Advertisment
Presenting Partner
Desktop GIF

மருமகள் மீது கடுப்பாகும் மாமனார்: திருமணத்திற்கு தயாரான நாயகி; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே, நினைத்தேன் வந்தாய் மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
NV Nk and Anna

நெஞ்சத்தை கிள்ளாதே - நினைத்தேன் வந்தாய் - அண்ணா

ரூமுக்குள் ஜோடியாக சிக்கிக்கொண்ட எழில், சுடர்.. மனோகரிக்கு எகிறிய பிபி 

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் ரூமில் சுடர் குளித்துக் கொண்டிருக்க எழில் அதே ரூமுக்கு குளிக்க வர குளித்து முடித்து வெளியே வந்த சுடர் அவனைப் பார்த்து அதிர்ச்சியாகி சத்தம் போட்ட நிலையில் இன்று, எழில் மற்றும் சுடர் என இருவரும் குழந்தைகள் ரூமில் சிக்கிக் கொள்ள டோர் லாக் ஆகி விடுகிறது. இருவரும் சேர்ந்து சத்தம் போட வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி விடுகின்றனர்.

ஆளாளுக்கு கதவை திறக்க முயற்சி செய்ய முடியாமல் போக டூப்ளிகேட் சாவி செய்பவனுக்கு போன் போட்டு கூப்பிட அவன் இரவு நேரத்தில் வர முடியாது நாளைக்கு வருவதாக சொல்கிறான். இதனால் கனகவல்லி எழில் மற்றும் சுடர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உள்ளவே இருக்கட்டும் நாளைக்கு காலையில சாவி செய்பவனையோ அல்லது கார்பென்டரை கூப்பிட்டு கதவை திறந்து விடலாம் என்று சொல்கிறாள். இதனால் மனோகரி பயங்கர கடுப்பாகிறாள்.

குழந்தைகள் தூங்கப் போக அப்போது சுடர் டிக் டிக் யாரது என்று கதவு பக்கத்தில் வந்து பேச அஞ்சலி நான் அஞ்சலி என்று சொல்கிறாள். பசிக்குது சாப்பாடு வேண்டும் என்று சொன்னதும் அஞ்சலி கீழே வந்து சொல்ல மாடியில் இருந்து பாக்ஸில் சாப்பாட்டை கட்டி அனுப்பி வைக்க ஜன்னல் வழியாக எடுத்து சாப்பிடுகின்றனர்.  செல்வி மனோகரியிடம் என்னமா நேத்து தான் உங்களுக்கு நிச்சயமாச்சு. இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூமுக்குள்ள இருக்காங்க என்று ஏற்றி விடுகிறாள்.

அடுத்து மனோகரி அவளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஃபோனை போட்டு ரூமை திறக்க முயற்சி செய்ய எல்லோரும் நைட்டு நேரத்தில் வர முடியாது என்று மறுத்து விடுகின்றனர். இவர்கள் பேசுவதை பக்கத்தில் நின்று கேட்ட இந்து இந்த எழில் ரூம் சாவியும் குழந்தைகள் ரூம் சாவியும் ஒன்றுதான் என்று சொல்கிறாள். அது மனோகரி காதுக்கு விழாத நிலையில் தீபா மூலமாக விஷயத்தை சொல்ல முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீடியாவில் பரவிய தகவல்.. கல்யாணம் குறித்து கௌதம் கேட்ட கேள்வி, மதுமிதாவின் முடிவு என்ன?

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நேற்றைய எபிசோடில் கௌதம் மோதிரத்தை எடுத்துக் கொடுக்க மீடியா மதுவுக்கு கௌதம் ப்ரபோஸ் செய்வதாக நினைத்து போட்டோ எடுத்த நிலையில் இன்று, வீட்டுக்கு வந்த மதுமிதாவிடம் அவளது அம்மா ரேணுகா என்னாச்சு என்று கேட்க மதுமிதா அமைதியாகவே இருக்க, அவர் மதுவை திட்டி விடுகிறாள். இதைத்தொடர்ந்து ஜீவா மதுமிதாவை சமாதானம் செய்கிறான்.

மறுபக்கம் சந்தோஷ் கௌதமிடம் பேசிக் கொண்டிருக்கும்போது செய்தியில், கௌதம் மதுமிதாவிற்கு ப்ரபோஸ் செய்ததாக தப்பான தகவல் பரவ அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மதுமிதா அப்பார்ட்மெண்டில் இதுகுறித்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்க அதைப் பார்த்து ரேணுகா இதுதான் நடந்துச்சா ஏன் என்கிட்ட சொல்லல என்று சந்தோஷப்படுகிறாள்.

அதேபோல் கௌதம் ஆபீஸ்க்கு வந்ததும் அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும் அவனுக்கு வாழ்த்து சொல்கின்றனர். இதனால் கௌதம் மதுமிதாவுக்கு போன் செய்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்க மது அதிர்ச்சி அடைகிறாள். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க, கௌதம் மீண்டும் என்ன சொல்றீங்க என்று கேட்க ஓகே என சம்மதம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாக்கியத்துக்கு விழுந்த அறை.. ரத்னாவால் கண் கலங்கிய சூடாமணி

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்காக எடுத்து வந்த நகையை முத்துப்பாண்டியிடம் கொடுத்து அதை இசக்கியிடம் கொடுக்க வைத்த நிலையில் இன்று, முத்துப்பாண்டி நகையை கொடுத்ததும் அதை பார்த்து இசக்கி சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக ரத்னா தூங்கி எழுந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருக்க அங்கு வந்த சூடாமணி நீ ஏமா இதெல்லாம் செய்யுற என்று கேட்க பரணி இன்னும் எழுந்துக்கல போல எங்களுக்காக அவ நிறைய செய்யுறா.. நல்லா தூங்கட்டும் என்று சொல்கிறாள்.

அதன் பிறகு சூடாமணி நான் தான் அவங்க ரெண்டு பேரையும் திருநள்ளாறு அனுப்பி வச்சிருக்கேன் என்று சொன்னதும் ரத்னா ஏன் என்று கேட்கிறாள். இங்க வீட்ல யாருக்குமே கிரகம் சரியில்ல.. உங்களுடைய ஆசைகளையே அவனுடைய ஆசையா வாழுற சண்முகம் அவனுடைய வாழ்க்கையை பற்றி யோசிக்கல.. பரணியும் இந்த வீட்டுக்கு வாழ வந்தது உங்களுக்கு ஒரு அம்மாவாகவே மாறிட்டா.. அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும் அதனால தான் அனுப்பி வைத்தேன் என்று சொல்கிறாள்.

இதை கேட்ட ரத்னா நல்ல விஷயம் செய்தீங்க நீங்க எப்பவும் எங்களோடவே இருங்க என்று சொல்ல சூடாமணி கண்கலங்கி சம்மதம் சொல்கிறாள். அடுத்ததாக சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் காபி கேட்க பாக்கியம் கொண்டு வந்து கொடுக்க தாமதம் செய்ய கடுப்பான சௌந்தரபாண்டி அவளை பிடித்து அடித்து விடுகிறார். பாக்கியம் இனிமே என் மேல கைய வச்சீங்க அவ்வளவுதான் என்று பதிலடி கொடுக்கிறாள்.

அதன் பிறகு காய்கறிகளை வாங்கிக் கொண்டு இசக்கி வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி இது எல்லாம் எதுக்கு நீ வாங்கிட்டு வர என்று கேள்வி கேட்கிறார். அவருக்கு ஸ்டேஷனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துட்டு வந்தேன். வர வழியில வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல என் பையன கைக்குள்ள போட்டுக்க பாக்குறியா என்று அவளிடமும் கோபப்படுகிறார்.

அதன் பிறகு இசக்கி உள்ளே வர பாக்கியம் தலைவிரி கோலமாக உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு என்று கேட்க, உங்க மாமா அடிச்சிட்டாரு என்று சொல்கிறாள். இதனால் இசக்கி சௌந்தரபாண்டியிடம் சண்டைக்கு வர அவர் ஓடுகாலி மகளே என்று கோபப்பட்டு திட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment