Advertisment

கர்ப்பத்தை கலைக்க சதி... பொண்ணுக்காக சட்டை போடும் போலீஸ் : ஜீ தமிழ் சீரியல்களில் இன்று நடப்பது என்ன?

அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், அண்ணா, மாரி, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil Serial nov 06

ஜீ தமிழ் அண்ணா, சீதாராமன் மாரி

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் அவ்வப்போது புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், அண்ணா, மாரி, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

அண்ணா:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் சௌந்தரபாண்டி சட்டையை பிடித்து எங்க அம்மா உன்ன உயிரோட விட்டு வைக்க சொல்லி இருக்கா அதனால தான் நீ இன்னமும் உயிரோட இருக்க என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், சூடாமணி ஜெயிலில் இருக்கும் விஷயம் சண்முகத்துக்கு தெரிஞ்சு போச்சு, இதுக்கு மேலயும் அவனை உயிரோடு விட்டு வைக்க கூடாது என்ற முடிவுக்கு வருகிறார் சௌந்திரபாண்டி. இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி ரத்னா எனக்கு பொண்டாட்டி ஆகி நம்ம வீட்டுல அடிமையா கிடைக்கும் என சொல்கிறான்.

அது மட்டுமல்லாமல் அவளை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேனு நீ இந்த ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு அவளை நான் தான் வேணான்னு சொல்லணும் அவ என்ன வேணான்னு சொன்னதா இருக்க கூடாது என கூறுகிறான். பிறகு விழா மேடையில் பிரசிடென்ட்டை மேடைக்கு கூப்பிட சண்முகம் அங்கு சென்று விட முத்துப்பாண்டி திரும்பவும் ரத்னாவின் கையைப் பிடித்து தாலி கட்ட இழுத்துச் செல்கிறான்.

திடீரென ஒரு சூலாயுதம் பறந்து வந்து முத்துப்பாண்டி கையில் இருக்கும் தாலியை பறித்துக் கொண்டு போக பின்னாடி சண்முகம் இருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு ரத்னா முத்துப்பாண்டி கையை திருப்பி இழுத்துச் சென்று ஊர் மக்களுக்கு முன்னாடி நிற்க வைத்து நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் ஆனா எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு துளி கூட தோணல என அதிர்ச்சி கொடுக்கிறாள்.

அதுவுமில்லாமல் நீ அண்ணனோட சண்டை போட்டு அவனை ஜெயிச்சுட்டேன்னா என் கழுத்துல தாலி கட்டலாம் என சொல்கிறாள். பிறகு சண்முகத்துடன் அண்ணா இவன் இருக்கிற வரைக்கும் நாம நிம்மதியா இருக்க முடியாது ஒன்னு இவனை தோற்கடி இல்லைன்னா இவனை கொன்னுடு என சொல்கிறாள் ரத்னா. இதனால் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாரி:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில்,மாரியின் கர்ப்பத்தை கலைக்க பிளான் போட்டு நவராத்திரி விழாவிற்கு ஏற்பாடு செய்து சூர்யாவுக்கு போன் செய்து தாரா மாரி அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வர சொன்ன நிலையில் இன்று எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்து தாரா டீம் காத்துக் கொண்டிருக்கிறது.

ரேடியம் கல்லை சங்கரபாண்டி பக்கத்தில் வைத்து டெமோ பார்க்க கொஞ்ச நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட இதே மாதிரி மாரிக்கும் வயிற்று வலி ஏற்படும் அவளை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தா கர்ப்பம் கலங்கி போச்சுன்னு சொல்லுவாங்க என்று சொல்லி சந்தோஷப்படுகின்றனர்.  அதைத்தொடர்ந்து ஸ்ரீஜா அங்கு வர தாரா நீ எல்லாம் இங்க வரக்கூடாது கர்ப்பத்தை கலைக்க நாங்க பிளான் போட்டுக்கிட்டு இருக்கோம் நீ நம்ப குடும்பத்தோட வாரிசு சம்பந்தப்பட்டிருக்க என சத்தம் போட்டு ஸ்ரீஜாவை அங்கிருந்து அனுப்பி வைக்கிறாள்.

அதன் பிறகு தாரா, ஸ்ரீஜா மற்றும் ஜாஸ்மின் என மூவரும் தங்க நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு காத்திருக்க மாரி சிம்பிளாக வீட்டுக்கு வருவதை பார்த்து ஜாஸ்மின் ஒரு பொட்டு நகை இல்லாம வந்திருக்க என்று அவமானப்படுத்த முயற்சி செய்கிறாள். உடனே மாரி இதெல்லாம் பெருசு கிடையாது, அந்த அம்மனோட கழுத்துல இருக்க அந்த தாலிக்கு இணையா எதுவும் வராது என சொல்ல தாரா என்ன மாதிரி இப்படி எல்லாம் சொல்ற என பிரச்சனையை பெரிதாக்க பிளான் போடுகிறாள். இதனால் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சீதா ராமன்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்று, மகாலட்சுமி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீதா வீட்டுக்கு வெளியே பேக்குடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மீரா வீட்டுக்கு வருகிறாள்.

ராம் சீதாவை உள்ள வர சொல்லுங்க சித்தி இவகிட்ட மன்னிப்பு கேட்கிறது எல்லாம் நடக்கிற விஷயமா என்று சொல்ல மீரா தப்பு பண்ணாங்க இல்ல மன்னிப்பு கேட்கணும் மன்னிப்பு கேட்க வைக்கணும் அதுக்காகத்தான் நான் வந்து இருக்கேன் என சொல்கிறாள். துரை என்ன பண்ண போறீங்க என்று கேட்க உள்ளே போங்க மாமா மகாலட்சுமி வந்ததும் எல்லாம் உங்களுக்கு தெரியும் என சொல்லி அனுப்புகிறாள் சீதா. அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் மகாலட்சுமி சீதா வெளியில் இருப்பதை பார்த்துவிட்டு அர்ச்சனாவிடம் வந்து இவ எதுக்கு பிச்சைக்காரி மாதிரி வெளியே உட்கார்ந்துட்டு இருக்கா போக சொல்ல வேண்டியது தானே என்று சத்தம் போடுகிறாள்.

நீ மன்னிப்பு கேட்காம அவ போக மாட்டாளாம் என்று அர்ச்சனா சொன்ன யார் யார் கிட்ட மன்னிப்பு கேட்கிறது என கோபப்படுகிறாள். அஞ்சலி பிரியா சத்யா என மூவரும் நீங்க முன்ன மாதிரி இல்லை ஏற்றி விட மகாலட்சுமி துப்பாக்கி எடுத்துக் கொண்டு சீதாவை சுட்டுத்தள்ள கிளம்புகிறாள். அப்போது எதிரே வந்து நிற்கும் மீரா நீங்க சீதா கிட்ட மன்னிப்பு கேட்டு தான் ஆகணும், இந்த பொண்ணுங்கள சரியா வளக்க முடியாம தப்பு பண்ணிட்டீங்க என சொல்ல மகாலட்சுமி சீதாவை சூட்டு தள்ள வெளியே எழுந்து வர ராம் சேது மற்றும் துரை என மூவரும் அங்கு வந்து விடுகின்றனர்.

மகா துப்பாக்கி எடுத்து சீதாவுக்கு நேராக நினைத்த துரை துப்பாக்கியை பிடுங்கிக் கொள்ள மகாலட்சுமி சீதாவை அறையப்போக சேது குறுக்கே வந்துவிட சேதுவுக்கு பளார் என்று அறை விழுகிறது. இதனால் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். சேது மகாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல மகா முடியாது என மறுப்பு தெரிவிக்க அப்படின்னா இனிமே மூன்று பெண்களையும் சீதா தான் பாத்துக்குவா என அதிர்ச்சி கொடுக்க மகா மேலே செல்கிறாள்.

பிறகு மீராவின் சீதாவும் திட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக சந்தோஷப்பட பிறகு இருவரும் எப்படி ப்ளான் போட்டாங்க சேதுபதியை எப்படி இப்படி சொல்ல வச்சாங்க என சீதா திட்டத்தை உடைக்கிறாள். ராம் இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்லல என்ன கோபப்பட இவ உன்ன ஒரு மனுஷனாவே மதிக்கல அப்படி இருக்கும் போது எப்படி இதெல்லாம் சொல்லுவா என மகாலட்சுமி என்ட்ரி கொடுக்கிறாள்.

ராம் கோபமாக அங்கு இருந்து கிளம்பிச் சென்று விட மகா நீ என் குடும்பத்தை என்கிட்ட இருந்து பிரிக்கிறியா? ராமை உன்கிட்ட இருந்து பிடிச்சு உன்ன அவமானப்படுத்தி நடுத்தெருவில் அனாதையா நிக்க வைக்கிறேன் என சவால் விட சீதா சவாலுக்கு நானும் ரெடி என சொல்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment