சீரியல் எடுக்க சொன்னா என்னங்க இப்படி பண்றீங்க? இதயம் சீரியலுக்கு குவியும் பாராட்டுகள்

ஜீ தமிழில் சமீபத்தில் நேரம் மாற்றப்பட்ட இதயம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ஜீ தமிழில் சமீபத்தில் நேரம் மாற்றப்பட்ட இதயம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Idhayam Serial

ஜீ தமிழ் இதயம் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். கணவன் இல்லாமல் ஒரு குழந்தையுடன் இருக்கும் நாயகியை ஒருதலையாக காதலிக்கும் நாயகன். அவனது காதலை நாயகி ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நாயகியுடன் இருக்கும் குழந்தை நாயகனின் அன்பை எதிர்பார்ப்பார்க்கறது. இடம் மாறிய இதயம் தனது இதயத்தோடு இணைந்த உறவுகளுடன் சேர துடிக்கும் கதையாக அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Advertisment

ஆதி, பாரதியாக ரிச்சர்ட் மற்றும் ஜனனி அசோக் குமார் நடித்து வருகிறார்கள் என்று சொல்வதை அந்த கதாபாத்திரங்களாகவே மாறி விட்டனர் என சொல்லலாம். அந்த அளவிற்கு மிகவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து சீரியலுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரை இதுவரை பார்த்த காதல் கதைகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட கதையாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகின்றனர்.

ஒருவரை ஒருவர் தொடாமல், ரொமான்ஸ் இல்லாமல் உணர்வுகளால் மட்டுமே மெய் சிலிர்க்க வைத்து வருவதாக கருத்து கூறி வருகின்றனர். அதே சமயம் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இரவு நேரத்திற்கு மாற்றுங்கள் எனவும் நிறைய கோரிக்கைகள் வருவதையும் ப்ரோமோ கமெண்ட்களில் பார்க்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: