Advertisment

அப்பா vs மகள் தேர்தல் போட்டி : அண்ணியார் முகத்திரையை கிழிப்பாரா நாயகன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் சந்தியாராகம் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil ams

சௌந்தரபாண்டியை வைத்து காய் நகர்த்தும் பரணி.. சூடு பிடிக்கும் ஓட்டு சேகரிப்பு

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் பரணியை காப்பாற்றி சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட நிலையில் இன்று, சண்முகமும் பரணியும் கேரளாவுக்கு வந்து சண்முகத்தின் அம்மா சூடாமணியை சந்திக்கின்றனர். பரணி தேர்தலில் நிற்கும் விஷயம் அறிந்த சூடாமணி நீதான் என் மருமக என்று கட்டிப்பிடித்து ஆற தழுவுகிறாள். பிறகு சண்முகத்திடம் நியதிக்கு தேர்தல் மாட்டேன் என்று சொன்னேன் என்று கோபப்படுகிறாள்.

மத்ததெல்லாம் மாமாவுக்காக விட்டுக்கொடுக்க சொல்லி கேட்டுச்சு அத்தை எனக்கு இன்னொரு அம்மா மாதிரி என்று சொல்ல சூடாமணி பாக்கியத்துக்கு சௌந்தரபாண்டியன் தெரியாது என்று சொல்கிறாள். பிறகு சண்முகம் பரணியை ஜெயிக்க வச்சு அந்த சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி மற்றும் பாண்டியம்மாவுக்கு பாடம் புகட்டுவேன் என்று சொல்கிறான்.

அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த பரணி சண்முகத்தின் தங்கைகளை கூட்டி வச்சு ஓட்டு கேட்க திட்டமிடுகிறான். சௌந்தரபாண்டி வீட்ல அவருக்கு ஆதரவா அவங்க வீட்டு பெண்களே இல்லன்னு புரிய வைத்து ஓட்டு கேட்கணும் என்று முடிவு எடுக்கிறாள். பிறகு பாக்கியம் மற்றும் இசக்கி ஆகியோரையும் வர வைத்து சண்முகத்தின் தங்கைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு வீட்டுக்குச் சென்று சமையல் செய்து கொடுத்து யாருக்கு ஓட்டு போடுவீங்க என்று கேட்க உங்க அப்பாவுக்குத் தான் என்று அந்த குடும்பத்தார் சொல்ல பரணி என் அப்பாவே எனக்குத்தான் ஓட்டு போடுவாரு என்று சொல்கிறாள்.

பிறகு பாக்கியம் சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு உங்களுக்காக ஓட்டு கேட்க தான் வந்திருக்கேன் என்று சொல்ல சௌந்தரபாண்டியும் அதை நம்பி என் பொண்டாட்டி சொல்ற மாதிரியே ஓட்டு போட்டு விடுங்க என்று சொல்கிறார். பிறகு இன்னொரு வீட்டுக்குச் சென்று ஓட்டு கேட்க போக அப்போது அந்த வீட்டுக்கு குழந்தைக்கு உடம்புக்கு முடியாமல் சென்றுவிட பரணி ஒரு டாக்டராக குழந்தைக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து காப்பாற்றுகிறாள். இதனால் அந்த குடும்பத்தினர் உங்களுக்கு தான் ஓட்டு போடுவோம் என்று வாக்கு கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரியாவை விரட்டியடிக்க கார்த்திக் போட்ட பிளான்.. ரம்யா தப்பிக்க போவது எப்படி?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரம்யாவுக்கு போன் செய்த் பங்ஷனுக்கு கண்டிப்பா வரணும் என்று அழைத்திருந்த நிலையில் இன்று, கார்த்திக் ரியாவின் முன்னாள் கணவர் மதுவை அழைத்து ஏதோ ஒரு திட்டத்தை சொல்கிறான். இதையடுத்து தீபா மீண்டும் ரம்யாவுக்கு போன் செய்து எங்க இருக்க? என்று விசாரிக்க வீட்டில் இருக்கும் அவள் போகலனா கார்த்திக் கிட்ட மாடிப்போம் என்று யோசித்து காரில் வந்திட்டு இருக்கேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறாள்.

அடுத்து தீபா, மீனாட்சி ஆகியோர் அபிராமியை அலங்காரம் செய்ய ரெடியாகின்றனர், அபிராமியை பார்த்து யங்காக இருப்பதாக கலாய்க்கின்றனர், கூடவே மாமாவுக்கு தான் கொஞ்சம் வயசான மாதிரி இருக்கும் என்று கலாய்க்கின்றனர், ரியா நான் ஆனந்தத்துடன் சேர்ந்து அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று சவால் விட்டு இருக்கேன், அதனால் இந்த இடத்தை விட்டு போக கூடாது என்று உறுதியாக இருக்கிறாள்.

பிறகு அபிராமிக்கு மேக்கப் போட ஒரு பியூட்டிஷியன் வர கார்த்திக் என் அம்மாவுக்கு நானே என் கையால் மேக்கப் போட்டு விடுறேன் என்று சொல்லி அவனே அபிராமிக்கு மேக்கப் போட்டு விடுகிறான். இதையடுத்து மது ரியாவுக்கு போன் செய்து நான் உன் பெயரை எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அனுமதி வாங்கி கிளம்பிய சீனு.. உண்மை அறிந்து ஷாரு செய்த சதி

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீனு மாயா மற்றும் கிஷோர் ஆகியோர் கல்யாண விஷயமாக பேச சாருவுக்கு சீனு தான் மாப்பிள்ளை இந்த விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று, இவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ச்சியாகும் ஷாரு தனது அப்பா லிங்கத்திற்கு போன் போட்டு மாயா கல்யாணம் பண்ணிக்க போறவங்க மாப்பிள்ளை சீனு தான் என்ற உண்மையை சொல்கிறாள். லிங்கம் நீ கவலைப்படாத நான் பாத்துக்குறேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.

இதையடுத்து அடுத்த நாள் காலையில் மாயா கல்யாணத்துக்கு ரெடியாகி ஜானகி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இப்போதைக்கு நீங்கதான் என்னுடைய அம்மா ஸ்தானத்தில் இருக்கீங்க என்று பேசுகிறாள். அடுத்ததாக கல்யாணத்துக்கு தயாரான சீனு பிரண்டோட கல்யாணத்துக்கு வெளியில் போவதாக சொல்லி எல்லோரிடமும் அனுமதி வாங்க சாரு கடுப்பாகிறாள். அதைத்தொடர்ந்து சீனு வீட்டை விட்டு வெளியே வர எதிரே வந்த ரவுடிகள் அவனை அடித்து கடத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment