Advertisment

ஆவியை அடக்க வந்த கோரக்: மீண்டும் தாலியை திருடிய வில்லி; அடுத்து என்ன நடக்குமோ!

இந்துவின் ஆவியை அடக்க கோரக் வீட்டுக்கே வந்துவிட்டதால், நினைத்தேன் வந்தாய் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
zee tamil Mahs

தேடி வந்த கௌதம்.. எக்ஸ் லவ்வர் சொன்ன வார்த்தை, ஷாக் கொடுத்த மதுமிதா

Advertisment

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேணுகா ஜோசியரிடம் மதுவுக்கு கல்யாணம் நடக்குமா? நடக்காதா என ஜாதகம் பார்க்க சொன்ன நிலையில் இன்று,ஜோசியர் ஜாதகத்தை பார்த்துவிட்டு இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்ததாக கௌதம் ஜீவாவை தேடி வந்து என் தங்கச்சியை எதுக்கு அடிச்ச? அது தப்பு தானே என்று கேட்க அவனும் ஆமாம் தப்புதான் என்று சொல்லி மன்னிப்பு கேட்க என் தங்கச்சியை கண் கலங்காமல் பார்த்துப்பேனு சத்தியம் செய் என்று கேட்க ஜீவாவும் சத்தியம் செய்து கொடுக்கிறான்.

அதைத் தொடர்ந்து மது அபார்ட்மெண்டில் லிஃப்டுக்காக காத்திருக்க அப்போது அங்கு வந்த அவளது முன்னாள் காதலன் நீ கௌதமை கல்யாணம் பண்ணிக்கிறது எனக்கு பிடிக்கல, நான் இன்னமும் உன்னை நெனச்சுக்கிட்டு தான் இருக்கேன் என்று சொல்கிறான். இதைக் கேட்ட மதுமிதா என் பிரண்டையே கல்யாணம் பண்ணிக்கிட்டு என்கிட்ட நீ இப்படி பேசுவியா என்று கோபப்பட உனக்கு ஏத்த ஜோடி நான்தான் என்று சொல்கிறான்.

அப்போது கௌதம் வந்துவிட மதுமிதா அதிர்ச்சி அடைகிறாள். கௌதம் எதுவும் கேட்காத நிலையில் மது அவனது கையை பிடித்து இவர் தான் கௌதம்.. நான் கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை என்று அறிமுகம் செய்து வைக்கிறாள். பிறகு கௌதம் ஜீவா மற்றும் மாயா திரும்பவும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க என்று சொல்ல மது சந்தோஷப்படுவது போல நடிக்கிறாள். எக்ஸ் லவ்வர் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறான்.

பிறகு மதுமிதா கௌதமிடம் உங்களுக்கு என்னையும் என் குடும்பத்தையும் பார்த்தா எப்படி தெரியுது நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவீங்க அப்புறம் வேணும்னு சொல்லுவீங்க என்று கோபப்படுகிறாள். என்கிட்ட இத பத்தி பேசாதீங்க என்று சொல்லி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்துவை அழிக்க வந்த கோரக்.. நடு இரவில் நடந்தது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் சுடரிடம் எங்கள விட்டு எப்பயும் போகக்கூடாது என்று சத்தியம் வாங்கிய நிலையில் இன்று, சுடர் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்க கோரக் வீட்டிற்குள் நுழைகிறான். அதன் பிறகு சுடர் நெற்றியில் கை வைத்து உன்ன நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுந்து அலற சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்து ஓடி வருகின்றனர்.

அதன் பிறகு எழில் கோரக்கிடம் சண்டை போட்டு அவனை துரத்தி விடுகிறான். யார் இவன் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழ காலையில் பேசிக்கொள்ளலாம் என்று தூங்க செல்கின்றனர். குழந்தைகள் எங்களுக்கு பயமா இருக்கு நீங்களும் எங்க கூட வந்து தூங்குங்க என்று சொன்னதும் எழில் குழந்தைகளுடன் தூங்க செல்கிறான்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த நாள் காலையில் போலீஸ் வீட்டுக்கு வருகிறது. அபியிடம் நடந்தது என்ன என்று விசாரிக்க அவள் அம்மாவை கொன்றவர்களை பார்த்தேன் அவர்களிடம் சண்டை போட்டேன் அவர்கள் என்னை காரில் ஏற்றினார்கள் சுடர் தான் என்னை காப்பாற்றினாள் என்று சொல்ல சுடர் குழப்பம் அடைகிறாள்.

அதைத்தொடர்ந்து எழில் நைட் கூட வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்துட்டேன் அவன் யாரு என்பதையும் நீங்க தான் கண்டு பிடிக்கணும் என்று சொல்ல போலீஸ் கூடிய விரைவில் கண்டுபிடிப்பதாக சொல்கின்றனர். மேலும் சுடரிடம் அந்த ரவுடிகளையோ அல்லது காரையோ எங்கேயாவது பார்த்தால் தகவல் கொடுக்குமாறு சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். இதனால் மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். இதனால் நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தாலியை திருடிய ரம்யா.. சிம்பிளாக செக்மேட் வைத்த கார்த்திக்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி தாலியுடன் பெண் சாமியாரை பார்க்க வந்திருந்த நிலையில் இன்று, அபிராமியை பின்தொடர்ந்து வந்த ரம்யா இதை எபப்டியாவது தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து அபிராமியின் பேக்கை திருடி விடுகிறாள். இதனால் அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். அதன் பிறகு கார்த்திக்கு போன் செய்து தாலி காணாமல் போன விஷயத்தை சொல்லி எப்படியாவது கண்டுபிடித்து கொடு என்று சொல்கிறாள்.

அடுத்து கார்த்திக் கோவிலுக்கு வர அங்கு ரம்யா இருக்க இவனுக்கு ரம்யா மீது சந்தேகம் வருகிறது. உடனே ஒரு திட்டத்தை போட்டு ரம்யாவிடம் நீங்க எங்கேயும் போகாமல் அம்மாவுடன் இருங்க, அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. நான் போய் கண்டு பிடித்து கொண்டு வரேன் என்று சொல்ல ரம்யா எப்படி கண்டு பிடிக்க போறீங்க என்று கேட்கிறாள். உடனே கார்த்திக் அந்த பேக்கில் தாலி மட்டும் இல்ல அம்மாவோட போனும் இருக்கு, போலீசில் சொல்லி மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து கண்டு பிடித்து விடுவேன் என்று சொல்ல ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.

கார்த்திக் கிளம்பி போனதும் அபிராமியிடம் தண்ணீர் வாங்கிட்டு வருவதாக சொல்லி வேகவேகமாக வீட்டிற்கு சென்று அந்த பையை கொண்டு வந்து ரவுடியிடம் இருந்து நாலு பேர் பேக்கை பிடித்து வைத்து வெளியில் பேசிட்டு இருந்ததாக சொல்லி கொடுக்க அபிராமி சந்தோசப்படுகிறாள்.

பிறகு கார்த்திக்கு விஷயம் தெரிய அவனும் அமைதியாகி விட ரம்யா வீட்டிற்கு வந்ததும் மாப்பிள்ளை ரமேஷ் ஹனிமூன் செல்வது குறித்து பேசி கடுப்பாக்குகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment