Advertisment

வேலைக்கு சென்ற மருமகள் மீது கோபம்... காணாமல் போன தங்கை : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil Serials Anna

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ்  தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில், அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த தீபாவிடம் ஐஸ்வர்யா கேள்வி கேட்டு ஷாக் கொடுத்த நிலையில் இன்று தீபா நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா அவளை சும்மா விட கூடாது. நான் ஒரு பொய் சொன்ன போது எனக்கு என்ன தண்டனை கொடுத்தீங்களோ அதே தான் அவளுக்கும் கொடுக்கணும் அது தானே நியாயம் என்று பேச அபிராமியும் ஆமாம் என்று சொல்கிறாள். ஐஸ்வர்யா நீங்க அவளை வெளியே அனுப்ப மாட்டீங்க. நான் அதை செய்கிறேன் என்று சொல்லி தீபாவை தரதரவென இழுத்து கொண்டு வருகிறாள்.

தீபாவை வெளியே தள்ளும் போது கார்த்திக் என்ட்ரி கொடுக்க எல்லாரும் அங்கு கூடி விடுகின்றனர். கார்த்திக் என்ன பிரச்சனை என்னாச்சு என்று கேட்க, ஐஸ்வர்யா பொய் சொல்லிட்டு வேலைக்கு போயிட்டு இருக்கா, நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டா. இவளால் பூஜை கேட்டு போச்சு என எல்லாரும் மொத்தமாக ரவுண்டு கட்டி அடிக்க, கார்த்திக் தீபா எனக்கிட்ட சொல்லிட்டு தான் வேலைக்கு போகிறாள். அதுவும் நம்ம ஆபிஸில் தான் வேலை செய்கிறாள் என்று உண்மையை உடைக்க எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.

மேலும் அவ தம்பிக்கு உதவனும் அதுக்காக வேலைக்கு போறதாக சொல்லி ம்யூசிக் கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு வந்தாள், நான் தான் இன்டெர்வியூ பண்ணி அதுக்கு தகுதியானவராக இருந்ததால் வேலைக்கு எடுத்தேன் என்று சொல்கிறாள். அபிராமி என்கிட்ட சொல்லல என்று பேச அருணாச்சலம் அவ அவளுடைய புருஷன் கிட்ட சொல்லிட்டு தான் போய் இருக்கா, இது அவங்களோட தனிப்பட்ட விஷயம், அதுல நாம தலையிட கூடாது என சொல்லி ஆப் ஆக்குகிறார்.

இருந்தாலும் அபிராமி ரூமில் டென்ஷனாக இருக்க அங்கு வரும் கார்த்திக் உங்ககிட்ட சொல்லாமல் விட்டது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்க அபிராமி எனக்கு அது பிரச்சனை இல்ல, பூஜை தடைபட்டு போய்டுச்சு அதான் கவலை என்று சொல்ல நான் குருஜியிடம் பேசிட்டேன், அவர் இன்னொரு நேரத்தை குறித்து கொடுத்திருக்கார் என்று சொல்லி கூல் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

ரத்னாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பதறி போன சண்முகம் குடும்பம், நடந்தது என்ன?

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்துக்கு தெரியாமல் அல்வாவை எடுத்து சாப்பிட்டு சிக்கிய நிலையில் இன்று ஸ்கூலில் ரத்னா கிளாசுக்கு செல்ல அப்போது அவளை ஒரு வாத்தியார் கடந்து செல்லும் போது அவரிடம் வெங்கடேஷ் உங்க ஏரியா தானே, ஒரு வாரமா ஸ்கூல் வரலையே, என்ன காரணம்னு தெரியுமா என்று கேட்க அவர் தெரியாது என்று சொல்லி விடுகிறார், வாட்ச் மேனிடம் கேட்க அவரும் தெரியாது என்று சொல்ல ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் கேட்க வெங்கடேஷ் ரிசைன் செய்து விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டதாக விஷயத்தை சொல்ல ரத்னா அதிர்ச்சி அடைகிறாள்.

இதே அதிர்ச்சியில் கிளாஸ் ரூமுக்குள் வந்து அமர பெல் அடித்ததும் எல்லாரும் கிளம்பி விட ரத்னா சேரில் அப்படியே கண்ணீருடன் உறைந்து போய் கிடக்க செக்யூரிட்டி இதை கவனிக்காமல் கதவை பூட்டி விட்டு கிளம்பி விட ரத்னா சத்தம் போட்டும் அவர் காதில் கேட்காமல் போகிறது. அதன் பிறகு கனி வீட்டிற்கு போக அங்கும் ரத்னா இல்லாததால் ஷாக்காக எல்லாரும் ரத்னாவை காணவில்லை என பதறுகின்றனர். வைகுண்டம் முத்துபாண்டியால் ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என பயப்படுகிறார்.

பரணி ஸ்கூலில் தேடி பார்க்கலாம் என சொல்ல எல்லாரும் கிளம்பி  வருகின்றனர். ரத்னாவுக்கு போன் செய்ய அந்த போன் ஸ்டாப் ரூமில் ரிங்காக ரத்னா ஸ்கூலில் தான் இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

சக்தியுடன் வெற்றி.. பூஜா செய்த சதி, ஷாக் கொடுத்த ரங்கநாயகி –

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நேற்றைய எபிசோடில் சக்தி செல்வமணியை காப்பாற்ற வெற்றியை சித்தரிடம் அழைத்த நிலையில் இன்று, சித்தர் பீடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வெற்றியின் வீட்டிற்கு வெளியே சக்தி காத்துக் கொண்டு வெற்றிக்கு போன் செய்கிறாள். அதை தொடர்ந்து வெற்றி கிளம்பி வரும் போது பூஜா எங்கே செல்கிறாய் என்று கேட்க வெற்றி சொல்ல மறுக்க ரங்கநாயகி எங்கே செல்கிறாய் என்று கேட்கிறாள்.

வெற்றி நண்பர்களுடன் செல்வதாக சொல்லி சமாளிப்பது பின்பு வெற்றி சக்தி இருவரும் சித்தர்பீடம் செல்கின்றனர். அங்கு சித்தர் மந்திரித்த தாயத்தை வெற்றிக்கும் ரங்கநாயகி, செல்வ முருகனுக்கும் தர அதை வாங்கிக்கொண்டு இருவரும் வெளியே வரும்பொழுது ரங்கநாயகி, பூஜா இருவரும் வருகின்றனர். சக்தியுடன் வெற்றி சுற்றித் திரிகிறான் என்ற கோபத்தில் ரங்கநாயகி வெற்றியிடம் சண்டை போடுகிறாள். சக்தியிடமும் சண்டை போட்டு விட்டு ரங்கநாயகி பூஜா உடன் வீட்டிற்கு வருகிறாள்.

பின்னால் வரும் வெற்றி வீட்டிற்கு வந்து ரங்கநாயகியுடன் சண்டை போட்டு தாயத்தை தூக்கி எறிகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment