தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. நடிகர் ஆர்யன் நாயகனாக வெற்றி என்ற கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், அவருக்கு ஜோடியாக ஷக்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் சௌந்தர்யா. மேலும் ஸ்ரீ ரஞ்சினி மீனாட்சி என்ற கேரக்டரில் நடிக்க சசிலயா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் நீதிமணி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள, மீனாட்சி குழந்தைகளுடன் நெற்கதியா நிற்கிறாள். தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தை காப்பாற்ற மெஸ் ஒன்றை நடத்தி வரும் மீனாட்சி பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதனிடையே அவரின் இரண்டாவது மகளான சக்திக்கும் ரங்கநாயகி மகன் வெற்றிக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்துவிடுகிறது.
முதலில் சக்திக்கு வெற்றியை பிடிக்காத நிலையில் நாட்கள் நகர நகர வெற்றியை புரிந்து கொண்டு அவனை ஏற்று கொள்கிறார், ஆனால் பூஜாவின் சதியால் மாமியார் ரங்கநாயகி வில்லியாக மாற வெற்றியும் சக்தியும் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகிய நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்ற பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் கதைக்களம் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் வரும் ஞாயிறு ( ஆகஸ்ட் 4 ) அன்று மதியம் 1:30 மணி முதல் 4 மணி வரை என மொத்தம் இரண்டரை மணி நேரம் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் கிராண்ட் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கிராண்ட் கிளைமேக்சில் நடக்க போவது என்ன? என்பது குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளன.
அதாவது ஊரில் கொட்டப்பனை என்ற திருவிழா நடக்க உள்ள நிலையில் வழக்கம் போல் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழ மீனாட்சிக்கு என்றதும் ரங்கநாயகி அவனமானப்பட வெற்றி சக்தியை வீட்டை விட்டு வெளியே துரத்த ரங்கநாயகி அதற்கு நோ சொல்ல வெற்றி கோபித்து கொண்டு வெளியே கிளம்புகிறான். பூஜா தன்னை ஏமாற்றி சொத்துக்களை மாற்றி எழுதி கொண்டது ரங்கநாயகிக்கு தெரிய வர, பூஜா ரங்கநாயகியை தீர்த்து கட்ட முடிவெடுத்து ஊருக்கு நடுவே கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் குடிசைக்குள் மறைத்து வைக்கிறாள்.
இன்னொரு பக்கம் மீனாட்சி கையில் தீ சட்டியிடன் காட்டு கோவிலுக்கு கிளம்ப பெரிய கருப்பசாமி இன்னொரு பக்கம் வேட்டைக்கு கிளம்புகிறது. இதற்கிடையில் சக்தியை சரத் கடத்தி கொண்டு போக அவனிடம் இருந்து தப்பித்த சக்தி புதை குழியில் விழுகிறாள். சக்தியை தேடி வெற்றி இன்னொரு பக்கம் அலைகிறான். ஒரு கட்டத்தில் சக்தி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து சக்தியை காப்பாற்ற வெற்றியும் புதைகுழியில் குதிக்கிறான்.
காட்டுக்குள் சென்ற மீனாட்சியை போட்டு தள்ள புஷ்பா ரவுடிகளை ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் நாலு பக்கமும் அடுத்து நடக்க போவது என்ன? மொத்த குடும்பமும் ஒன்று சேர போவது எப்படி என்ற பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த கதையுடன் இந்த கிராண்ட் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“