தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமான அவ்வப்போது புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது.
Advertisment
அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நினைத்தேன் வந்தாய் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 26-ம் தேதி முதல் வீரா என்ற புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அண்ணனுக்கு அண்ணனாக அப்பாவுக்கு அப்பாவாக குடும்பத்தை தாங்கிய அண்ணன் விபத்தில் உயிரிழக்க, அண்ணன் இடத்தை நிரப்பி குடும்ப பாரத்தை சும்மா வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள் வீரா.
இதனால் இனி அவளுடைய வாழ்க்கையில் நடக்க போவது என்ன? வீராவுக்கு தங்கையே வில்லியானது எப்படி? பாசத்திற்கும் புகைக்கும் இடையேயான இந்த போராட்டத்தில் வீரா வெல்ல போவது எப்படி? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக அமைய உள்ளது. வரும் திங்கள் (பிப்ரவரி 26) முதல் இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் காரணமாக மாரி சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அதாவது வரும் திங்கள் முதல் மாரி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நளதமயந்தி சீரியல் இனி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை ஒளிபரப்பாகி வந்த வித்யா நம்பர் 1 சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“