Advertisment

இன்றுடன் எண்ட் கார்டு... ஆதங்கத்தில் சாபம் விட்ட நடிகை: ஜீ தமிழ் சீரியலுக்கு வந்த சோதனை!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒரு சீரியல் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளதாக அந்த சீரியலின் நாயகி பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Zee tamil NK Endf

ஜீ தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த ஒரு சீரியலின் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த சீரியலில் நாயகியாக நடித்த நடிகை தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும், புதிய சீரியல்கள், ஒளிபரப்பை தொடங்குவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதில், ஒரு சில சீரியல்கள், எப்போவே முடிக்க வேண்டியது ஆனால் ஜவ்வாக இழுக்கிறார்கள் என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு சீரியல், திடீரென முடிவுக்கு வருகிறது.

ஜீ தமிழில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து வந்த இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். நடிகை கௌதமி கெஸ்ட் ரோலில் நடித்த இந்த சீரியல், விரும்பி நடக்காத திருமணத்தால் இணைந்த ஒரு ஜோடியில் வாழ்க்கையில் நடக்கும், முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பான இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல், இன்னுடன் (ஜனவரி 17) முடிவுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அதன் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொருத்துதான் அளவிடப்படுகிறது. இதில் சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களே ஆக்கிரமித்து வரும நிலையில், ஜீ தமிழ் தங்கள் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் வருவதற்கு அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. இதனால் 10-க்கு மேற்பட்ட சீரியல்களின் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

Advertisment
Advertisement

அதே சமயம் அனைவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக, நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவுக்கு வர உள்ளது குறித்து அந்த சீரியலின் நாயகி, ரேஷ்மா முரளிதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒன் லாஸ்ட் டைம், நல்ல பண்ணிட்டீங்க, உண்மை கண்டிப்பா வெளியில் வரும், நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று பதிவிட்டு, ஜீ தமிழ், நடிகர் ஜெய் ஆகாஷ், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் ஏன் இப்படி ஒரு முடிவு என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Reshma Tamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment