Advertisment

அக்கா - தங்கை மோதல்: மாமனார் வைத்த ட்விஸ்ட்; கணவனை புரிந்துகொள்வாரா மனைவி?

ஜீ தமிழின் அண்ணா வீரா மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil Veera nv and anna

மாறன் விஷயத்தில் ராமசந்திரன் எடுத்த முடிவு.. வீராவின் கேள்வியால் காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஜோசியர் மாறனால் வீரா உயிருக்கு ஆபத்து என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது ஜோசியர் சொல்லிட்டு போனதை தொடர்ந்து ரூமுக்கு வந்த வீரா எல்லாரும் எதுக்கு அம்மாவோட சாவுக்கு மாறன் தான் காரணம்னு சொல்றாங்க? உண்மையாவே மாறன் தான் காரணமா என்று சந்தேகம் அடைகிறாள். மாறன் வந்ததும் வீரா உன் அம்மா சாவுக்கு நீ தான் காரணமா என்று கேட்க மாறன் அப்படி சொல்லாத வீரா என்று டென்ஷன் ஆகிறான்.

பிறகு அவன் வெளியே கிளம்ப மாறன் குடித்து விட கூடாது என்பதற்காக வீரா ஆவலுடன் கிளம்பி வருகிறான். அடுத்து மாறன் அம்மாவின் கல்லறைக்கு வந்து நடந்ததை சொல்லி புலம்புகிறான். மறுபக்கம் கண்மணியிடம் ராகவன் அப்பா இந்த ஜோசியரை எல்லாம் நம்ப மாட்டார். நமக்கு கல்யாணம் நாடாகும் போதே ஒரு ஜோசியர் இந்த குடும்பத்துக்கு மருமகளா வருவது நல்லது இல்லனு சொன்னாரு. ஆனால் அப்பா அதையெல்லாம் கண்டுக்காமல் தான் நமக்கு கல்யாணம் பண்ணி வச்சார் என்று சொல்கிறான்.

அடுத்து ராமசந்திரன் மொத்த குடும்பத்தையும் கூட்டி ஜோசியர் சொன்னதை வைத்து ஒரு முக்கிய முடிவு எடுத்து இருப்பதாக சொல்கிறார். அதாவது, ஜோசியர் சொல்ற மாதிரி மாறனால் வீராவுக்கு ஆபத்து என இருந்தால் வீரா நம்மளுடன் இருப்பது தான் அவளுக்கு பாதுகாப்பு. மாறனும் வீராவும் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்ல கண்மணி ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

இசக்கியை தப்பாக பேசிய பாண்டியம்மா.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சனியன் பிச்சைக்காரன் வேடத்தில் வந்து சிக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது பாக்கியம் மற்றும் வைகுண்டம் ஆகியோர் சனியனை மடக்கி பிடித்து வைத்திருக்க அவன் நான் பிச்சைக்காரன் தான் என்று சொல்லி எஸ்கேப் ஆக பார்க்கிறான். பாக்கியம் என் மருமகளையா கடத்த பார்த்த என்று உள்ளே சென்று சூடு தண்ணீரை கொண்டு வந்து சனியன் மீது ஊற்ற அவன் நகர்ந்து கொள்ள பின்னாடி வந்து நின்ற சௌந்தரபாண்டி மீது சூடு தண்ணீர் கொட்டி விடுகிறது.

அதன் பிறகு சௌந்தரபாண்டி காயத்தில் தவிக்க பாக்கியம் மஞ்சள் போட்டு விடுகிறாள். எதுக்கு டி என் மேலே சுடு தண்ணீர் ஊத்தின என்று கேட்க நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க என்று கலாய்க்கிறாள். பிறகு சௌந்தரபாண்டிக்கு பாக்கியம் சாப்பாடு பரிமாற இசக்கி சிவபாலனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள். இதை பார்த்த பாண்டியம்மா என்னடி சிவபாலனுக்கு நீ பொண்டாட்டி மாதிரி நடந்துக்குற என்று பேச இசக்கி மற்றும் சிவபாலன் என இருவரும் பாண்டியம்மாவிடம் கோபப்படுகிறாள்.

இதை தொடர்ந்து இசக்கி சோகமாக அமர்ந்திருக்க பாக்கியம் அவளை சமாதானம் செய்கிறாள். சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த இசக்கி யாரோ பேசுனதுக்கு எதுக்கு நான் சாப்பிடாமல் இருக்கனும் என்று சாப்பிட போக பாண்டியம்மா தன்னை அவனமானப்படுத்திய இசக்கியை அடிக்க போர்வையை போத்தி கொண்டு கிச்சனுக்குள் நுழைகிறாள்.  சிவபாலன் திருடன் என நினைத்து பாண்டியம்மாவை போட்டு அடி வெளுத்து எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மனோகரியை விரட்ட மாறுவேடத்தில் வந்த தீபா.. குழப்பத்தில் தவிக்கும் குடும்பம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி எழில், சுடர் முதலிரவை கெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, கனகவல்லி வீட்டில் எல்லாரும் உட்கார்ந்திருக்க அப்போது மந்திரத்தை சொல்லியபடி சாமியார் கெட்டப்பில் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறாள் தீபா, பிறகு ராமையா பெரிய சாமியார் என்று சொல்லி தீபாவை அறிமுகம் செய்து வைக்க தீபா ஐலசா நாட்டில் இருந்து வருவதாக சொல்கிறாள்.

உன் பேரு கனகவல்லி, உனக்கு உடம்பு முடியாமல் இருக்கு.. உடம்பு மட்டுமில்ல மனசும் சரியில்ல. உன் பையன் எழிலுக்கு முதல் தாரம் இறந்து போனதும் சமீபத்தில் தான் இரண்டாவது கல்யாணம் நடந்தது. ஆனால் அவங்களுக்கு இடையே சரியான புரிதல் இல்ல என்று சொல்லி பேசுகிறாள். இதையெல்லாம் கேட்ட கனகவல்லி உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க பஞ்சபூதங்கள் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுச்சு என்று சொல்கிறாள்.

அதன் பிறகு எழிலையும், சுடரையும் சேர்த்து வைக்க தான் நான் இங்க வந்து இருக்கேன், அதுக்காக சில பரிகாரங்கள் செய்யணும் என்று சொல்ல கனகவல்லி என்ன பரிகாரம் என்று கேட்கிறாள். ஐம்பூதங்கள் கிட்ட கேட்டு வரேன் என்று வெளியே வரும் தீபா இந்துவின் ஆவியிடம் என்ன பரிகாரம் சொல்லட்டும் என்று கேள்வி கேட்கிறாள். மாலையை மாத்திக்கிட்டு அம்மா காலில் ஆசீர்வாதம் வாங்க சொல்லு என்று சொல்கிறாள்.  பிறகு உள்ளே வந்த தீபா அப்படியே அதை சொல்ல பிறகு எழில் மற்றும் சுடர் என இருவரும் விருப்பம்மில்லாமல் மாலையை மாற்றி கொண்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர்.

அடுத்து இன்னொரு பரிகாரம் இருக்கு என்று சொல்லி வெளியே வந்து அடுத்து என்ன பரிகாரம் சொல்லட்டும் என்று ஹிந்துவிடம் கேட்கிறாள். கொஞ்ச நேரம் யோசித்த இந்து பிறகு சுடரை உப்பு மூட்டை சுத்த சொல்லு என்று சொல்ல தீபா அதை உள்ளே வந்து சொல்ல இதெல்லாம் பரிகாரமா என்று குழப்பம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment