Advertisment

உயிருடன் புதைக்கப்பட்ட சீதா... பாம்பு பயம் காட்டும் ஐஸ்வர்யா : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
Nov 16, 2023 16:07 IST
New Update
Anna Seetharam karthik

ஜீ தமிழ் : அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் ஜீ தமிழில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்திக்கை கன்பியூஸாக்கிய ஐஸ்வர்யா.. பூஜையில் அரங்கேறும் சதி வேலை

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  கார்த்திக் பூஜை குறித்து கேட்டு ஷாக்காகி அம்மாவிடம் இந்த விஷ பரீட்சை எல்லாம் வேண்டாம் என சொல்ல முடிவெடுக்கிறான். அதனை தொடர்ந்து அபிராமியிடமும் இது குறித்து பேச அங்கு வந்த ஐஸ்வர்யா என்ன தம்பி இப்போ பேக் வாங்குறீங்க? என்னை பத்தி நீங்க தப்பா சொல்லி இருக்கீங்க, இது நான் இல்லனு நிரூபிக்கணும் அதுக்கு இந்த பூஜை நடக்கணும் என உறுதியாக சொல்கிறாள்.

இதனை கேட்ட கார்த்திக் மற்றும் மைதிலி என இருவரும் குழப்பம் அடைகின்றனர், பிறகு அம்மன் ஒரு குறி சொல்லும் பெண்ணாக தோன்றி ஐஸ்வர்யாவிடம் வந்து பேச நீங்களும் அதே பூசாரி குரூப் தானே, ஏதாவது சொல்லி பணம் பறிக்க வந்திருக்கீங்களா என அவரை பேச விடாமல் துரத்தி அனுப்புகிறாள். அதனை தொடர்ந்து பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து பாம்பாட்டி ஒருவரை வர வைத்து பூஜை நடக்கும் போது பாம்பை விட்டு கார்த்தியை கடிக்க வைக்கணும் என திட்டம் தீட்டுகிறாள்.

இதன் மூலம் கார்த்திக் தான் இதுக்கெல்லாம் காரணம் என பிரச்னையை அவன் பக்கம் திசை திருப்பி தப்பிக்க கணக்கு போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

பரணிக்கு தோழிகள் கொடுத்த அதிர்ச்சி.. வைகுண்டத்திடம் சூடாமணி வாங்கிய சத்தியம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் சூடாமணி சௌந்தரபாண்டி வந்து போன விஷயத்தையும் அவனை திட்டி துரத்திய விஷயத்தையும் சொல்ல ஷண்முகம் சூப்பர் மா என்று சந்தோஷப்படுகிறான். நடந்த விஷயங்களை அறிந்த வைகுண்டம் அந்த சௌந்தரபாண்டியை கொல்லாமல் விட மாட்டேன் என கோபப்படுகிறார்.

ஆனால் சூடாமணி அவனை நீங்க ரெண்டு பேரும் எதுவும் செய்ய கூடாது, அவன் என்னுடைய கண்ணு முன்னால் தான் சாகனும், நான் வெளியே வரும் வரை நீங்க ஒன்னும் பண்ண கூடாது என்று சத்தியம் வாங்கி கொள்கிறாள். அடுத்ததாக பரணியின் தோழிகள் சிலர் சென்னையில் இருந்து அவளை பார்க்க வீட்டிற்கு வருகின்றனர். கல்யாண மண்டபத்தில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாத நிலையில் வீட்டிற்கு வந்த இந்த பெண்கள் சௌந்தரபாண்டி தேங்காய் உரித்து கொண்டிருப்பதை பார்த்து வீட்டு வேலைக்காரன் என நினைத்து பேசுகின்றனர்.

அப்போது அவர் பரணி கல்யாணமாகி சிங்கப்பூர் சென்று விட்டதாக பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார். இவர்கள் வெளியே வர எதிரே பாக்கியமும் சிவபாலனும் வர அவர்களிடம் பரணி சிங்கப்பூர் போய்ட்டாளா? என்று கேட்க பரணி இங்க தான் இருக்கா என்று சொல்கின்றனர், அவர் தான் அப்படி சொன்னதாக சௌந்தரபாண்டியை கை காட்ட பாக்கியம் நான் உங்களை அவ வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி அழைத்து செல்கிறாள்.

தோழிகளை பார்த்த பரணி ஷாக் ஆகிறாள், அவர்கள் உன் ஹஸ்பண்ட் எங்கே என கேட்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? பரணி பதில் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சீதா ராமன்:

கடைசி நொடியில் ராமுக்கு கிடைத்த ஆதாரம்.. சீதாவுக்கு நடந்தது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் மீராவுக்கு மகா மீது சந்தேகம் வந்து இதுகுறித்து கேட்டுக் கொண்டிருக்க ராமுக்கு காலையில் சீதா நீங்க எக்ஸாம் முடிச்சிட்டு வாங்க நாம சந்திக்கலாம் என்று சொல்லி லைவ் லொகேஷன் அனுப்பிய விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.

இந்த நேரத்தில் இங்கு ரவுடி ஒருவன் போனை எடுத்து ஆன் செய்துவிட சீதா இருக்கும் லொகேஷன் ராமுக்கு தெரிய வர போலீசுக்கு தகவல் கொடுத்து ராம் துரை ஆகியோர் இங்கே கிளம்பி வருகின்றனர். ரவுடிகள் எஸ்கேப் ஆகிவிட ராம் மற்றும் துரை இருவரும் அவ்விடம் முழுவதும் சீதாவை தேடுகின்றனர். ஆனாலும் சீதாவை காணாத நிலையில் திடீரென துரைக்கு சிமெண்ட் தொட்டி மீது சந்தேகம் வர ராம் என சத்தம் போடுகிறார்.

பிறகு அந்த சிமெண்ட் தொட்டிக்குள் இருந்து சீதாவை ராம் வெளியே கொண்டு வர அவள் சுய நினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் செல்கிறான். இங்கே மகா தன்னை எதிர்த்து பேசும் மீராவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
#Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment