15 வயதில் திருமணம், 25-ல் 3 குழந்தைகள்; உனக்கு இது தேவையா? ஏளனம் பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த பஞ்சமி!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் பஞ்சமி. கள்ளக்குறிச்சி மாவட்டதை சேர்ந்த இவர், தனது நடனத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் பஞ்சமி. கள்ளக்குறிச்சி மாவட்டதை சேர்ந்த இவர், தனது நடனத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Dance dofi panjami

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்ற நடன கலைஞர் பஞ்சமி, னது வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ். நடனத்தில் ஆர்வம் உள்ளர்வர்களை தேர்வு செய்து வாய்ப்பு கொடுக்கும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் பஞ்சமி. கள்ளக்குறிச்சி மாவட்டதை சேர்ந்த இவர், தனது நடனத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார். இவர் பிள்ளைகளின் காதணி விழாவுக்கு நடிகர் சூரி வந்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் டெலி விகடனுக்கு பஞ்சமி அளித்த பேட்டியில், பள்ளியில் படிக்கும்போது நடனம் ஆடி இருக்கிறேன். 10-ம் வகுப்பு படித்தவுடன் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. என்னை படிக்க வைக்க  எங்கள் வீட்டிலும் வசதி இல்லை. விருப்பமும் இல்லை. என்னை போன்று சென்னையில் பல பெண்களை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இப்படி கூட பெண்கள் இருப்பார்களா என்று நினைக்கிறேன். 15 வயதில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு பெரியதாக யாரும் சுதந்திரம் கொடுக்கவில்லை.

எனக்கு திருமணம் ஆனவுடன், எனது ஆசைகளை கணவரிடம் சொல்ல தொடங்கினேன். ஆனால் 15 வயதில் கணவர் வீடு, மாமியார் மாமனார் என அனைவரையும் ஏற்றுக்கொண்டு, சமைக்க, வேலை செய்ய காட்டு வேலை கூட எனக்கு தெரியாது. ஆனால் நான் அவருடன் சென்றுவிட்டேன். அம்மா தனியாக வளர்த்ததால், என்னால் கெட்ட பெயர் வந்துவிட கூடாது என்று நினைத்து அமைதியாக இருந்தேன். அதன்பிறகு குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்காக வாழ நினைத்தேன். டான்ஸ் ஆசையை சொல்லவில்லை.

Advertisment
Advertisements

10 வருடங்கள் கடந்தது, பிள்ளகைள் பள்ளிக்கு செல்லும்போது நாங்கள் நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் வீட்டில் பிள்ளைகளுடன் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஊரில் நடன நிகழ்ச்சி வைத்தால், நானும் ஆடுவேன் என்று சொல்வேன். ஆனால் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றுக்கு வேலைக்கு போனபோது அங்கு அவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினேன். ஆனால் என்னை வேலைக்கு அழைத்து சென்றவர், கண்டபடி திட்டிவிட்டார். இதை கேள்விப்பட்டு எங்க ஊர்க்காரர்கள் 3 குழந்தைகள் இருக்கு இது தேவையா என்று கேட்டனர் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Viral Dance

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: