New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Zee-tamil-Serial.jpg)
உங்க சீரியல் தாகத்துக்கு ஒரு அளவே இல்லையாப்பா படத்தோட சீன காப்பி அடிச்சீங்க இப்போ இப்படி பண்றீங்களே
ஜீ தமிழின் பிரபல சீரியலான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலின் தற்போதைய ப்ரமோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் மற்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வரும் ஜீ தமிழில் அவ்வப்போது புதிய சீரியல்கள் களமிறங்கி வருகின்றனர். அதேபோல் பழைய சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.
இந்தியில் வெளியான துஜஹஸ் ஹாய் ராப்டா என்ற சீரியலின் ரீமேக்கான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் ஆதிரா என்ற லீடு ரோலில் நடித்து வந்த நடிகை மனிஷா அஜித் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகியதோடு மட்டும்ல்லாமல் சீரியல் குழுவினர் மீது பல அடுக்கடுக்கான புகார்களையும் கூறியிருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது சீரியலின் ப்ரமோ கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது. வளர்ப்பு தாய்க்கும் மகளுக்குமான பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த சீரியல் சமீபத்தில் 100 எபிசோடுகளை கடந்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் சாருமதி அகிலனுடன் ஓடிப்போன நின்னைக்கிறாள்.
அதே சமயம் அகிலன் ஆதிராவை விரும்புவதாக கூற இதை நம்பி குடும்பத்தார் அனைவரும் அகிலன் ஆதிரா திருமணத்திற்கு ஏற்பாடு செய்கினறனர். ஆனால் திடீர் திருப்பமாக ஆதிராவை திருமணம் செய்துகொள்ளும் திருமாறன், வீட்டில் ஆதிராவுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இரவோடு இரவாக வீட்டிற்கு நடுவில் கோட்டை எழுப்புகிறான்.
இதை பார்த்து குடும்பமே அதிர்ச்சியடைகிறது. தற்போது இந்த காட்சிகள் தொடர்பான ப்ரமோ வெளியாகிஜ வைரலாகி வரும் நிலையில், உங்க சீரியல் தாகத்துக்கு ஒரு அளவே இல்லையாப்பா படத்தோட சீன காப்பி அடிச்சீங்க இப்போ இப்படி பண்றீங்களே என்றும், இந்த சீன்லாம் எம்ஜிஆர் சிவாஜி காலத்தியே பார்த்தச்சு என்று கூறி வருகின்றனர்.
மேலும் ஒரு சுவர் கட்ட ஒரு இரவு மட்டுமே போதுமா இது என்னடா புது புரளியா இருக்கு என்றும், இது எதாவது சுவர் கட்ர காம்படிஷனா இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டாங்க என்றும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.