தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நளதமயந்தி. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நாயகனாக நந்தா மாஸ்டர் நடிக்க நாயகியாக ப்ரியங்கா நல்காரி நடித்து வருகிறார்.
Advertisment
தனக்கு உயிர் கொடுத்து மீண்டும் வாழ நம்பிக்கையை கொடுத்த பெண்மணியை தேடி வரும் நளன் அது தமயந்தியின் அம்மா தான் என்பதை புரிந்து கொள்ளாமல் அவளிடம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறான். இதனால் தமயந்தி பற்றிய உண்மைகள் நளனுக்கு எப்போது தெரிய வரும்? இருவரும் எப்போது ஒன்று சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும் தருணத்தில் வில்லிகள் சதியால் விபத்தில் சிக்கி கொண்டாள் தமயந்தி. இப்படியான நிலையில் தமயந்தியின் தங்கையாக அஞ்சலியாக நடிக்க வந்துள்ளார் தெய்வம் தந்த பூவே சீரியல் புகழ் ஸ்ரீநிதி. இனி இவரை வைத்தே கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisement
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“