Advertisment

இவருக்கு பதிலாக இவர்... அண்ணா சீரியலில் நடந்த முக்கிய மாற்றம் : பரபரப்பான திருப்பம்

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முக்கிய கேரக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Anna Serial
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழின் அண்ணா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சீரியலின் முக்கிய கேரக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சின்னத்திரை சீரியல்களில் முக்கிய நடிகராக இருப்பவர் மிர்ச்சி செந்தில். விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவர், தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். 4 தங்கைகளுக்கு அண்ணனாக செந்தில் நடித்து வரும் இந்த சீரியலில், நித்யா ராம் நாயகியாக நடித்து வர, பூவிலங்கு மோகன் வில்லனாக நடித்து வருகிறார்.

அதிரடி ஆக்ஷன் சென்டிமெண்ட் என கமர்ஷியம் அம்சங்கள் அதிகம் உள்ள இந்த சீரியல் 200 எபிசோடுகளை கடந்த ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே இந்த சீரியலில் நடித்து வந்த முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சண்முகத்தின் மூத்த தங்கை ரத்னாவின் காதலன் வாத்தியார், வெங்கடேசன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் தற்போது சீரியலில் இருந்து விலகிவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக, அஜய் பாரதி என்பவர் இந்த சீரியிலல் வெங்கடேசன் கேரக்டரில் நடித்துள்ளார். இவர் தொடர்பான காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment