டாக்டர் சொன்ன விஷயம்.. துப்பறிய கிளம்பிய கார்த்திக், மாயா சிக்குவாளா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயாவின் திட்டத்தால் டாக்டர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி உட்பட எல்லாரும் டாக்டரை பார்க்க வருகின்றனர், ஹாஸ்பிடலில் டாக்டருக்கு கண்ணில் அடிபட்டு கட்டு போடப்பட்டு இருக்கிறது. மேலும் டாக்டர் 1 மாசத்திற்கு பார்க்க முடியாது எனவும் தெரிய வர சாமுண்டீஸ்வரி வருத்தமாகிறாள்.
அடுத்ததாக கார்த்திக் டாக்டரிடம் தனியாக பேசும் போது எப்படி விபத்து நடந்துச்சு என்று விசாரிக்க காரில் ஏறி ஏசி போட்டதும் கொஞ்ச நேரத்தில் மயக்கம் வந்து விட்டதாக சொல்ல கார்த்திக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று செக் செய்து பார்ப்பதாக கிளம்பி வருகிறான். கார்த்திக் டாக்டரிடம் பேசுவதை மாயா ஒட்டுக்கேட்டு விடுகிறாள். இதனால் அவளும் ஏசிக்குள் இருக்கும் குளோரோபார்ம் பாக்கெட்டை வெளியே எடுக்க கிளம்பி வருகிறாள்.
கார்த்திக் வருவதற்குள் அங்கு வரும் மாயா அந்த பெக்கட்டை எடுத்து விடுகிறாள். இவள் அங்கிருந்து கிளம்பும் சமயத்தில் கார்த்திக் காரில் அங்கு வந்து விட மாயா ஓடி ஒளிகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சண்டைக்கு வந்த வெங்கடேஷ்.. சண்முகம் கொடுத்த அடி, சௌந்தரபாண்டி போடும் திட்டம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் ஸ்கூலுக்கு வந்து ரத்னாவிடம் பிரச்சனை செய்து அறிவழகனிடம் அடி வாங்கிய நிலையில் இன்று, அறிவழகனிடம் அடிவாங்கிய வெங்கடேஷ் நேராக சண்முகம் வீட்டிற்கு வந்த ரத்னா அந்த முத்துபாண்டியோட வண்டியில் போறா.. அவன் ரோஸ் கொடுத்தா வாங்கிக்கிறா, இதை பத்தி ஸ்கூலுக்கு போய் கேட்டா அறிவழகன் என்ற வாத்தியார் என்னை அடிச்சு அனுப்புறான்.
மேலும் அவன் ரத்னாவுக்கு லவ் லெட்டர் கொடுத்தவனு சொல்றான். இது தான் உங்க தங்கச்சியோட லட்சணமா என்று சத்தம் போட சாப்பிட்டு கொண்டிருந்த சண்முகம் என் வீட்டிற்கு வந்து என் தங்கச்சி பத்தியா தப்பா பேசுற என அடித்து விடுகிறான். பரணி மற்றும் வைகுண்டம் தடுத்து நிறுத்தி வெங்கடேஷை அங்கிருந்து அனுப்பி வைக்கின்றனர்.
எதிரே வந்த சௌந்தரபாண்டி என்னாச்சு என்று கேட்க வெங்கடேஷ் நடந்ததை சொல்ல இவர் முத்துப்பாண்டி அங்க இருந்தா ரத்னா வாழ்க்கைக்கு பிரச்சனை என்று சொல்லி அவனை திரும்பவும் நம்ம வீட்டிற்கு வர வைத்து விடலாம் என்று திட்டம் போடுகிறார். அடுத்து இசக்கி மற்றும் கனி ஆகியோர் மாலையை கழட்டுவதற்காக பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்க முத்துப்பாண்டி மற்றும் சண்முகம் ஆகியோர் இவர்களுக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.