ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக அண்ணா சீரியலில் ஒரு வில்லன் திருந்திய நிலையில், மற்றொரு வில்லன் ஜெயிலுக்கு சென்றுவிட்டதால், அடுத்து புதிதாக ஒரு கேரக்டரில் பிரபல நடிகர் என்ட்ரி ஆக உள்ளார்.
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதனால் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஏறக்குறைய அனைத்து சீரியல்களுமே ஒரே மாதியான கதைக்களத்துடன் தான் ஒளிபரப்பி வருகிறது. இதில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சீரியலை எடுத்துக்கொண்டால், சன்டிவியின் வானத்தைப்போல, அதன்பிறகு ஜீ தமிழின் அண்ணா.
இதில் அண்ணா சீரியல் ஜீ தமிழின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சீரியல். 4 தங்ககளுக்கு அண்ணாக இருக்கும் ஹீரோ அம்மா இல்லாத தனது தங்கைகளை எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் என்பதே இந்த சீரீயலின் திரைக்கதை. இதில் தற்போது அம்மாவை பற்றி புரிந்துகொள்ளும் மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் அம்மா மீது விழுந்த பழியை துடைப்பேன் என்று சபதம் எடுத்தள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிர்ச்சி செந்தில், நித்யா ராம், ரொசாரியோ, பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில், நாயகனாக மிர்ச்சி செந்தில், நாயகியாக நித்யா ராம் நடித்து வருகின்றனர். தினசரி எப்சோடுகள் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மிர்ச்சி செந்திலின் ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருந்து வருகிறது. அதேபோல் கணவனை புரிந்துகொண்ட நித்யா ராமும் கவனம் ஈர்த்து வருகிறார்.
இதனிடையே இந்த சீரியலில், அப்பா சௌந்திரபாண்டி பேச்சை கேட்டு வில்லத்தனம் செய்து இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி திருந்திவிட்ட நிலையில், சௌந்திரபாண்டியும், செய்த தவறை ஒப்புக்கொண்டதால், மகனால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். சண்முகத்தின் அம்மாவும் எந்த தவறும செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதால், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் நினைத்தார்கள்.
அதே சமயம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பிரபல நடிகர் ஈஸ்வர் அண்ணா சீரியலில் முக்கிய கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த சீரியிலில் அவர், மருதப்பன் என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இது என்ன மாதிரியான கேரக்டர் என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்து்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“