தீபாவை நெருங்கிய கார்த்திக்கு காத்திருந்த ஏமாற்றம்.. ஷாக்கான கீதா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை தேடி ஒவ்வொரு நர்ஸ் வீட்டிற்கும் செல்ல கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு நர்ஷ் வீடாக சென்று வரும் கார்த்திக்கு, இறுதியாக ஷக்தி வீடு மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் அவளை பார்க்க வருகின்றனர், அதே சமயத்தில் துங்காவும் இங்கு வர ஷக்தி மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரை சிலவற்றை வாங்கி கொண்டு வரும் போது துங்கா மடக்கி பிடித்து கீதா குறித்து விசாரிக்க அவள் கையில் இருந்த ஊசியை துங்கா காலில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி வருகிறாள்.
அடுத்து கார்த்திக் மற்றும் சரவணன் என இருவரும் ஷக்தி வீட்டிற்கு வந்து தீபா குறித்து விசாரிக்க இவர்கள் துங்காவின் ஆட்கள் என நினைத்து ஷக்தி எனக்கு தெரியாது என்று சொல்லி விட கார்த்திக் ஏமாற்றத்துடன் கிளம்பி கோவிலுக்கு வருகிறான். அதன்பிறகு கோவிலுக்கு வரும் கார்த்தி, கோவிலில் தீபா உயிரோட தான் இருக்கானு எனக்கு காட்டிட்ட.. அவ எங்க இருக்கானு எனக்கு காட்டிடு என்று சொல்கிறாள்.
பிறகு முருகன் வேஷம் போட்ட பையன் அங்கு வந்து கார்த்திக்கு ஆறுதல் சொல்லி நீ தொலைத்த பொருள் கிடைத்து விட்டதா என்று கேட்க கிடைத்து விடும் என சொல்கிறான். அதன் பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர கீதா தீபா குறித்து விசாரிக்க கார்த்திக் தாலியை எடுத்து நீட்ட தீபா உயிரோட தான் இருக்காங்களா, நல்ல விஷயம் என்று சொல்ல கார்த்திக் துங்கா யார் என்று கேட்க கீதா அதிர்சிச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“