கணவருக்கு வார்னிங் கொடுத்த மனைவி : அப்பாவை எதிர்க்க துணிந்த மகள் ; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Nina KP
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ரம்யாவால் கார்த்தியுடன் வந்த சண்டை.. தீபா கொடுத்த வார்னிங்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவை கூட்டிக்கொண்டு பைக்கில் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு சென்ற நிலையில் இன்று, ரம்யா மற்றும் கார்த்திக் ஜோடியாக பைக்கில் செல்வதை பார்த்த ஒரு பெண்மணி தீபாவுக்கு தகவல் கொடுக்க தீபா அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். அடுத்ததாக கார்த்திக், ரம்யா ஆகியோர் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு வர ஆனந்த் டெண்டர் நமக்குத்தான் கிடைக்கும் என்று ஆவலோடு இருக்க அது ரம்யா கைக்கு செல்கிறது.

Advertisment

இதனால் ஆன குழப்பம் அடைய ஃபிளாஷ் கட்டில் பி.ஏ ஆனந்திடம் பேசிய விஷயத்தை கேட்டு ரம்யாவிடம் சென்று அமௌன்ட்டை மாற்றிய தெரிய வருகிறது. அடுத்ததாக ஆனந்த் என்ன கார்த்தி புது கம்பெனிக்கு விசுவாசமா வேலை செய்து போல என்று கேள்வி கேட்க ஆமா நான் வேலை செய்கிற கம்பெனிக்கு விசுவாசமா இருக்கேன். நேர்மையா வேலை செய். இப்படி குறுக்கு வழியில முன்னேறினா அது நிலைக்காது என்று அறிவுரை சொல்கிறான்.

அதன் பிறகு கார்த்திக் வீட்டுக்கு வர தீபா நீங்க ஒரு பொண்ணு கூட பைக்ல போனீங்களா என்று கேட்க அவனின் ஆமாம் என்று சொல்ல தீபா கோபப்படுகிறாள். கார்த்திக் என்னோட பாஸ் தான் கூட்டிட்டு போனேன் கார் ரிப்பேர் ஆயிடுச்சு. முக்கியமா போக வேண்டிய டெண்டர் மீட்டிங். அதனால் பைக்கில் கூட்டிட்டு போனேன் என்று சொல்கிறான். இதைக் கேட்ட தீபா இதெல்லாம் சரிதான் ஆனால் இனி யாரையும் நீங்க பைக்ல கூட்டிட்டு போகக்கூடாது.

உங்க கூட பைக்ல உட்காரும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு என்று கண்டிஷன் போட கார்த்திக்கு அதற்கு சம்மதம் தெரிவித்து பிரச்சனையை தீர்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

சுடரோடு சேர்த்து 4 கோடி.. வேலுவிடம் டீல் பேசி முடித்த மனோகரி, நடந்தது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்து ஆசிரமத்திற்கு காரில் செல்ல லாரி ஒன்று துரத்த இன்று, இந்துவை பாலோ பண்ணும் லாரி கார் மீது மோதி ஏற்படும் விபத்தில் இந்து உயிரிழக்கிறாள். வேலு இந்த பிளாஷ்கட் கதையை சொல்லி முடித்ததும் மனோகரி பயந்து நடுங்குவது போல் நடிக்கிறாள்.

இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லிடாத என்று கெஞ்சுவது போல் கெஞ்சி கடைசியில் சிரித்து உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க என்று சொல்கிறாள். அதுமட்டுமின்றி பதிலுக்கு வேலு ஸ்டேஷனில் வைத்து ஒருவனை கொன்ற விஷயத்தை உடைக்கிறாள். அடுத்ததாக உனக்கு தேவை சுடர், எனக்கு தேவை வேலு, நான் சொல்ற மாதிரி செய்தால் சுடரும் உனக்கு கிடைப்பா கூடவே நாலு கோடி ரூபாய் பணமும் கிடைக்கும் என்று டீல் பேசி வேலுவை தனது வழிக்கு கொண்டு வருகிறாள்.

அதனை தொடர்ந்து எழிலை டிஸ்ஜார் செய்து வீட்டிற்கு கூட்டி வர மனோகரி அவனை கவனித்து கொள்கிறாள். சுடர் எழிலுக்காக சமைத்து நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் காவியாவிடம் உனக்கு ஹெட் செட் வாங்கி தரேன் என்று ஐஸ் வைத்து அவள் மூலமாக எழிலுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்க வைக்கிறாள். 

அதன் பிறகு ஹாம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் கவினிடம் உன்னுடைய ஹாம் ஒர்க் எல்லாத்தையும் முடித்து தரேன் அப்பாவுக்கு மாத்திரை கொடுத்துட்டு வா என்று சொல்ல அவன் நோ சொல்ல சுடர் ப்ளீஸ் டா என்று கெஞ்சுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உடையும் உண்மைகள்.. பிளாஷ்பேக்கை ஓபன் செய்த சூடாமணி

அண்ணாசீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியை ரவுடிகள் கொல்ல வர முருகன் வேடத்தில் வந்தவர்களால் அவனது உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று ஷண்முகம் பரணியை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தன்னுடைய அம்மா சூடாமணியை காட்ட அத்தையை பார்த்ததும் பரணி அவளை கட்டியணைத்து கண்ணீர் விடுகிறாள். அதன் பிறகு நீங்க ஏன் ஜெயிலுக்கு வந்தீங்க என்று கேட்க சூடாமணி பிளாஷ்பேக் கதையை சொல்ல தயாராகிறாள்.

இதனை தொடர்ந்து பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது. சூடாமணி முருகன் கோவில் வாசலில் பூ கடை வைத்து பிழப்பை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் முதல் முறையாக வைகுண்டம் கோவில் தர்மகத்தாவாக பதவி ஏற்கிறார். அந்த சமயத்தில் முருகனுக்காக ஒருவர் வைர நகைகளை கொண்டு வந்து அன்பளிப்பாக கொடுக்கிறார்.

சௌந்தரபாண்டி இந்த வைர நகைகளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள முடிவெடுக்கிறார். திருடனை வைத்து நகைகளை திருடி விட்டு அதற்கு மாற்றாக போலி நகைகளை வைத்து சமாளித்து விடலாம் என்று கணக்கு போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்துஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: