Advertisment

எச்சரிக்கையான கார்த்தி... மருமகளை பாதுகாப்பாரா மாமியார்? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழின் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று வரும் சீதாராமன், அண்ணா, மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee amma K

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

ப்ளாப்பான ஐஸ்வர்யாவின் பிளான்.. கோவில் தீர்த்தத்தால் தீபாவுக்கு காத்திருக்கும் சிக்கல்

கார்த்திகை தீபம். சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி தீபாவிற்காக காய்ச்சிய பாலில் ஐஸ்வர்யாவின் அம்மா யாருக்கும் தெரியாமல் மாத்திரையை கலந்த நிலையில் இன்று மீனாட்சி தீபாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க அதை அவள் குடிக்க போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் பண்ண பாலை கீழே வைத்து போன் பேசுகிறாள். பிறகு போனை வைத்துவிட்டு மீண்டும் குடிக்க போகும்போது கார்த்திக் உள்ளே வந்து என்ன தீபா குடிக்கிறீங்க என்று கேட்க கோல்டா இருப்பதால் அக்கா பால் காய்ச்சி எடுத்துட்டு வந்தாங்க என்று சொல்ல நீங்க அதெல்லாம் குடிக்க வேண்டாம் என்று கார்த்திக் சொல்கிறான்.

தீபா ஏன் சார் குடிக்க வேண்டாம்னு சொல்றீங்க என்று கேட்க நீங்க பாடுறதை தடுக்கிறதுக்காக நிறைய சதி நடக்குது பால்ல ஏதாச்சும் கலந்து கூட இருக்கலாம் வேண்டாம் என்று சொல்ல மீனாட்சியின் கார்த்திக் சொல்வதில் சரிதான் என்று சொல்ல தீபா பாலை குடிக்காமல் விட்டு விடுகிறாள். இதனால் ஐஸ்வர்யாவின் பிளான் ப்ளாப் ஆகிறது. பிறகு கார்த்திக் தீபா ஆகியோர் கச்சேரிக்கு கிளம்பி அபிராமியை கூப்பிட அவள் ஐஸ்வர்யாவுடன் செக்கப் செல்வதாக சொல்கிறாள். மேலும் தன்னுடன் அருணாச்சலமும் வருவதால் அவரும் கச்சேரிக்கு வர முடியாது என சொல்லி விடுகிறாள்.

அருணை கச்சேரிக்கு கூப்பிட அவன் ஆபீஸில் முக்கியமான வேலை இருக்கிறது என்று கிளம்பிச் சென்று விட மீனாட்சியிடம் அண்ணி நீங்க வரிங்களா என்று கேட்க நான் இப்படி கண்டிப்பா வரேன் என்று சொல்ல மீனாட்சி கார்த்திக், தீபா ஆகியோர் கிளம்பி வருகின்றனர்.  கிளம்பும்போது தீபா அபிராமி மற்றும் அருணாச்சலத்துடன் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்ப அபிராமி தீபாவை கூப்பிட்டு நீ நல்லா பாடுவது எனக்கு தெரியும் ஆனால் இன்னைக்கு கோவிலில் விளக்கு போடணும் அதை மறந்துடாத என்று சொல்லி அனுப்புகிறாள்.

மறுபக்கம் கோவிலுக்கு வந்த தர்மலிங்கம் குடும்பம் முருகனிடம் தீபாவோட வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கணும், அவளுடைய ஆசை நிறைவேறனும் என்று வேண்டி தீர்த்தத்தை வாங்க இதை நோட்டமிட்ட ரூபஸ்ரீ தர்மலிங்கத்துக்கு தெரியாமல் அந்த தீர்த்தத்தில் மயக்க மாத்திரையை கலந்து விடுகிறாள். கோவில் தீர்த்தம் என்பதால் தீபா மறுப்பு தெரிவிக்காமல் கண்டிப்பாக குடிப்பா.. அதனால வாந்தி மயக்கம் வந்து பாட முடியாமல் போய்விடும் என கணக்கு போடுகிறாள் ரூபஸ்ரீ.

பிறகு இவர்கள் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வர தீபா கச்சேரிக்கான அலங்காரங்களையும் ஏற்பாடுகளையும் பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

கிழவி கொடுத்த ஐடியா.. இசக்கி விஷயத்தில் பாக்கியம் எடுத்த முடிவு.. சண்முகத்துக்கு ஏறிய டென்ஷன் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கண்ணீருடன் புலம்ப அதை சிவபாலன் கேட்டு பீல் செய்த நிலையில் இன்று, சண்முகம் வீட்டிற்கு வராமல் ஓரிடத்தில் புலம்பி கொண்டிருக்க வெட்டுக்கிளி அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைக்க சண்முகம் வீட்டிற்கு வந்தா இசக்கி ஞாபகமாவே இருக்கு நான் வரல என்று சொல்ல அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு வா அண்ணே என்று கூப்பிட்டும் சண்முகம் வர மறுக்கிறான்.

மறுபக்கம் பாக்கியத்துக்கு கை கால் வலியாக இருக்க வீட்டிற்கு உருவி விட வந்த பாட்டி கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு அடுத்து என்ன என்ற கேட்க பாக்கியம் என்ன செய்யறதுன்னு புரியாமல் இருப்பதாக சொல்கிறாள். பாட்டி நீ மட்டும் உன் புருஷனை விரும்பியா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த, ஆனால் அவன் கூட சேர்ந்து வாழலையா? அதே மாதிரி தான் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணு, அவங்களும் நல்லபடியா சேர்ந்து வாழ்வாங்க என்று சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து பாக்கியம் ஜோசியரை சந்தித்து நாள் குறித்து கொடுக்க சொல்லி கேட்க இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு என்று சொல்கிறார். பையனுக்கு மட்டும் நாள் குறிக்க வந்திருக்கீங்க பொண்ணுக்கு வேற ஜோசியரை பார்த்து நாள் குறிச்சிடீங்களா என்று கேட்க பாக்கியம் அவங்களுக்கு பிடிக்காமல் கல்யாணம் நடந்ததால் இன்னும் எதுவும் நடக்கல என்று சொல்ல ஜோசியர் அவங்களுக்கும் நாள் குறித்து கொடுத்து அனுப்புகிறார்.

பாக்கியம் பரணியை வர வைத்து முத்துப்பாண்டி இசக்கி சாந்திமுகூர்த்தம் குறித்து சொல்ல பரணி பிடித்து திட்டி வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இங்க இசக்கி பரணியை பார்த்ததும் அண்ணன் எதாவது சொல்லுச்சா என்று விசாரிக்க பரணி எதுவும் சொல்லல என்று சொல்கிறாள். ஜோசியர் சண்முகத்தை பார்க்க பரணியும் பாக்கியமும் சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க வந்ததாக சொல்ல பரணியை தப்பாக புரிந்து கொண்டு கோபபமடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

மகா கேஸில் திடீர் திருப்பம்.. ராமுக்கு ஷாக், நான்ஸி கொடுத்த அடி

சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி கல்பனாவை அர்ச்சனா கெட்டப்பில் வீட்டிற்கு அழைத்து வர மூன்று பெண்களும் கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று, சுபாஷ் அது கல்பனா என தெரியாமல் ஐ லவ் யூ சொல்லி கட்டிப்பிடிக்க போக கல்பனா கடுப்பாகிறாள். மூன்று பெண்களும் ஒன்றாக சேர்ந்து கேக் கட் பண்ண சொல்ல இருவரும் கேக்கை கட் செய்ய சுபாஷ் ஊட்டி விட்டு முகத்தில் கிரீம் தடவ சீதா இதை பார்த்து மகா செத்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படியா, இதெல்லாம் தேவையா என்று சத்தம் போட நான்சி மகா சாவுக்கு நீ தான் காரணம். உனக்கு தூக்கு தண்டனை வாங்கி தராமல் விட மாட்டேன் என்று எச்சரிக்கிறாள்.

பிறகு ரூமுக்குள் செல்லும் கல்பனா கதவை லாக் செய்து ஸ்மோக் செய்ய சேது அர்ச்சனாவை கூல் செய்ய மேல வந்து கதவை தட்ட சிகிரெட்டை தூக்கி போட்டு கதவை திறக்க சுபாஷ் ரொமான்டிக்காக நெருங்கி வர கல்பனா ஒரு அறை விட்டு வெளியே துரத்துகிறாள். உடனே நான்ஸி கல்பனாவை தனது ரூமுக்கு கூப்பிட்டு சுபாஷை அடித்ததற்காகவும் ஸ்மோக் செய்தததற்காகவும் பளாரென அறைகிறாள். இன்னொரு முறை இப்படி நடந்துக்கிட்டா ஜெயிலுக்குள்ள தான் இருக்கனும் என வார்னிங் கொடுக்க இவர்கள் பேசுவதை சீதா பார்த்து விடுகிறாள். ஆனால் என்ன பேசிக்கிறாங்க என்று தெரியாமல் கன்ப்யூஸ் ஆகிறாள்.

அதனை தொடர்ந்து ராஜசேகர் ராமை கூட்டி கொண்டு அனுபவம் வாய்ந்த தடவியல் நிபுணர் ஒருவரை சந்தித்து துப்பாக்கியை கொடுத்து கை ரேகை  குறித்து ஆராய்ந்து சொல்ல சொல்கின்றனர். அதை ஆய்வு செய்த அவர் சீதா இந்த துப்பாக்கியை ஒரே முறை தான் எடுத்து சுட்டு இருக்கா, திரும்பவும் அவ இந்த துப்பாக்கியையே தொடல என்று சொல்ல ராம் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

.

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment