சூழ்ச்சியில் சிக்கிய ராணிக்கு உதவும் சிவன்: இதய மாற்று ரகசியம் உடைபடுமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் இதயம் மற்றும் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் இதயம் மற்றும் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Idhayam and Ns

இதயம் - நினைத்தாலே இனிக்கும்

லெட்டரின் மூலம் உண்மையை உடைத்த சாரதா.. ஆனால் ஒரு கண்டிஷன்

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி துரையின் முகத்தில் கொதிக்கும் காபியை கொட்டி வீட்டை விட்டு வெளியே போக சொன்ன நிலையில் இன்று, பாரதி துரையை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க அங்கு வந்த ஸ்வேதா மற்றும் அறிவு, துரை இங்க தான் இருப்பான். இந்த சொத்துக்களில் நாங்களும் பார்ட்னர். அதனால் கேஸ் போட்டு இருக்கேன், தீர்ப்பு வரும் வரை எங்களை வெளியே போக சொல்ல முடியாது என்று ஷாக் கொடுக்கிறான். 

Advertisment

இதனை தொடர்ந்து பாரதி என்ன ஆதி எதுவும் பண்ணாமல் அமைதியா இருக்கீங்க என்று கோபப்பட நீங்க தானே ஆரம்பிசீங்க.. அப்போ நீங்க தான் முடிக்கணும். தெரிந்தோ தெரியாமலோ நீங்க இந்த விஷயத்தில் இறங்கிடீங்க, ஜெயிக்காமல் விட கூடாது என்று சொல்கிறான். பிறகு தமிழ் ஸ்கூலுக்கு தயாராகி கீழே வர ஆதி அவளை அழைத்து கொண்டு கிளம்புகிறான். அடுத்து சாரதா சொல்ல முடியாமல் தவிக்கும் உண்மையை ஒரு லெட்டராக எழுதுகிறாள். 

பிறகு பாரதி உள்ளே வந்து என்னாச்சு மா, ஏன் டல்லா இருக்கீங்க என்று கேட்க சாரதா ஒன்னும் இல்ல என்று சொல்கிறாள். மேலும் நாங்க உன்கிட்ட எதோ மறைக்கிறோம்னு கேட்டுட்டே இருக்கல, அது என்ன உண்மைனு இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன். ஆனால் நீ இப்போ நடக்கிற பிரச்சனையில் ஜெயித்த பிறகு தான் இதை படிக்கணும் என்று சொல்லி சத்தியம் வாங்குகிறாள். 

அடுத்து ஆதி தமிழுடன் ஸ்கூலுக்கு வர அங்கு வந்த துரை ஆதியிடம் வம்பிழுத்து நக்கலாக பேச தமிழ் இருப்பதால் அவன் அமைதியாக இருக்கிறான், துரை கிளம்பி சென்றதும் தமிழ் போங்க பா நீங்க முன்ன மாதிரி இல்ல, உங்ககிட்ட பேச மாட்டேன் என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

சதி செய்யும் இச்சாதாரி.. ராணியை காக்க இறங்கி வந்த சிவன், வேற லெவல் சம்பவம்

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கடந்த வாரம் இச்சாதாரி நாகம் ராணியை கொல்ல வீட்டிற்கு நுழைந்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ராணி உருவத்தில் இச்சாதாரி பல விஷயங்களை செய்து ராணி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக குடும்பத்தை நம்ம வைக்கிறாள். பிறகு ராணியை கொல்ல அடுத்தடுத்த சூழ்ச்சிகளை செய்ய தொடங்குகிறது. 

ராணி பொம்மி சொன்ன முகவரி சென்று பார்க்க அங்கு சிவன் ஒரு வயதான சாமியார் வேடத்தில் இருக்க ராணி நடந்த விஷயங்களை சொல்ல நான் உன் வீட்டிற்கு வரேன் என்று சிவனே வீட்டிற்கு வருகிறார். இச்சாதாரி நாகம் ராணியை கொல்ல கரண்ட் ஷாக் செய்ய சிவன் ஒயரை கையில் பிடித்து பொசுக்கி விடுகிறார். அடுத்து அந்த சாமியார் வேடத்திலேயே மாறி ராணிக்கு விஷத்தை கொடுக்க போக கடைசியில் அவள் உருவம் மாறி இச்சாதாரியாகவே தெரிய ராணி பாலை குடிக்காமல் தட்டி விடுகிறாள். 

இதையடுத்து சிவன் இல்லாத நேரத்தில் ராணிக்கு விஷம் கலந்த பாலை கொடுத்து விட அவள் விஷம் ஏறி விழ சித்தார்த் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லும் போது நடுக்காட்டில் கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நினைத்தாலே இனிக்கும் சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: