ஜீ தமிழ் டிவியில் புதிய சீரியல்களின் வருகை காரணமாக, பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான மௌனம் பேசியதே சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் சீரியல்கள் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சீரியல்களைப் பார்க்கிறார்கள். தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் முக்கிய நிகழ்ச்சியாக சீரியல்களே உள்ளன.
சன் டிவி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து சீரியல்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைக்கும் சன் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி-யில் டாப் 5-ல் உள்ளன. அதே நேரத்தில், புதியதாக வந்த விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற டிவிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.
எந்த சீரியல் அதிக அளவில் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது என்பதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய டிவிகள் இடையே ஒரு பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது.
இதில் டி.ஆர்.பி-யில் சன் டிவியை மற்ற டிவிகள் பெரிய அளவில் தாண்டவில்லை என்றாலும் நிறைய முயற்சிகள் எடுக்கிறார்கள். சில நேரங்களில், விஜய் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி-யில் டாப் 5-க்குள் வந்துவிடுகின்றன. அதே போல, ஜீ தமிழ் சீரியல்களும் டாப் 10-க்குள் வந்துள்ளன.
ஆனாலும், சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய 3 டிவிகளும் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக புத்தம் புதிய சீரியல்களை களமிறக்குகிறார்கள். அதே நேரத்தில், டி.ஆர்.பி-யில் குறையும் சீரியல்களை முடித்து விடுகிறார்கள்.
அந்த வகையில், ஜீ தமிழிலும் நிறைய புதிய சீரியல்கள் அறிமுகமாக பழைய சீரியல்கள் நேரம் மாற்றப்பட்டுளளது.
புதியதாக களமிறங்கும் மௌனம் பேசியதே சீரியல் இன்று முதல் மதியம் 1 மணிக்கும், இதயம் தொடர் 1.30 மணிமுதல் 2.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த இதயம் சீரியல் நவம்பர் 4-ம் தேதி முதல் திங்கள் - சனி மதியம் 1.30 முதல் 2.30 வரை ஒளிபரப்பாகிறது.
அதே போல, மௌனம் பேசியதே சீரியல் நவம்பர் 4-ம் தேதி முதல் திங்கள் - சனி நாட்களில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“