூமுக்குள் ஓடி ஒளிகிறார்.

சண்முகம் கதவை எட்டி எட்டி உதைக்க சௌந்தரபாண்டி உள்ளேயே இருக்க மண்ணெண்ணையை ஊற்றி பத்த வைக்க போவதாக மரண பயத்தை காட்டுகிறான், இதனால் சௌந்தரபாண்டி பாக்கியம் என்ன காப்பாத்து டி உன் தாலிக்கே ஆபத்து என்று சொல்லி சத்தம் போட பாக்கியம் நீ கொளுத்து டா நான் பார்த்துக்கறேன் என்று ஷாக் கொடுக்கிறாள்.

இதனையடுத்து சௌந்தரபாண்டி முத்துபாண்டிக்கு போனை போட்டு விஷயத்தை சொல்ல அவன் பதறியடித்து ஓடி வருகிறான். வீட்டையே கொளுத்துறேன் என்று சண்முகம் சொல்ல சௌந்தரபாண்டி பயத்தில் வெளியே ஓடி வர கழுத்தில் அரிவாளை வைத்து மடக்கி பிடிக்கிறான் சண்முகம். இதே நேரத்தில் வீட்டுக்கு வந்த முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் கத்தியை வைத்து சண்முகத்தை மிரட்டுகிறான்.

எதிர்பாராத ட்விஸ்ட்டாக இசக்கி என்னை பத்தி கவலைப்படாதே அண்ணே, அவனை வெட்டு என்று முத்துபாண்டியை கையை இழுத்து தனது கழுத்தை இறுக்க முத்துப்பாண்டி அதிர்ச்சி ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

சுடரை வளைத்து பிடித்த வேலு.. எழிலை விரட்டி விடும் மனோகரி, நடக்க போவது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சுடர் காய்ச்சலில் தவிக்க எழில் அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து பார்த்து கொண்ட நிலையில் இன்று, மறுநாள் காலையிலும் சுடருக்கு காய்ச்சல் குறையாததால் எழில் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறான், இதை சமையல்காரி செல்வி பார்த்து விடுகிறாள். உடனே அவள் மனோகரியிடம் விஷயத்தை சொல்ல அவள் டென்சன் ஆகிறாள்.

ஹாஸ்ப்பிட்டலுக்கு வந்த எழில் சுடருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை பக்கத்தில் இருந்தே பார்த்து கொள்கிறான், சுடர் காய்ச்சலில் பயப்பட அவளை பக்கத்தில் எழில் பயப்படாதீங்க தமிழ் நான் பக்கத்தில் தான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். மறுபக்கம் வேலு சுடரை தேடி ஹாஸ்பிடலுக்கு வர முடிவெடுக்கிறான்.

அடுத்ததாக மனோகரி ஹாஸ்பிடலுக்கு வந்து எழிலிடம் நீங்க போங்க எழில் நான் சுடரை பார்த்துக்கறேன் என்று பேசி அவனை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள். எழில் வெளியேறியதும் மனோகரி சுடரிடம் சென்று அதான் காய்ச்சல் போய்டுச்சுல நீயும் கிளம்பு என துரத்தி விடுகிறாள்.

இதையடுத்து சுடர் வீட்டிற்கு கிளம்பி வர வேலு ஹாஸ்பிடலுக்கு வர சுடரை பார்த்து விடுகிறான், உடனே அவளை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment