ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் இந்த வாரத்துடன் முடிவடைகிறது என படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்வு இருந்து வருகிறது. பூவே பூச்சூடவா சீரியலில், ரேஷ்மா முரளிதரன் மற்றும் கார்த்திக் வாசுதேவன் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பை ஆரம்பித்த சீரியல், 1150 எபிஷோடுகளைக் கடந்துள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 4 தேதியுடன் சீரியல் முடிவடைய உள்ளதாக, அந்த சீரியலில் நடிக்கும் ஈஸ்வர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், பூவே பூச்சூடவா சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, The end is near Poove Poochudava என ஈஸ்வர் ரகுநாதன் பதிவிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் முடிவடையப் போவதை நினைத்து சீரியல்களின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil