/indian-express-tamil/media/media_files/ZJsNvxBR0hpQMJelfX9w.jpg)
இதயம் சீரியல்
ஜீ தமிழின் இதயம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரொம்ப நாளாக காத்திருந்து தருணம் வந்துவிட்டது என ரசிகர்களை இதயம் சீரியல் ப்ரோமோவை பாராட்டி வருகின்றனர்..
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கதைக்களம் ஆதி, பாரதி கல்யாணத்தை நெருங்கி வருகிறது. ஒரு பக்கம் ஆதிக்கும் பாரதிக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஸ்வேதா ஆதி தன்னுடைய கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று அதற்கான சூழ்ச்சி வேலைகளை தொடங்கி உள்ளார்.
இன்னொரு பக்கம் சொத்துக்காக ஆதியை போட்டு தள்ள சித்தப்பா சதி வேலைகளை செய்ய தொடங்கியுள்ளார். இது மட்டுமின்றி மணி துரை தான் பாரதி கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று அதற்கான சதிகளை செய்ய தொடங்கியுள்ளார். இதையெல்லாம் மீறி ஆதி, பாரதி கல்யாணம் எப்படி நடக்க போகிறது? ஆதி சதிகளை தாண்டி பாரதியை எப்படி கரம் பிடிக்க போகிறான் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜீ பிரபலங்கள் பங்கேற்க ஆதி பாரதியின் திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.வரும் மே 19-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரை ஆதி, பாரதியின் திருமண வைபோகம் எபிசோட் 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாளா இதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஆதி, பாரதி திருமணத்திற்கு பிறகு புதிய அத்தியாயத்தில் இதயம் சீரியல் கதை பயணிக்க தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us