Advertisment

குழந்தையை கடத்திய நாயகி... பெற்ற குழந்தை தாயிடம் சேருமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் நினைத்தேன் வந்தாய் - சந்தியா ராகம் -மாரி ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil NV SR M

நினைத்தேன் வந்தாய் - சந்தியா ராகம் -மாரி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்க ரகுராமை அழைக்கும் ப்ரின்ஸிபல்.. ஜானகிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Advertisment

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கம் சீனு பெயரில் எதுவும் இல்லை என்று குத்தி காட்டுவது போல் பேச மாயா அவருக்கு பதிலடி கொடுக்க லிங்கம் மன்னிப்பு கேட்டு வெளியேறிய நிலையில் இன்று, ஜானகி மாயாவிடம் சீனு பல வருஷமா இங்க தான் இருக்கான், நான் கூட அவனை பற்றி இந்த அளவுக்கு தெரிந்து கொள்ளவில்லை, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க மாயா நமக்கு பிடிச்சவங்களை பற்றி நம்மளை அறியாமலேயே நிறைய தெரிந்துப்போம் என்று சொல்ல ஜானகிக்கு சாமி சொன்ன விஷயம் நினைவுக்கு வந்து போகிறது.

சீனுவும் இவர்கள் பேசுவதை பார்த்து மாயா இவ்வளவு நாளா நம்மளை பாலோ பண்ணி இவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்காளே என்று சந்தோஷப்படுகிறான், மறுபக்கம் ஷாரு பார்வதி ஆகியோர் இந்த விஷயத்தை வைத்து பிரச்சனை செய்ய முடியாமல் போய்டுச்சே என்று பேச ஷாரு அந்த மாயாவுக்கு ஏற்கனவே சீனு மேல் ஒரு கண்ணு இருக்கு, அதனால் உஷாரா இருக்கனும் என்று சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து மாயா, தனம் ஆகியோர் காலேஜ் கிளம்ப ஜானகி தனத்தின் கையில் ஒரு கருப்பு கயிற்றை கட்டி நீ கண்டிப்பா பேட்மிட்டன் போட்டியில் ஜெயிக்கணும், சந்தியா ஒவ்வொரு முறையும் விளையாட போகும் போது இந்த மாதிரி கட்டி விடுவேன், அவளும் ஜெயித்து விட்டு தான் வருவாள் என்று சொல்லி அனுப்புகிறாள்.

காலேஜில் கார்த்திக் கீர்த்திக்கு ப்ராக்ஸ்டிஸ் கொடுப்பதை பார்த்து தனம் கடுப்பாகிறாள். போட்டி தொடங்க முதல் போட்டியில் தனம் வெற்றி பெறுகிறாள், இவ்வளவு அழகா விளையாடுற தனத்திற்கு ஏதாவது செய்யணும் என்று யோசிக்கும் ப்ரின்ஸிபல் அவளது அப்பாவை வர வைத்து அவரது கையாலேயே பரிசு கொடுக்க வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்.

உடனே ரகுராம் வீட்டிற்கு போன் செய்ய ஜானகி போனை எடுக்க ப்ரின்ஸிபல் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாரியின் குழந்தையுடன் தாரா வீட்டிற்கு வரும் சாஸ்திரி.. எதிர்பாராத ட்விஸ்ட்

மாரி சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் துரத்த குழந்தையுடன் ஓடி வந்து காரில் விழுந்த சாஸ்திரியை சூர்யா காப்பாற்றிய நிலையில் இன்று, சூர்யா அவர்களை வீட்டிற்கு கொண்டு போய் விட்டு வருவதோடு அந்த குழந்தைக்கு பொம்மைகளையும் வாங்கி கொடுத்து விட்டு வருகிறான். அடுத்து தாரா சூர்யாவிடம் அடி வாங்கி ஹாஸ்பிடலில் அட்மிட்டான ரவுடிகளை சென்று பார்க்கிறாள்.

அவர்களிடம் அந்த குழந்தையை எங்க பார்த்தீங்க? எந்த ஏரியால பார்த்தீங்க என்று விசாரித்து கொண்டிருக்க ரவுடி விஷயத்தை சொல்ல போகும் சமயத்தில் அங்கு வந்து பாம்பு ஒன்று அவனை கொத்த விஷயத்தை சொல்லாமல் உயிரை விடுகிறான். இதனால் தாராவுக்கு எதுவும் தெரியாமல் போய் விடுகிறது. மாரி குழந்தையை நினைத்து கவலையில் இருக்க தங்களது குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த ஜெயினை ஸ்ரீஜா, ஹாசினி குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷனில் வைத்து போட்டு விடலாம் என்று சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்குகிறாள்.

அதனை தொடர்ந்து மாரி சூர்யா சென்றிருந்த கோவில் அய்யர் சாஸ்திரிக்கு போன் செய்து எனக்கு தெரிந்தவங்க வீட்டில் குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷன் இருக்கு. வழக்கமா நான் தான் அந்த வீட்டு பங்க்ஷன்களுக்கு போவேன், இப்போ வெளியே போறதால என்னால போக முடியாது நீங்க போயிட்டு வாங்க என்று சொல்கிறார். ஆனால் சாஸ்திரி என்கிட்ட குழந்தை இருக்கு, குழந்தையை விட்டு தனியா போக முடியாது என்று சொல்கிறார்.

அவங்க எனக்கு நல்லா தெரிந்த நல்ல குடும்பம் தான். நீங்க குழந்தையோடவே போங்க. ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்று சொல்ல சாஸ்திரியும் ஓகே சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்த எழில்.. ராமையாவின் வார்த்தையால் நடந்த ட்விஸ்ட் 

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடர் குழந்தைகளை கடத்தும் பெண் என போலீஸ் வந்து சொல்ல கனகவல்லி எழிலுக்கு சொல்ல எழில் குழந்தைகளை தேடிச் சென்ற நிலையில் இன்று, சுடர் குழந்தைகளுடன் ஒரு குடோனுக்குள் இருக்க ரவுடிகள் அவளையும் குழந்தைகளையும் சுற்றி வளைக்கின்றனர். அங்கு வரும் எழில் ரவுடிகளை அடித்து போட்டு குழந்தைகளை காப்பாற்ற போலீசும் அங்கு வந்து விடுகிறது. சுடர் குழந்தைகளை கடத்துறாங்க சார் என்று சொல்ல நீயே ஒரு பெரிய கடத்தல் காரி என சுடரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

எழில் பதில் ஏதும் பேசாமல் நிற்கிறான். அதன் பிறகு குழந்தைகளிடம் இனி தமிழ் உங்களுக்கு கேர் டேக்கர் கிடையாது என சொல்லி வீட்டுக்கு அழைத்து வருகிறான். பிறகு போலீஸ் எழிலுக்கு போன் போட்டு நேரில் வந்து கம்ப்ளைன்ட் எழுதி தர சொல்ல எழில் குழந்தைகளிடம் எங்களுக்கு தமிழ் யாருமே தெரியாது கொஞ்ச நாளாக தான் அவ இங்க இருக்கா என்று சொல்லணும் என்று ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறான். ஸ்டேஷனில் போலீஸ் சுடரை அடித்து விசாரிக்கின்றனர்.

ஸ்டேஷனுக்கு வரும் எழில் கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுக்க ராமையா அந்த பொண்ணு மேல தப்பு கிடையாது அது குழந்தைகளை தான் காப்பாத்துச்சு என்று சொல்ல எழில் கொஞ்சம் அமைதியா இருங்க என்று சத்தம் போடுகிறான். அஞ்சலி மட்டும் ஜெயிலுக்குள் இருக்கும் சுடரின் கையைப் பிடித்து அழ அவளும் அஞ்சலியை பார்த்து அழுகிறாள். எழில் அஞ்சலியை திட்டி வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறான்.

ராமையா சொன்னதை கேட்ட போலீஸ் சுடரை கூப்பிட்டு உன்னுடைய உண்மையான பெயர் என்ன நீ எதுக்கு தமிழ் என்ற பெயரில் அந்த வீட்ல இருக்க என்று விசாரிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment