Advertisment

மாமியாரை தள்ளிவிட்ட மருமகள்... மச்சானை மடக்கிய மாமா : அடுத்து என்ன நடக்குமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடுகள் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee ta

கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய்

சௌந்தரபாண்டி ஸ்டைலியேயே ஷண்முகம் வைத்த ஆப்பு.. இது வேற மாதிரி ட்விஸ்ட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் அரிவாளை தூக்கிய சண்முகத்தை அமைதிப்படுத்தும் பரணி எதையும் யோசித்து செய்யணும் என்று சொல்லிய நிலையில் இன்று, பிரியாணி சாப்பிட்டு படுத்து தூங்கிய சண்முகம் திடீரென எழுந்து எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிடுச்சு என்று சொல்கிறான். மறுநாள் பஞ்சாயத்து ஆட்களை சந்தித்து என் தங்கச்சி இசக்கி சௌந்தரபாண்டி வீட்டில சந்தோசமாக இருக்காளா இல்லையானு நான் தெரிஞ்சிக்கணும் என்று முறையிடுகிறான்.

அடுத்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வர சனியன் ஏற்கனவே சண்முகம் வரும் விஷயத்தை சொல்லி விடுகிறான், பஞ்சாயத்து ஆட்களுடன் வரும் சண்முகம் என் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் விருந்துக்கு கூப்பிட வந்திருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி அதெல்லாம் வர முடியாது என்று சொல்கிறான். சண்முகம் பஞ்சாயத்து ஆட்களிடம் முத்துப்பாண்டி காலில் விழுந்து தெரியாமல் தாலி கட்டி விட்டதாக மன்னிப்பு கேட்ட விஷயங்களை சொல்லி முறையிடுகிறான்.

இதையடுத்து பஞ்சாயத்து ஆட்கள் முத்துப்பாண்டி விருந்துக்கு போய் தான் ஆகணும் என்று சொல்ல சௌந்தரபாண்டியும் இப்போ நீ போகலனா தப்பா போயிரும் என்று சொல்ல அவன் யூனிபார்மில் கிளம்பி வருகிறான். சண்முகம் நீங்க என்ன வேலைக்கா போறீங்க? விருந்துக்கு தானே வரீங்க வேட்டி சட்டையில் வாங்க என்று சொல்லி ட்ரெஸ்ஸை மாற்ற வைக்கிறான். அதுமட்டுமின்றி இருவரையும் ஊர்வலமாக அழைத்து செல்கிறான்,

எல்லாரிடமும் இசக்கி புருஷனை விருந்துக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி சொல்லி முத்துபாண்டியை வெறுப்பேற்றுகிறான். வீட்டிற்கு வந்ததும் ஆரத்தி எடுத்து ஒரு சிறப்பு விருந்தினர் வர வேண்டி இருக்கு என்று காக்க வைத்து வெங்கடேஷனை வீட்டிற்கு வர வைக்க முத்துப்பாண்டி பயங்கர காண்டாகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீனாட்சி தாலியை வீசி எறிந்த ரியா.. அபிராமிக்காக தீபா விட்ட அறை –

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மில்லில் மிஷின் ஓடாதது அறிந்து அவனே சரி செய்த நிலையில் இன்று கார்த்திக் மிஷினை சரி செய்ததும் ஆனந்த் இன்ஜினியருக்கு போன் போட்டு நீ தான் மிஷினை ரெடி பண்ணியா என்று கேட்க அவன் இல்லை என்று சொல்ல வெளியே வந்து பார்க்க மேனேஜர் கார்த்திக் சார் தான் மிஷினை ரெடி பண்ணாரு என்று சொல்ல ஆனந்த் ஷாக் ஆகிறான்.

மறுபக்கம் வீட்டில் ஐஸ்வர்யா ரியாவை கூப்பிட்டு நீ முதலில் அபிராமி மனசில் இடம் பிடிக்கணும், அவங்க வாயால் நீ தான் என் மருமகள் என்று சொல்லணும். அதுக்கான வேலைகளை நீ செய்யணும் என்று சொல்கிறாள். மேலும் பூஜை ரூமுக்கு சென்று பூஜை செய்து ஆரத்தி தட்டை கொண்டு போய் அபிராமி கிட்ட நீட்டுனா அவங்களே உன்னை மருமகளா ஏற்று கிட்டு கட்டி தழுவுவாங்க என்று ஐடியா கொடுக்கிறாள்.

இதையடுத்து ரியா பூஜையறைக்குள் செல்ல மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருக்க ரியா மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீச அபிராமி அதை பார்த்து டென்ஷனாகிறாள். எப்படி நீ பூஜா ரூமுக்கு வரலாம்? அந்த தாலியை தொடலாம் என்று ஆவேசப்பட்டு பேச ரியா நான் தான் உங்க மூத்த மருமகள் என்று எதிர்த்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ரியா அபிராமியை பிடித்து தள்ளி விடுகிறாள்.

கீழே விழ அபிராமியை தீபா தாங்கி பிடித்து அத்தை மேலே கையை வைக்கிறியா என்று ரியாவை அறைகிறாள். பிறகு ஐஸ்வர்யாவை சந்தித்து நடந்ததை சொல்லும் ரியா இதை ஆனந்திடம் சொல்ல போவதாக சொல்ல ஆனந்துக்கு சொன்னீனா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆச்சுனு கேட்பான். நீ அபிராமியை பிடித்து தள்ளுனது தெரிந்தா அம்மா பாசத்தில் உன்னையே வெளியே போக சொல்லிடுவான் என்று தடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழிலின் காதல் குறித்து அறியும் சுடர்.. லவ் டிராக்கில் நினைத்தேன் வந்தாய்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மனோகரி குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன் என்று வார்த்தையை விட கனகவல்லி சுடரை எழிலுடன் அனுப்பி வைத்த நிலையில் இன்று எழில் மற்றும் சுடர் என இருவரும் ஆசிரமத்திற்கு வர பிள்ளைகள் எல்லோரும் ஓடிவந்து எழிலை வரவேற்கின்றனர். பிறகு எழிலுக்கு இந்து உடனான ஞாபகங்கள் வந்து போக அவன் பீல் ஆகிறான். பிறகு பிள்ளைகள் எல்லோரையும் சாப்பிட கூப்பிட எழில் வெறும் வெஜிடபிள்ஸ் தான் போடுவாரு. அதுக்கு நம்ப ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடலாம் என்று சொல்கின்றனர்.

சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க என்று பிள்ளைகளை உட்கார வைத்து சுடர் சாப்பாட்டை பரிமாற எல்லோரும் ருசித்து சாப்பிடுகின்றனர். அடுத்ததாக எதில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க ஆசிரமத்தில் இருக்கும் சிஸ்டர் எழில் இந்து பற்றி சுடரிடம் பேசுகிறார். சுடர் அவங்களுடைய காதல் எப்படி ஆரம்பித்தது என்று கேட்க பிளாஸ்கட் ஓப்பன் ஆகிறது. எழில் இந்துவை உயிருக்கு உயிராக நேசித்தது தெரிய வருகிறது.

பணக்காரங்க பாதியிலேயே விட்டு போயிடுவாங்க ஆனால் எழில் அப்படி இல்லை என்று சொல்கிறார். ஃபிளாஷ் கட்டில் எழில் இந்துவிடம் நாளைக்கு ரெடியா இரு என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment