மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
யமுனா சாந்தாவிடம் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என ஃபீல் செய்ய கார்த்திக் இப்படி பயந்தவனாக இருக்கிறானே என சாந்தா அவனை திட்டுகிறான். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வெளியே கல் கோவிலில் புஷ்பா துர்காவிடம் நீ சங்கிலியை கல்யாணம் செய்து கொள் எனக் கேட்க அவள் முடியாது என்று சொல்கிறாள்.
புஷ்பா நீ சம்மதம் சொல்லவில்லை என்றால் பஞ்சாயத்தில் உன் அக்கா யமுனாவின் தாலி இறங்கிவிடும் என்று சொல்ல துர்கா யோசிக்கிறாள். அதன் பிறகு சக்தி, யமுனா, சாந்தா மூவரும் பஞ்சாயத்தில் என்ன நடக்குமோ என பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் துர்கா இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு சங்கிலியை கல்யாணம் செய்வது தான் என சொல்கிறாள்.
மறுபக்கம் புஷ்பா நீதிமணியிடம் பஞ்சாயத்தில் நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று மிரட்டுகிறாள். பிறகு புஷ்பா பூஜாவிடம் நாளைக்கு பஞ்சாயத்திற்கு சக்தி வரக்கூடாது அது உன் பொறுப்பு என்று சொல்லி அனுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாரி மற்றும் சூர்யாவை ஒன்று சேர்க்க ஹாசினி திட்டம் ஒன்றை போட்டு மாரி ரூமுக்கு சென்று என்னுடைய ப்ரண்டுக்கு காஞ்சிபுரத்தில் கல்யாணம் போக முடியாது. கல்யாணத்துக்கு போனா எல்லோரும் அரவிந்த் பற்றி கேப்பாங்க அதனால் எனக்கு பதில் நீங்க போயிட்டு வாங்க உங்களுக்காக ரூம் போட்டு இருக்கேன்.
நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு மறுநாள் காலையில் கல்யாண பாத்துட்டு கிளம்பி வாங்க என்று சொல்ல சூர்யா மாரியும் சரி என்று சம்மதம் சொல்கின்றனர். அதன் பிறகு சூர்யா தாராவிடம் பர்மிஷன் கேட்க அவளை போயிட்டு வாங்க என சொல்லி அனுப்ப சங்கரபாண்டி ஸ்ரீஜா ஆகியோர் எப்படி இருக்கீங்க என கேள்வி கேட்கின்றனர். ஜெகதீஷ் கிட்ட சொத்து விஷயமா பேசும்போது சூர்யா இங்கு இல்லாமல் இருப்பது தான் சரியென சொல்கிறாள். அதற்கு அடுத்ததாக ஹாசினி பூஜைக்கு தேவையான எல்லா பொருட்களையும் கட்டப்பையில் எடுத்து வைத்திருக்கேன் என சொல்ல சூர்யா மற்றும் மாரி இருவரும் காரில் கல்யாணத்துக்கு கிளம்பி செல்கின்றனர்.
மறுபக்கம் சங்கர பாண்டி ஆடிட்டரை சந்தித்து மாரி பெயரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாத்தையும் சூர்யா பெயருக்கு மாற்ற வேண்டும் என சொல்ல அதெல்லாம் முடியாது ஜெகதீஷ் சொன்னால் மட்டும்தான் முடியும் என சொல்லி விடுகிறார். இதையடுத்து மாரி மற்றும் சூர்யா ரெசார்ட்டுக்கு வர மாரி இவ்வளவு பெரிய ஹோட்டலா என்று வியக்கிறாள்.
ஹாசினி திட்டத்தின் படி ஹோட்டலில் முதலிரவு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு சூர்யா ரெஸ்டாரண்டில் சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்க்கப் போன நேரத்தில் மாரி ரூமில் பூஜை செய்ய அப்போது கற்பூரம் ஏற்ற அந்த புகையால் ஃபையர் லேம்ப் அலாரம் ஒலிக்கிறது. இதனால் எல்லோரும் ஓடி வந்து பார்க்க பிறகு பூஜை என்று கலைந்து செல்கின்றனர்.
அதற்கு அடுத்ததாக சூர்யா மாரிக்கு ஃபயர் லேம்ப் பற்றிய விவரங்களை செல்கிறான். இதை தொடர்ந்து ஆடிட்டர் ஜெகதீஷிடம் சங்கர பாண்டி வந்து சொத்துக்களை மாற்ற வேண்டும் என்று சொன்ன விஷயத்தை சொல்ல ஜெகதீஷ் ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
குலதெய்வ கோவிலில் சௌந்தரபாண்டி குடும்பம், தங்கவேலு குடும்பம் மற்றும் சண்முகம் குடும்பம் என எல்லோரும் ஒன்று சேருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பரணிக்கு பார்த்துள்ள மாப்பிள்ளை செல்வத்தின் குடும்பத்தினரும் கோவில் திருவிழாவுக்கு வருகின்றனர். இப்படி அனைவரும் கோவிலில் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் செல்வம் பரணியை பார்த்துக் கொண்டிருப்பதால் அவள் தன்னுடைய அம்மாவிடம் இது பற்றி சொல்ல உங்க அப்பா அதுக்காகத்தான் அவனை வரச் சொல்லி இருக்காரு நீ எதையும் கண்டுக்காத என சொல்லி விடுகிறார்.
இதனையடுத்து பரணி செல்வத்தை வெறுப்பேற்ற சண்முகத்துடன் நெருங்கி பழக சண்முகம் பரணியின் மீதான காதலை அதிகப்படுத்தி கொள்கிறான். இதை பார்த்த தமிழரசி கடுப்பாகி சண்முகத்தின் தங்கைகளிடம் நான்தான் உங்க வீட்டுக்கு மருமகளா வரணும், உங்கள அம்மா மாதிரி பார்த்துப்பேன் என பேச தங்கைகள் சண்முகம், பரணி ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கு என சொல்லி தமிழரசியை வெறுப்பேற்றுகின்றனர்.
அதன் பிறகு பரணி செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என சண்முகத்திடம் சொல்ல இந்த திருச்செந்தூரில் உங்க போனுக்கு சார்ஜ் போட இடம் இல்லையா கொடுங்க என வாங்கிக் கொண்டு சென்று ஒரு இடத்தில் சார்ஜ் போட கனெக்ஷன் சரியாக இல்லாததால் சார்ஜ் ஏறாமல் இருக்கிறது. இதனால் சண்முகம் என்ன பிரச்சனை என பார்க்க ஒயரில் கை வைக்க கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்படுகிறான். இதனால் எல்லோரும் பதறி போக பரணி முதல் உதவி செய்வதாக சொல்லி உதட்டோடு உதடு வைத்து மூச்சு கொடுக்க இதைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், சௌந்தர பாண்டி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.