Zee Tamil, Neethaane enthan Ponvasantham: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கிறார் நடிகை தர்ஷனா. 40 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலில், அனு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
திவ்யா, சக்தி, ரோஜா: மறக்க முடியாத மணிரத்னம் ஹீரோயின்ஸ்!
”என் பூர்வீகம் கேரளா. வளர்ந்தது சேலம். சின்ன வயதில் இருந்தே நடிக்கும் ஆசை இருந்தது. ஆனா, இதற்கு முன்பு குறும்படம், டிக்டாக் வீடியோவில் கூட நடித்தது இல்லை. மாடலிங் ஃபோட்டோஷூட் ஆர்வம் அதிகம். அந்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அப்படி அமைந்ததுதான் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியல் வாய்ப்பு” என இது குறித்து முன்பே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோதே ஜோதேயலி’ என்ற தொடரின் ரீமேக் தான் ’நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியல்.
,
சீரியலிலும், இணையத்தில் தனது அழகான படங்கள் மூலமாகவும், ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷனாவின் மறுபக்கம் சுவாரஸ்யமானது. ஆம்! அடிப்படையில் தர்ஷனா ஒரு பல் மருத்துவர். இவருடைய தந்தை அசோகனும் ஒரு மருத்துவர். சொந்தமாக கிளினிக் வைத்திருக்கும் அசோகன் தன்னுடைய ஆசைக்காக தான் தர்ஷனாவை மருத்துவம் படிக்க வைத்தாராம். ஆனால் தர்ஷனாவுக்கோ, மருத்துவம் படித்தாலும் அவருக்கு நடிப்பு மீது தான் ஆசையாம். அதனால் தான் படிப்பை முடித்ததும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற கிளம்பி விட்டார்.
,
ஆனால் அதற்கு முதலில் தர்ஷனாவின் வீட்டில் சம்மதிக்கவே இல்லையாம். நாளாக ஆக, சீரியலின் ரீச் மற்றும் அதில் அவரது நடிப்பைக் கண்டும், தற்போது குடும்பத்தினர் சப்போர்ட் செய்து வருகிறார்களாம். தனது முதல் சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களுக்குப் பிடித்ததாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லையாம். அந்தளவுக்கு மகிழ்ச்சியடைந்திருக்கிறார் தர்ஷனா. முதலில் கொஞ்சம் பயந்த அவரை, சப்போர்ட் செய்து ஊக்குவித்தாராம் உடன் நடிக்கும் ஜெய் ஆகாஷ்.
,
கமலா ஹாரிஸ் எட்டிய உயரம் – குடும்பம் அவரை செதுக்கியது எப்படி?
இந்த சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த, தர்ஷனா தொடர்ந்து பல ஃபோட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் படங்களை இணையத்தில் உலவவிட்டு வருகிறார். அடடா எவ்வளவு அழகு என, அவரை புகழ்ந்து தள்ளுக்கிறார்கள் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”