Advertisment

தானாக வந்து தலையை கொடுத்த வில்லி: அம்மாவை காப்பாற்றுவாரா ஹீரோ; ஜீ தமிழ் சீரியல் வீக் எண்ட் எபிசோடு!

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் சந்தியா ராகம் சீரியலின் வீக்எண்ட் எபிசோடுகள் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial anna NJh

சூடாமணியை போட்டு தள்ள பிளான் போட்ட சௌந்தரபாண்டி.. முத்துப்பாண்டி வைத்த செக்மேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணியின் பரோலை நீட்டிப்பதாக சண்முகமும் பரணியும் முத்துபாண்டியிடம் உதவி கேட்க அவனும் கையெழுத்து போட்டு தர முடிவெடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

முத்துப்பாண்டி கையெழுத்து போட்டு தருவதோடு அடுத்த 10 நாளுக்கு அத்தையை பத்திரமாக பார்த்துக்கோங்க என்று சொல்ல இதை கேட்ட சௌந்தரபாண்டி சூடாமணி ஜெயிலுக்கு செல்வதற்குள் அவளை போட்டு தள்ள முடிவெடுக்கிறான். சனியன் என்ன பண்ண போறீங்க? ஜெயிலுக்குள் இருக்கும் போது என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறான்.

பிறகு சௌந்தரபாண்டி ஏ. கே. எஸ் அண்ணாச்சியை வர வைத்து சூடாமணியை தீர்த்து கட்ட சொல்கிறார், அதோடு நான் வெளியில் வரணும் அதுக்கு சாட்சி சொல்ல சனியன் கோர்ட்-க்கு வர கூடாது, கோர்ட்க்கு அழைத்து செல்லும் வழியில் அவனை கடத்திடு என்றும் கட்டளையிடுகிறார்.

சண்முகத்திற்கு ஏ.கே.எஸ் அண்ணாச்சி மீது சந்தேகம் வந்து அவனை எச்சரிக்க என் இடத்துக்கு வந்து என்னையே மிரட்டுறியா என்று கோபப்பட ஷண்முகம் அவனை அடிக்க பாய பரணி தடுத்து நிறுத்தி அவனை முத்துபாண்டியிடம் ஒப்படைக்கலாம் என்று சொல்கிறாள்.

பிறகு முத்துப்பாண்டி ஏ.கே.எஸ் அண்ணாச்சியை விசாரிக்க அவர் சௌந்தரபாண்டி சொன்ன விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை திட்டுகிறான், சனியனும் என்னையே கடத்த சொல்லிடீங்களே என்று சௌந்தரபாண்டி மீது கோபம் கொள்கிறான். இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு உருவாகிறது. அடுத்து முத்துப்பாண்டி மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வைத்து சௌந்தரபாண்டி அடுத்த 15 நாள்களுக்கு ஜாமினில் வெளிவராதபடி செய்கிறான்.

இங்கே சண்முகம் அம்மா ஜெயிலுக்குள் செல்வதற்குள் திட்டமிட்டபடி ரத்னாவின் கல்யாணத்தை முடிக்க முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவுக்கு போட்டோ ஸ்கெட்ச்.. வான்டட்டாக வந்து சிக்கிய ரம்யா.. கார்த்திக் கொடுத்த ஷாக்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ரம்யா மண்டபத்திற்கு வந்ததும் மீனாட்சி மற்றும் மைதிலி ரமேஷ்க்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று ரமேஷ் என் ஆளு தனியா இருக்கா என்று சொல்லி மண்டபத்திற்கு வந்து ரம்யாவை சந்தித்து பேசி அவளை கடுப்பாக்குகிறான்.

மறு பக்கம் தீபா சவால் விட்டபடி கார்த்திக் தனது மனதில் இருக்கும் காதலை சொல்ல வைக்க முயற்சி செய்கிறாள். மைதிலி கார்த்தியை கட்டிப்பிடி என்று சொல்ல தீபாவும் அவனை கட்டி பிடிக்க செல்ல கார்த்திக் விலகி சென்று விட இந்த முயற்சி தோல்வி அடைகிறது. அதை தொடர்ந்து மீனாட்சி கரண்ட் ஷாக் அடிப்பது போல நடி கார்த்திக் உனக்கு முதலுதவி தருவதற்காக முத்தம் கொடுப்பான் என்று ஐடியா கொடுக்கிறாள்.

அதன்படி தீபாவும் கார்த்திக் ரூமுக்கு சென்று துணியை அயர்ன் பண்ணுவது போல ஆக்சன் செய்து கரண்ட் ஷாக் அடிப்பது போல மயங்கி விழுகிறாள். ஆனால் தீபாவின் நடிப்பை புரிந்து கொண்ட கார்த்திக் அவளை கண்டு கொள்ளாமல் ரூமை விட்டு வெளியே வந்து விடுகிறான். வெளியே வந்தும் தீபா மயங்கி கிடப்பது போலவே நடிக்க கார்த்திக் தண்ணீர் அடித்து சென்று தவித்து அவளை எழுப்பி உங்களோட பிளான் எனக்கு புரிஞ்சு போச்சு என்று சொல்கிறான்.

தீபாவும் உங்களை காதலை சொல்ல வைக்கத்தான் இப்படி முயற்சி செய்தேன் என்று சொல்லி பல்பு வாங்குகிறாள். அடுத்து ரூபஸ்ரீ அஞ்சு கொலை ஆறுமுகத்தை கூப்பிட்டு இவ தான் தீபா இவளை போட்டு தள்ளனும் என்று தீபாவை கை காட்ட அந்த சமயம் பார்த்து ரம்யா அங்கு வந்து நிற்க ரவுடி ரம்யாவை தான் கொள்ளவேண்டும் என நினைத்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய பத்மா குடும்பம்.. அவமானப்படுத்திய லிங்கம், அடுத்து நடக்க போவது என்ன? சந்தியா ராகம் வீகெண்ட் எபிசோட் அப்டேட் 

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவராமன் பத்மாவை பார்த்து நீ கல்யாணமாகி போன வீட்டை விட்டுட்டு இங்கேயே வந்துட்டு, அண்ணி உங்களை நல்லபடியாக தானே பார்த்துக்கிட்டாங்க என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பத்மா நீ இப்படி சொன்னதுக்கு அப்புறம் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கிளம்ப ரகுராம் தடுக்க முயற்சிக்க பத்மா இனி இந்த வீட்டில் நான் இருக்கனும், இல்ல அந்த மாயா இருக்கணும் என்று சொல்ல ரகுராம் தப்பு பண்ணவனுக்கு தான் தண்டனை கொடுக்கணும் என்று சொன்னதும் பத்மா மூட்டையை கட்டி கொண்டு வெளியே வருகிறாள்.

வெளியே சீனுவை பார்த்த அவள் இன்னும் ஏண்டா இங்க நின்னுட்டு இருக்க, இந்த குடும்பம் நம்மள கை விட்டுடுச்சு என்று சொல்கிறாள். சீனு ஏன் மா இப்படி பண்ற என்று கேள்வி கேட்க அம்மா உயிரோட இருக்கனும்னா என்கூட வா என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.  மறுபக்கம் ஷாரு இனிமே சீனு மாமா எனக்கு கிடைக்க மாட்டாரா என்று வருத்தப்பட லிங்கம் கொஞ்ச நாளைக்கு சொந்த காரங்க வீட்டில் இருந்திட்டு வா என்று அனுப்பி வைக்க சீனுவும் பத்மாவும் இந்த வீட்டிற்கு வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாக சொல்லி இங்கே தங்கலாமா என்று கேட்க லிங்கம் தாராளமாக தங்கிக்கோங்க என்று சொல்கிறான். அடுத்து வக்கீல் ஒருவரை சந்தித்து பத்மா, சீனு பெயரில் எவ்வளவு சொத்து இருக்கு என்று விசாரிக்க ஒண்ணுமே இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறான். அடுத்து வீட்டிற்கு வந்த அவன் வந்தோமா, போனோமான்னு இல்லாமல் இன்னும் எத்தனை நாள் இங்க தங்க போறீங்க என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறான்.

பத்மா என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க என்று கேட்க உங்க பேர்ல சொத்து எதுவுமே இல்ல, அப்படி இருக்கும் போது உங்க பையனுக்கு என் பொண்ணை எப்படி கட்டி கொடுக்க முடியும் என்று அதிர்ச்சி கொடுக்க பத்மா ரகுராம் மீது பஞ்சாயத்தில் பிராது கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment