துப்பாக்கி வைத்து மாஸ் காட்டும் கெளதம்: சபதத்தை நிறைவேற்றுவாரா அண்ணா?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
anaksmh

சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக்.. சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவில் திருவிழாவில் சாமுண்டேஸ்வரி தரப்பில் சிலம்பாட்டம் ஆட இருந்த நபர் வராமல் போன நிலையில் இன்று, சாமுண்டேஸ்வரி தரப்பில் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்கு ஆதரவாக போட்டியில் பங்கேற்று ஜெயித்தால் 15 பவுன் ஜெயினை பரிசாக கொடுப்பதாக அறிவிக்கிறான்.

இந்நிலையில் கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டியை ஓட விடுகிறான். இதையடுத்து சாமுண்டேஸ்வரி புவனேஸ்வரியை கூப்பிட்டு பரிசை கொடுக்க அவன் நான் இந்த பரிசுக்காக இந்த போட்டியில் கலந்துக்கல என பதிலடி கொடுக்கிறான். நீங்க யாரும் ஆம்பளையே இல்லையா என கேட்டதால் தான் கலந்துக்கிட்டேன். எனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று சொல்லி குச்சியில் ஜெயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீசுகிறாள்.

அப்போது அந்த வழியாக வந்த நாயகி ரேவதி கழுத்தில் விழுகிறது. இதை கவனிக்காத கார்த்திக் மீசையை முறுக்கி விட்டபடி கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

பரணி எடுத்த சபதம்.. ரத்னாவை அதிர வைத்த வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியர்கள் கொளுத்திடுவேன் என மிரட்டி லெட்டர் எழுதிய நிலையில் இன்று, இசக்கி பாக்கியத்துடன் இனிமே எங்க வீட்டுல இருக்க வேண்டாம் அண்ணன் கிட்ட சொல்லி வீட்டை விட்டு போயிடலாம் என்று சொல்கிறாள். பாக்கியம் நாம் எதுக்கு வீட்டை விட்டு போகணும் இந்த வீடு என் பொண்ணோட பேர்ல தான் இருக்கு. சாப்பாட்டுல கல் இருந்தால் கல்லை தூக்கி போட்டுட்டு சாப்பிடுவோம் அப்படித்தான் உங்களை எல்லாம் கண்டுக்க கூடாது என சொல்கிறாள். 

அதை தொடர்ந்து  வெங்கடேஷ் ரத்னாவிடம் ஸ்கூலை தனது குழந்தைக்கு எழுதி கொடுக்க சொல்ல ரத்னா முடியாது என மறுக்க வெங்கடேஷ் எழுதிக் கொடுக்கலைனா வீட்டை விட்டு துரத்து விடுவேன் உனக்கு போறதுக்கு இடம் இல்லை என மிரட்டுகிறான். இன்னொரு பக்கம் சிவபாலன் அக்காவுக்கு விஷயத்தை சொல்லிவிடலாம் என்று சொல்ல பாக்கியம் அவளுக்கு தான் விஷயம் தெரிய கூடாது என தடுத்து விடுகிறாள்.

அதன் பிறகு சண்முகம் கீழே போகும் பரணி பெட்டிலும் படுத்துக் கொண்டிருக்கும் ஏன் அப்பாகிட்ட சபதம் விட்டா மட்டும் போதாது அதுல ஜெயிச்சு காட்டணும். போட்டியில ஜெயிக்கணும்னா என் அப்பாவோட வேட்டி உருவுனா மட்டும் போதாது என்று ரொமான்ஸாக பேச சண்முகத்தை நெருங்க அவன் கந்த சஷ்டி விரதம் என தள்ளி போகிறான்.

உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரேன்னு பாரு என பரணி சபதம் எடுக்க மறுநாள் காலையில் சண்முகத்தை கட்டிபிடித்தபடி கீழே படுத்து இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விளையாட்டு காட்டிய கிரண்.. ரியல் துப்பாக்கியை நீட்டி ஓட விட்ட கௌதம் - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் எல்லாருக்கும் தீபாவளி கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் செய்த நிலையில் இன்று, வெற்றிலை பாக்கு போட்டு முடித்ததும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட தயாராகுகின்றனர். ஆனால் கௌதம் பட்டாசு என்றால் பயம் என்று சொல்ல எல்லாரும் அவளை கிண்டலடித்து பாட்டாசு வெடிக்க அழைத்து வருகின்றனர்.

கௌதம் மிளகாய் பட்டாசை வெடிக்க இதை பார்த்த கிரண் என்ன சார் குழந்தைகள் மாதிரி புஷ்வாணம் வெடிச்சிட்டு இருக்கீங்க.. பட்டாசுனா இப்படி வெடிக்கும் என்று பாம் ஒன்றை கொளுத்தி போட கௌதம் சத்தம் கேட்டு பயந்து ஓடுகிறான். நமக்கு எதுக்கு இதெல்லாம்.. வா போலாம் என்று சந்தோஷை மேலே கூப்பிட கிரண் இந்தாங்க சார் இதை வெடிங்க.. ஒண்ணுமே ஆகாது என்று சொல்லி பொம்மை துப்பாக்கியை எடுத்து கொடுத்து கிண்டல் அடிக்கிறான்.

இதனால் கடுப்பான கௌதம் தனது பேக்கில் இருந்து ரியல் துப்பாக்கியை வெளியே எடுத்து மேல் நோக்கி சுட்ட பிறகு கிரணை நோக்கி துப்பாக்கியை நீட்ட அவன் பயந்து போய் மனைவி பின்னாடி ஓடி ஒளிகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: