scorecardresearch

முக்கிய சீரியலில் வெளியேறிய பிரபலம்… புதிதாக நுழைந்த பாரதிராஜா உறவினர்!

Zee Tamil Puthuputhu Arthangal serial new actor entry: ஜீ தமிழ் டிவியின் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடிக்கும் ஜெயராஜ்; திண்டுக்கல் லியோனிக்கு பதிலாக நடிக்கிறார்

முக்கிய சீரியலில் வெளியேறிய பிரபலம்… புதிதாக நுழைந்த பாரதிராஜா உறவினர்!

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில், முக்கிய பிரபலத்துக்கு பதிலாக நடிக்கிறார் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள். 90களில் வெள்ளித்திரையில் முன்னனி நடிகையாக இருந்த தேவயானி இந்த சீரியலின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் விஜே பார்வதி, அபிஷேக் சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

100 எபிஷோடுகளை கடந்த ஒளிப்பரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியின் மாமனார் கதாப்பாத்திரத்தில் இதுவரை பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி நடித்து வந்தார். தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் லியோனி கதாப்பாத்திரத்தில் சீரியல் நடிகர் ஜெயராஜ் இனி நடிக்கவுள்ளார். ஜெயராஜ், ‘கத்துக்குட்டி’,  ‘ஒரு கிடாயின் கருணை மனு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர். மேலும், றெக்க கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சீரியல் நடிகரான ஜெயராஜ், இயக்குனர் பாரதிராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Zee tamil puthuputhu arthangal serial new actor entry