Advertisment

இந்த பக்கம் மரியாதை... அந்த பக்கம் பதிலடி : சீரியல் மாமியார்கள் படும் பாடு!

ஜீ தமிழில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
zee tamil serial MP KD

அண்ணா - கார்த்திகை தீபம் - மீனாட்சி பொண்ணுங்க

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அவற்றில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

தீபாவை மாற்றிய பல்லவி.. கார்த்திக்கு நடக்க போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவி பாடி முடிக்க கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் இன்று, மீனாட்சி தீபாவிடம் இதெல்லாம் ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு, நீ போய் அந்த பல்லவி கிட்ட என்னனு பேசு என்று சொல்லி அனுப்புகிறாள், அதனை தொடர்ந்து தீபா பல்லவி ரூமுக்குள் வருகிறாள். அவளிடம் யாரு நீ? எதுக்காக இங்க வந்தே என்று கேள்வி கேட்க என்னை மன்னிச்சுடுங்க, குடும்ப வறுமை காரணமாக தான் வந்தேன்.

என் தம்பிக்கும் உடம்பு சரியில்லை என்று சொல்லி டிராமா போட தீபா யோசிக்க பல்லவி மைண்ட் வாய்ஸில் இவகிட்ட இப்படி தான் எமோஷனலாக பேசி நடிக்கணும் அப்போ தான் நாம தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாள். தீபாவும் மனம் மாறி சரி பாடிட்டு இங்க இருந்து கிளம்பிடனும், திரும்பவும் வர கூடாது என்று வார்னிங் கொடுக்கிறாள். பல்லவியும் இல்ல அக்கா வரமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறாள்

இதன் பிறகுதீபா மீனாட்சியிடம் வந்து விஷயத்தை சொல்ல அவள் நீ என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க என்று திட்டுகிறாள். தீபா இல்ல அக்கா அவளால் எந்த பிரச்னையும் வராது என மீனாட்சியையும் சமாதானம் செய்து விடுகிறாள். மறுபக்கம் கார்த்திக் ரூமுக்குள் அமர்ந்து சிதம்பரம் சொன்ன விஷயங்களை நினைத்து பார்த்து கொண்டிருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சூடாமணி பெயரில் கிளினிக்.. சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த சண்முகம்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் தங்கைகளிடம் எப்படியாவது நான் எடுத்துக் கொடுத்த புடவையை கட்ட வச்சிடுங்க என்று சொல்லி இருந்த நிலையில் இன்று பரணி எடுத்த புடவையில் மஞ்சளை கொட்ட வைத்து பிறகு வேறு வழி இல்லாமல் சண்முகம் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக் கொள்ள வைக்கின்றனர் சண்முகத்தின் தங்கைகள். அதனைத் தொடர்ந்து சண்முகம், வெட்டுக்கிளி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கோவிலில் அர்ச்சனை செய்ய வருகின்றனர்.

அங்கு வரும் சௌந்தரபாண்டி நீ ஊருக்கு வேணா தலைவரா இருக்கலாம் ஆனா இங்க நான் தான் தர்மகத்தா எனக்குத்தான் முதல் மரியாதை என்று சொல்லி சண்முகத்தை வெறுப்பேற்றி அவருக்கு முதல் மரியாதை நடக்க செய்ய சண்முகம் நீங்க ஹாஸ்பிடல் திறப்பு விழாவுக்கு போகலையா என்று கேட்கிறான். பாக்கியம் உங்க மாமா எப்படி விடுவாரு என்று சொல்கிறார். உடனே சண்முகம் நான் சொன்ன மாதிரி என் பொண்டாட்டிய கிளினிக் ஆரம்பிக்க வைத்து எல்லாருக்கும் இலவசமா சிகிச்சை கொடுக்க போறேன் என்று சொல்கிறான்.

அதை கேட்ட சனியன் சௌந்தரபாண்டியிடம் இப்ப நாம அங்க போலனா சண்முகம் எல்லாம் நல்ல பேரையும் வாங்கிட்டு போயிடுவான் என்று ஏற்றி விட சௌந்தரபாண்டி வாடி நம்ப அங்க போலாம் என்று பாக்கியத்தை அழைத்துக் கொண்டு செல்கிறார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் அடுத்த தர்மகத்தா சண்முகம் என்று சத்தம் போட சௌந்தரபாண்டி இந்த பதவியையும் நம்மகிட்ட இருந்து பறித்திடுவானோ என பதற்றத்தோடு கிளம்பி செல்கிறார்.

மறுபக்கம் கிளீனிக்கில் எல்லோரும் கூடியிருக்க பேர் என்ன வெச்சிருப்பாங்க என்ற எதிர்பார்ப்பு ஏற சூடாமணி கிளினிக் என்று பேர் வைத்திருப்பதை பார்த்து வைகுண்டம் ஷாக் ஆகிறார். அவர் கண் கலங்கி பரணியிடம் நன்றி சொல்ல இந்த ஊர் அத்தை பத்தி என்ன வேணா சொல்லலாம். ஆனா என் அத்தையை பத்தி எனக்கு தெரியும், இனிமே அவங்க பேர ஊர் முழுக்க நல்லவிதமாக தான் சொல்லணும் அதுக்காகத்தான் அவங்க பேர வச்சதா சொல்ல வைகுண்டம் கண் கலங்குகிறார்.

கீழ இன்னொரு போர்ட் பரணி சண்முகம் என பெயர் இருப்பதை பார்த்த பரணி இதை யார் பண்ணது வெட்டுக்கிளி வேலையா தான் இருக்கும் என கோபப்பட்டு சண்முகத்தின் பெயரை டேப் போட்டு ஒட்டுகிறாள். வைகுண்டம் ஹாஸ்பிடல் திறப்பு விழாவிற்கு வர இன்னொரு பக்கம் சண்முகம் பேஷண்டுகளை மொத்தமாக அழைத்து வருகிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? ஹாஸ்பிடலை திறந்து வைக்கப் போவது யார் எனபது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

மீனாட்சியை அவமானப்படுத்திய ரங்கநாயகி.. சக்தி கொடுத்த ஷாக் –

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றியும் சக்தியும் சேர்ந்து ரங்கநாயகி ப்ளான் அனைத்தையும் மாற்றிய நிலையில் இன்று, சரண்யா வெளியே வந்தால், எல்லாரும் அசோக் எங்கே என்று கேட்பார்கள் என்பதால் அவளை வீட்டுக்குள்ளே இருக்கும்படி ரங்கநாயகி சொல்கிறாள். பூஜா சரண்யாவை ஒரு அறையில் போட்டு பூட்டி வைக்கிறாள்.

அடுத்து மீனாட்சி யமுனா மற்றும் துர்கா அங்கே வர, ரங்கநாயகி, நீதிமணி வர்ற வரை வெளியவே இருங்க என்று சொல்லி விடுகிறாள். பிறகு நீதிமணி புஷ்பாவுடன் வருகிறான். இதை பார்த்து மீனாட்சி அதிர்ச்சியாக, ரங்கநாயகி மீனாட்சியை அவமானப்படுத்துகிறாள். உடன் சேர்ந்து புஷ்பாவும் அவமானப்படுத்த, அங்கே சக்தியும் வெற்றியும், மேள தாளத்துடன் கலர் ஜிகினா பறக்க பைக்கில் வருகிறார்கள்.

இதை பார்த்ததும் இவ எதுக்கு இங்க வருகிறாள் என்று ரங்கநாயகி அதிர்ச்சியாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment