ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வரும் இந்த சீரியலில் மாரிக்கு வில்லியாக தாரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சோனா நடித்து வருகிறார்.
சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர் இனி நடிப்புக்கு தீனி போடும் கேரக்டரில் நடிக்க போவதாக அறிவித்து மாரி சீரியலில் என்ட்ரி ஆனார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில், இவரின் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த சில நாட்களாகவே சோனாவை மாரி சீரியலில் பார்க்க முடியவில்லை, இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிய நிலையில் தற்போது அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி தரப்பில் விசாரிக்கையில் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் கால்சீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளனர். சோனாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்த மாரி சீரியல் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அடுத்த தாரா யார் என்பது குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது.
அதே சமயம் இந்த சீரியலில் சகுந்தலாவாக நடிக்கும் வனிதாவின் ரீ-என்ட்ரி, முத்து பேச்சி கதாபாத்திரத்தில் தேவயானி என்ட்ரி என வரும் நாட்களில் சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“