ரத்னா எடுத்த முடிவு.. தாலியை கேட்கும் வெங்கடேஷ், ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி? அண்ணா வீகென்ட் எபிசோட் அப்டேட்
அண்ணா. சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ரிசப்ஷனுக்கு வந்து விட சண்முகம் வீட்டில் சூடாமணிக்கு விளக்கு போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சௌந்தரபாண்டி சூடாமணி பற்றி பேசி ரத்னாவின் பீலிங்கை கிளற சொல்லி வெங்கடேஷ் தாய் மாமனுக்கு டாஸ்க் கொடுக்கிறார். ஷண்முகம் வீட்டில் மரத்தடியில் விளக்கு போட எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிய ஒரு பக்கம் வைகுண்டம் துக்கம் தாங்காமல் சரக்கடித்து புலம்பியபடி இருக்கிறார். பிறகு அவரையும் அழைத்து வந்து விளக்கு போட விளக்கு எரியாமல் இருக்க காற்றின் காரணமாக எரியவில்லை என்று நினைத்து தடை கட்டி விளக்கேற்றுகின்றனர்.
அப்போதும் விளக்கு எறியதால் வைகுண்டம் அந்த சௌந்தரபாண்டி தலையை கொண்டு வந்து வைத்து விளக்கு ஏற்றினால் எரியும் என்று ஆவேசப்பட ஷண்முகம் அவரை திட்டுகிறான். இங்கே சௌந்தரபாண்டி திட்டத்தின் படி சூடாமணி பற்றி பேசி ரத்னாவின் பீலிங்கை கிளறி விட அவள் இசக்கிக்கு போன் செய்ய அவள் விளக்கு எரியாத விஷயத்தை சொல்கிறாள். கனி ஒரு வேலை அம்மாவுக்ய் நம்ம மேல கோபமா என்று பேச ரத்னா ரிசப்ஷன் தொடங்க இன்னும் 1 மணி நேரம் இருப்பதால் அம்மாவுக்கு விளக்கு போட கிளம்பி வருகிறாள்.
வீட்டிற்கு வந்த ரத்னா விளக்கு போட்டதும் விளக்கு எரிய அனைவரும் சந்தோசப்படுகின்றனர், பூஜையும் நல்லபடியா நடந்து முடிகிறது. மறுபக்கம் வெங்கடேஷ் ரத்னாவை பார்க்க வர அவள் இல்லாமல் இருக்க தாய் மாமா அவ அம்மாவுக்கு விளக்கு போடுறது தான் முக்கியம்னு போய்ட்டா என்று ஏற்றி விடுகிறான். இதனால் கோபமாகும் வெங்கடேஷ் ரிஸப்ஷனை நிறுத்தி விட்டு கோபமாக கிளம்பி சண்முகம் வீட்டிற்கு வருகிறான்.
ரத்னாவிடம் உனக்காக நிறைய விட்டு கொடுத்து போய்ட்டேன், இனிமேலும் என்னால் விட்டு கொடுக்க முடியாது. நான் ஒரு தேதியை சொல்றேன், வந்து தாலியை கழட்டி கொடுத்திட்டு போ என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சௌந்தரபாண்டிக்கு விஷயம் தெரிந்து சந்தோசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷாருவுக்கு நிச்சயம்.. பத்மா போடும் பிளான், கதிர் கொடுத்த ஷாக் - சந்தியா ராகம் வீகென்ட் எபிசோட் அப்டேட்
சந்தியா ராகம், சீரியலின் நேற்றைய எபிசோடில் பத்மா பாலில் கையை விட்டு கொள்ள இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் அதாவது, பார்வதி கல்யாணத்திற்கு நாள் குறிக்கும் போது இப்படி நடக்கிறது நல்லதா படலயே என்று சொல்ல ரமணியும் ஆமாம் என்று சொல்கிறாள். இதை தொடர்ந்து கதிருக்கு கார்த்திக் ஒரு பெண்ணை ஏமாற்றிய விஷயம் தெரிய வருகிறது.
இதை தொடர்ந்து மாயா சீனுவை கூப்பிட்டு அதான் லைசென்ஸ் குடுத்துட்டாங்களே நாம காதலர்களாவே இருக்கலாம் என்று சொல்ல சீனு அவளை நெருங்கி வர கதிர் அங்கு வந்து விட சீனு என்னை சந்தோஷமாவே இருக்க விட மாட்டியா டா என்று கடுப்பாகிறான். அதன் பிறகு கார்த்தியை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? எதோ தப்பா இருக்கு என்று சொல்ல தனம் அங்கு வந்து அதெல்லாம் எதுவும் தப்பா இல்ல என்று கோபப்படுகிறாள்.
கதிர் இல்ல எதோ தப்ப இருக்கு, ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தா நானே கல்யாணத்தை நிறுத்திடுவேன் என்று ஷாக் கொடுக்கிறான். அதன் பிறகு மாயா அவன் ஏதோ விளையாட்டு போறான் என்று கூல் செய்கிறாள். அடுத்த நாள் ஷாரு வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்ய ஜானகி மற்றும் ரகுராம் இதை பார்த்து லிங்கத்தை வீட்டிற்கு வர வைத்து ஷாருவுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக ஷாக் கொடுக்கின்றனர். அடுத்து பத்மா ஷாருவிடம் பொண்ணு பார்க்க வரும் பிளானை நிறுத்த ஒரு திட்டத்தை சொல்கிறாள்.
அடுத்து மணி வீட்டிற்கு வர பத்மா சந்தோசமாக இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்து சீனுவிடம் விஷயத்தை கேட்க அவன் சாருவை பெண் பார்க்க வரும் விஷயத்தை சொல்கிறான். பிறகு பத்மா மணிக்கு தோசை ஊற்றி கொடுக்க மாயா வர அவளையும் உட்கார வைத்து தோசை ஊற்றி கொடுக்க மணி ஏதோ தப்பா இருக்கு, என்னமோ பிளான் போட்டுட்டா என்று சந்தேகம் கொண்டு உண்மையை கறக்க முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.