தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. மாயாஜாலம் அதிகம் உள்ளது போல் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலில், ஆஷிகா படுகோனே ஆதர்ஷ் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வந்தனர். தொலைந்த குழந்தை தன்னிடம் இருந்தும் தனது குழந்தை என்று தெரியாத நாயகி குழந்தையை தேடி அலைவது போல் இவ்வளவு நாட்கள் திரைக்கதை அமைக்கப்பட்டது.
சமீபத்தில், மாரிக்கு தனது குழந்தை தன்னிடம் இருக்கும் பாப்பாதான் என்று தெரியவந்த நிலையில், அவரின் மாமியார் தாரா, மாரியை கத்தியால் குத்திவிட்டு குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். இதனால் இறந்துபோன மாரி சொர்கத்திற்கு சென்று, எமதர்மரிடம் சண்டை போடுகிறார். ஆனால், மாரியின் ஆயுள் இன்னும் முடியவில்லை என்று தெரியவர, அவரை உடலில் சேர்க்க, எமதர்மன் வருகிறார். ஆனால் அதற்குள் மாரியின் உடல் எரிக்கப்படுகிறது.
அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் எமதர்மர், வேறொருவரின் உடலில் மாரியின் ஆத்மாவை சேர்ப்பதாக சொல்ல, அதன்படி ஒரு பயப்படும் சுவாபம் கொண்ட பெண் போலீஸின் உடலில் மாரியை சேர்த்துவிடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆரம்பம் முதல் தற்போது வரை விறுவிறுவிப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், கடந்த சில வாரங்களாக கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வந்தது.
இந்த விமர்சனங்களை கருத்தில் கொண்ட சீரியல் குழு, சீரியலில் புதிதாக திரைக்கதை அமைக்கிறேன் பாருங்கள் என்று சொல்லி, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அதிசய பிறவி படத்தின் காட்சிகளை காப்பியடித்து எடுத்துள்ளனர். இதனிடையே, இந்த சீரியலில், நாயகியாக ஆஷிகா படுகோனே மற்றும் நாயகனாக ஆதர்ஷ் நடித்து வந்த நிலையில் தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறியுள்ளனர். சமீபத்தில் ஆஷிகா வெளியேற்றம் குறித்த தகவல் மட்டுமே வெளியான நிலையில் தற்போது ஆதர்ஷ் வெளியேறியது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இருவரும் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது புது ஜோடிகளுடன் சீரியல் கதை ஒளிபரப்பாக உள்ளது. மாரிக்கு பதிலாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் அஞ்சனா நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியலான என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் நடித்துள்ளார். மேலும் ஹீரோவாக பிரபல சேனலில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, வீட்டுக்கு வீடு வாசப்படி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த சுகேஷ் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. சுகேஷ் சூர்யாவாக நடிக்கும் காட்சிகளை வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம்.