பாக்கியத்தை விரட்டும் சௌந்தரபாண்டி.. சண்முகம் எடுக்கப் போகும் அதிரடி ஆக்சன் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் பாக்கியம் சண்முகம் வீட்டுக்கு வந்து இசக்கியை தனது வீட்டிற்கு கூப்பிட இசக்கி வர மறுத்துவிட்ட நிலையில் இன்று, வீட்டுக்கு கூப்பிட போன பாக்கியம் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப சௌந்தரபாண்டி என் பேச்சை மீது இசக்கிய கூட்டிட்டு வரப்போனால் நீ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது என வெளியே தடுத்து நிறுத்துகிறார்.
அப்படியே நீயும் உன் அம்மா வீட்டுக்கு போயிடு என பாக்கியத்திடம் சண்டை போட இதைப் பார்த்த சிவபாலன் வாமா நாம இந்த வீட்டை விட்டு போயிடலாம் இந்த ஆள் வீட்ல எதுக்கு இருக்கணும் என்று சொல்கிறான். பாக்கியம் இல்ல நான் வரமாட்டேன் இப்ப நான் சண்முகம் வீட்டுக்கு போனால் அவன் செய்வது சரி என்று ஆகிவிடும்.
கல்யாணம் ஆனால் பொண்ணுங்க புருஷன் வீட்டில் தான் இருக்கணும்.. நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொல்ல சிவபாலன் சௌந்தரபாண்டியிடம் எங்க அம்மா உள்ள விடுங்க என சண்டை போட சௌந்தரபாண்டி முடியாது என மறுக்கிறார். இதைத்தொடர்ந்து சிவபாலன் சண்முகம் வீட்டுக்கு வந்து சௌந்தரபாண்டி அம்மாவை உள்ள விட மாட்டுறாரு என்ற விஷயத்தை சொல்ல வைகுண்டம் அவனுக்கு இப்படி எல்லாம் சொன்னா புத்தி வராது.. எடுடா அந்த வேல் கம்பு என்று ஆவேசப்படுகிறார்.
சண்முகம் இல்லை என் பொண்டாட்டி கோபப்பட கூடாதுனு சொல்லி இருக்கா.. நானும் அம்மாவுக்கு அருவா எடுக்க மாட்டேன்னு சத்தியம் செய்து கொடுத்து இருக்கேன். இதை வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? சண்முகம் சௌந்தரபாண்டியை டீல் செய்யப் போவது எப்படி என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருட்டு பழியால் தூக்கில் தொங்கிய அம்மா.. சாமுண்டீஸ்வரி கதையைக் கேட்டு கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் தனது குடும்பம் குறித்த ஃபிளாஷ்பேக் கதையை சொல்லி வந்த நிலையில் இன்று, கோவிலில் நகை காணாமல் போக அந்த நகையை தேடும் போது சிவகாமி வீட்டின் வாசலில் ஒரு நகை கிடைக்கிறது. இதனால் ராஜா சேதுபதி சிவகாமி தான் நகை திருடியதாக தவறாக புரிந்து கொள்கிறார்.
சிவகாமியை பார்த்து உனக்கு வேலை போட்டு கொடுத்து வீட்டில் தங்க வைத்தால் இப்படி பண்ணிட்டியேமா என்று கேட்க அவமானம் தாங்காத சிவகாமி வீட்டுக்குள் ஓடிப்போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
அதன் பிறகு அங்க தனி மரமாக நின்னுட்டோம்.. நீயே சொல்லு குடும்பத்துல இப்படி நடந்தா எப்படி இருக்கும்? என சாமுண்டீஸ்வரி கார்த்தியை பார்த்து கேள்வி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய கௌதம்.. மதுவை நிலைகுலைய வைத்த கனவு, நடந்தது என்ன? நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கிரண் மதுமிதாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை அனுப்பி வைக்க கௌதம் அதை பார்த்து அப்செட் ஆன நிலையில் இன்று, கௌதம் போட்டோவை பார்த்து அப்செட்டாகிறான். மறுபக்கம் கிரணின் மனைவி ஸ்ருதி பீரோவை திறக்க அதில் பணம் இருக்க கிரணிடம் ஏது இந்த பணம் என்று கேட்க நீதானே பணம் பணம்னு கேட்டுட்டு இருந்த என்று பதில் கொடுக்கிறான்.
பிளாஷ் கட்டில் அபிஷேக் செலவுக்கு வச்சுக்கோ என பணம் கொடுத்த விஷயம் தெரிய வருகிறது. அடுத்ததாக மதுமிதா தூங்கிக் கொண்டிருக்க கௌதமுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்து அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை சாற்றுவது போல கனவு கண்டு அலறி எழுகிறாள். உண்மையிலேயே பக்கத்தில் கௌதம் ஆள் இல்லாமல் இருக்க அவளது பதற்றம் மேலும் அதிகரிக்கிறது. கௌதம் அவளை விட்டுவிட்டு ஆபீஸ்க்கு கிளம்பி விட மதுமிதா வெளியே ஓடிவந்து செக்யூரிட்டியிடம் கேட்க ஐயா ஆபிஸ் கிளம்பி விட்டதாக சொல்கிறார். பிறகு மதுமிதா கௌதமுக்கு போன் போட்டு எதுக்கு விட்டுட்டு போனீங்க என்று கேள்வி கேட்க அவன் பதில் சொல்லாமல் மதுமிதாவிடம் பேசுவதை அவாய்ட் செய்கிறான்.
இதனைத் தொடர்ந்து கௌதம் ஆபிசுக்கு வர கேப்பிட்டரி ஏரியாவில் கிரண் மற்றும் மதுமிதாவை சேர்த்து வைத்து எல்லோரும் தப்பா பேச ஒரு பக்கம் கௌதம் இதை கேட்டு பீல் செய்ய இன்னொரு பக்கம் சந்தோஷ் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து எல்லோரையும் பிடித்து திட்டுகிறான். கௌதம் மாதிரி ஒரு பாஸ் கிடைக்க நீங்க எல்லாரும் கொடுத்து வச்சிருக்கணும் ஆனா நீங்க அவனுடைய மனைவி பற்றிய தப்பா பேசிட்டு இருக்கீங்க. இன்னொரு முறை இப்படி பேசினா எல்லாரையும் வேலையை விட்டு துரத்திடுவேன் என்று வார்னிங் கொடுக்கிறான்.
அடுத்ததாக கௌதம் அங்கு வந்து என்ன ஆச்சு? என்ன பிரச்சனை என்று கேட்க ஒன்றும் இல்லை நண்பா வேலை செய்யாம வெட்டி கதை பேசிட்டு இருந்தாங்க அதான் திட்டிக்கிட்டு இருக்கேன் என சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.