/indian-express-tamil/media/media_files/2025/09/09/screenshot-2025-09-09-160752-2025-09-09-16-08-13.jpg)
சமீபகாலமாக சினிமாக்கள் போன்று சீரியல்களும் மெகா ஹிட்டாகி வருகிறது. சினிமாக்களில் பாடல்கள் பயன்படுத்தி ரசிகர்களை கவர்வது போல சீரியல்களிலும் சினிமா பாடல்களை பயன்படுத்தி இல்லதரசிகளை இயக்குநர்கள் கவர்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மெகா சங்கமம் என்று ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல் நடிகர்களை இணைத்து ஒரு எபிசோட்டை எடுக்கின்றனர். இவ்வாறு சீரியல்களில் பல புதிய யுத்திகளை தொலைக்காட்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தற்போதுள்ள தொலைக்காட்சிகளில் ஒரு சில தொலைக்காட்சிகள் சீரியல்களுக்கும், சில ரியாலிட்டி ஷோக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த இரண்டிலுமே முன்னணியில் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஜீ தமிழ் தொலைக்காட்சி போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களும், சந்தியா ராகவ், கார்த்திகை தீபம், கெட்டி மேளம் போன்ற வெற்றிகரமான சீரியல்களும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறது. ஆலியா மானசா நடிப்பில் ‘பாரிஜாதம்’ என்ற தொடர் ஒளிப்பரப்பாகியுள்ள நிலையில் மேலும் ஒரு புதிய தொடரை ஜீ தமிழ் ஒளிப்பரப்பாகவுள்ளது.
சமீபகாலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல மெகா தொடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இல்லத்தரசிகளை கவரும் விதமாக ‘திருமாங்கல்யம்’ என்ற தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த தொடர் இரு நாயகிகள், ஒரு நாயகன் என்ற கதையம்சத்துடன் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘திருமாங்கல்யம்’ தொடரை ஆர்.ஆர்.கிரியேஷன் தயாரிக்கிறது. காயூ ஸ்ரீ, மேகா சல்மான் ஆகியோர் நாயகிகளாகவும், பிரித்விராஜ் நாயகனாகவும் நடிக்கவுள்ளார்.
இந்த தொடரில் நடிக்கவுள்ள மேகா சல்மான் கேரளத்தில் சில தொடர்களில் நடித்துள்ளார். பிரித்விராஜ் என்பவர் தெலுங்கில் மூன்று தொடர்களில் நடித்துள்ளார். இவ்வாறு மக்கள் மனதை கவரும் விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் ‘பாரிஜாதம்’ தொடரின் தயாரிப்பாளர் நாராயணன் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை ஆல்யா மானசா அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்திருந்தார். மேலும், “ என்றுமே என் வாழ்வில் நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளக் கூடிய புகைப்படம் இது. நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள ஒரு கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் நாராயணனுக்கு இந்த வாய்ப்பிற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.