விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜீ தமிழ் சீரியல் நடிகர் ஒருவர் தற்போது சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், கடந்த 4 சீசன்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கியுள்ளது.
5-வது சீசனில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மாதம்பட்ட ரங்கராஜ் நடுவராக பங்கேற்றுள்ளார். வழக்கம்போல் ரக்ஷன் தொகுத்து வழங்கி வரும் இந்நிக்ச்சியில், பிரபல சீரியல் நடிகை சுஜிதா தனுஷ், நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருடன் சீரியல் நடிகர் அக்ஷை கமல் போட்டியாளராக பற்கேற்றுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்திரா சீரியலில் நாயகனாக நடித்து வரும் நடிகர் அக்ஷை கமல், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அவர் நடித்து வரும் கேரக்டருக்கு ஏற்ற நடிகர் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், அக்ஷை கமல் தொடர்ந்து நடித்து வருவதாகவும் விரைவில், நடிகர் கிடைத்தவுடன் அவர் சீரியலில் இருந்து விலகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சண்டக்கோழி தொடரில் நடித்து வந்த நடிகர் நியாஸ் கானும், அந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர் நடித்து வந்த விக்ரம் கேரக்டரில், பூவே பூச்சூடவா சீரியல் நடிகர் மதன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“