மனைவியை தவறவிட்ட கணவன்: கடைசியில் வந்த ரவுடிகள்: அடுத்து என்ன நடக்கும்?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Karthigai deepam

ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தீபா.. கார்த்திக்கு தெரிய வரும் உண்மை - கார்த்திகை தீபம் வீக் எண்டு எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், துங்கா மற்றும் தீபா என மூவரும் வேறுவேறு வண்டியில் ஒரே சிக்னலில் காத்திருக்கும் நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சிக்னலில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஆளுக்கு ஒரு திசையாக கிளம்பி விடுகின்றனர். இதையடுத்து தீபாவை கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து விஷயத்தை சொல்ல  போலீஸ் கேஸ் என்று சொல்ல அந்த பெண்மணி எனக்கு அவ்வளவு விவரம் எல்லாம் தெரியாது. நீங்களே கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று கிளம்பி வருகிறாள்.

இதை தொடர்ந்து ஷக்தி என்ற அன்பான நர்ஸ் அறிமுகமாகிறார். ஊசி போட்டு கொள்ள அழும் குழந்தைக்கு பாசமாக பேசி ஊசி போட்டு விடுகிறாள். மைதிலி மீனாட்சியுடன் இதே ஹாஸ்பிடலுக்கு வர அப்போது ஊசி போட வந்த ஷக்தி என்ற நர்ஸை ஒரு பொண்ணு மலை உச்சியில் இருந்து விழுந்து விட்டதாக சொல்லி கொண்டிருக்க மீனாட்சி பேரை கேட்க மைதிலி அதெல்லாம் நமக்கு எதுக்கு என தடுத்து விடுகிறாள்.

Advertisment
Advertisements

பிறகு இவர்கள் கோவிலுக்கு வர மீனாட்சி அந்த பெண்ணுக்காக கடவுளிடம் வேண்டி கொண்டு பிரசாதத்தை எடுத்து கொண்டு மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். நர்ஸிடம் அனுமதி கேட்டு அந்த பெண்ணுக்கு ( தீபா ) வைத்து விட icu-ல் நுழைய போகும் சமயத்தில் டாக்டர் அதுக்கெல்லாம் அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தி விடுகிறார். இன்னொரு பக்கம் துங்கா ஒரு ரெஸ்டாரெண்ட்ட் வந்து ரவுடிகளை வர வைத்து கீதா போட்டோவை காட்டி சல்லடை போட்டு தேட சொல்கிறான், கார்த்தியும் இதே ரெஸ்டாரெண்ட் வர அவனுக்கும் கார்த்திக்கும் ஒரு சிறிய மோதல் உருவாகிறது.

இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான்.  வரும் வழியில் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த பெண்ணின் கணவர் தீபாவின் தாலியை விற்க எடுத்து வந்தவன் கார்த்திக் மீது தவறுதலாக மோத தாலி கீழே விழ கார்த்திக் அதை பார்த்து அவனை மிரட்டி விசாரிக்க என் பொண்டாட்டிக்கு தான் தெரியும் என்று வீட்டிற்கு அழைத்து செல்கிறான். அடுத்து அந்த பெண்மணி கார்த்தியிடம் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காசியம்மா கொடுக்க போகும் வாக்கு என்ன? சுடர் கொடுத்த ஷாக் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் கனகவல்லி குடும்பம் குறி கேட்க காசியம்மாவை பார்க்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  காசியம்மா பஞ்சாயத்து முடித்து விட்டு வந்ததும் கனகவல்லி குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து சென்று உணவு கொடுத்து உபசரிக்கிறாள். பிறகு எழில் சுடர் கல்யாணம் குறித்து சொல்ல குறி கேட்கலாம்.

கடவுள் கொடுக்கிற முடிவை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்று சொல்கிறாள். இதை தொடர்ந்து புதியதாக திருமண தம்பதிகள் காசியம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர், பிறகு கல்யாண பெண்கள் சமைத்து கொடுக்க அதை மாப்பிள்ளை சாப்பிட வேண்டும் என்ற சடங்கு நடக்க சுடரும் புதிய கல்யாண பெண் என்பதால் அவளையும் சமைக்க சொல்ல சுடரும் சமைக்க பிறகு எழிலை சாப்பிட வைக்கின்றனர்.

இன்னொரு பக்கம் அஞ்சலியும் அதே ஊரில் இருக்கும் ஒரு சின்ன பெண்ணும் சேர்ந்து விளையாடி கொண்டிருக்கும் போது இருவரும் தங்களது அப்பாக்களை பற்றி பேசி கொள்கின்றனர். இறுதியாக சுடர் மற்றும் எழிலை உட்கார வைத்து ஆரத்தி எடுத்து சுடருக்கு புது புடவையை கொடுக்க அதை அவள் வாங்க மறுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: