Advertisment

ஜெயிலர் வில்லன் விநாயகனுடன் ஜீ தமிழ் டான்சர் ரமேஷ் வைரல் வீடியோ; ரசிகர்கள் ஆதங்கம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான டான்சர் ரமேஷ் ஜெயிலர் வில்லன் விநாயகன் உடன் மூன் வாக் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், இதைப் பார்க்க அவர் உயிருடன் இல்லையே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dancer ramesh in jailer, dancer ramesh video goes viral from jailer, rajinikanth jailer dancer ramesh, ஜெயிலர் வில்லன் விநாயகனுடன் ஜீ தமிழ் டான்சர் ரமேஷ் வைரல் வீடியோ; ரசிகர்கள் ஆதங்கம், ஜெயிலர் வில்லன் விநாயகன், ஜெயிலர், ஜீ தமிழ் டான்சர் ரமேஷ், ரஜினிகாந்த், villain vinayakan dance with dancer ramesh in jailer, nelson dilipkumar fulfills the last wish of dancer ramesh, dancer ramesh ajith thunivu, moon walk zee tamil dancer ramesh death

ஜெயிலர் வில்லன் விநாயகனுடன் ஜீ தமிழ் டான்சர் ரமேஷ் வைரல் வீடியோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான டான்சர் ரமேஷ் ஜெயிலர் வில்லன் விநாயகன் உடன் மூன் வாக் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், இதைப் பார்க்க அவர் உயிருடன் இல்லையே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisment

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி உள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் பற்றிதான் இந்த ஒருவராமாக எங்க பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் ரெட்டி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்கள் களம் இறங்கி கலக்கி உள்ளனர்.

ஜெயிலர் படம் வெளியாகி இந்த ஒருவாரத்தில் உலகம் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் கணக்காளர்கள் கூறுகின்றனர்.

publive-image

டான்சர் ரமேஷ்

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான டான்சர் ரமேஷின் ஆசையை ஜெயிலர் படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நிறைவேற்றியுள்ளார். ஆனால், அதைப் பார்க்க அவர் இன்று உயிருடன் இல்லை.

டான்சர் ரமேஷ் சமூக வலைதளங்களில் தனது அற்புதமான நடனத்தால் அனைவரையும் கவர்ந்தவர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே கிடைத்த பிரபலத்தின் மூலம், டான்சர் ரமேஷுக்கு ஜீ தமிழ் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தனது அற்புதமான நடனத் திறமையால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, டான்சர் ரமேஷுக்கு சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜித்தின் துணிவு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்ததோடு, ரஜினிகாந்த்தின் ஜெயிலரிலும் நடித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவர் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார்.

ரமேஷின் குடும்பத்தினர் சமீபத்தில் ஒரு முன்னணி ஊடக இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் இதை குறிப்பிட்டுள்ளனர். இப்போது அவர் உயிருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்றார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஜெயிலரில் வில்லன் விநாயகனுடன் நடன கலைஞர் ரமேஷ் மூன் வாக் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டான்சர் ரமேஷ் அவசரப்பட்டு தற்கொலை செய்துகொள்ளாமல் உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

டான்சர் ரமேஷின் ஆசை அவரது மரணத்திற்குப் பிறகு ஜெயிலர் படத்தில் நிறைவேறியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ஜெயிலர் படத்தின் வில்லன் விநாயகன் உடன் டான்ஸர் ரமேஷ் மூன் வாக் செய்கிற வீடியோ வைரலாகி உள்ள நிலையில், இது குறித்து ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வர்மாவின் கும்பலில் உள்ள முக்கிய நடனக் கலைஞர் 'டான்சர்' ரமேஷ் தான், அஜித்தின் துணிவு படத்தில் கேமியோவாகவும் நடித்துள்ளார். அவர்கள் அவரது நெருக்கமான காட்சிகள்/ஸ்கிரீன் பிரசன்ஸ் அல்லது காட்சிகளின் கால அளவைக் குறைக்கவில்லை” என்பது எனது பார்வை. மற்றொரு ரசிகர், “பார்வையாளர்களின் வரவேற்பைப் பார்க்க இவரால் பார்க்க முடியவில்லையே” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Zee Tamil Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment