scorecardresearch

தங்க ஜரிகையில் புடவை… பிரம்மாண்ட வெற்றிவிழா… களைகட்டும் செம்பருத்தி க்ளைமேக்ஸ்

ஷபானா, விஜே அகினி, பிரியாராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் செம்பருத்தி சீரியல் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

தங்க ஜரிகையில் புடவை… பிரம்மாண்ட வெற்றிவிழா… களைகட்டும் செம்பருத்தி க்ளைமேக்ஸ்

செம்பருத்தி கிளைமாக்ஸில் தங்கத்தாலே செய்யப்பட்ட பிரம்மாண்ட புடவையில் பார்வதி.. விலை மட்டுமே இவ்வளவா?? வைரலாகும் போட்டோஸ்

முன்னணி சேனல்களக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி தங்களை நிலை நிறுத்திக்கொண்டுள்ள ஜீ தமிழ் தற்போது புதிதாக பல சீரியல்களை தொடங்கியுள்ளது. ஆனாலும் பழைய சீரியல்களுக்கு உண்டான வரவேற்கு மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 5 வருடங்களாக ஜீ தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த சீரியல் செம்பருத்தி.

ஷபானா, விஜே அகினி, பிரியாராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதுவரை 5 வருடங்ளில் 1400 எபிசோடுகளை கடந்துள்ள செம்பருத்தி தற்போது தனது இறுதிக்கட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

நாளையுடன் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோடில் பார்வதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பார்வதி பிரத்யேகமாக தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை அணிந்து ஜொலிக்க உள்ளார். இந்த புடவையின் மதிப்பு மட்டுமே 1 லட்சம் ரூபாய் என சீரியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

செம்பருத்தி கிளைமாக்ஸை ஜீ தமிழ் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பார்வதிக்கு இப்படி தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை அணிந்து நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதனிடையே செம்பருத்தி க்ளைமேக்ஸ் தொடர்பான நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைளும் பங்கேற்றுள்ளனர். அதே சமயம் சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் அனைவரும் தங்களது உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளனர் இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Zee tamil hit serial sembaruthi going on end climax function