சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணி சேனல்களுக் இணையாக வேகமான வளர்ந்து வரும் ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதேபோல் வார இறுதுியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
:அந்த வகையில் ஜீ தமிழின் சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், தமிழாதமிழா, சூப்பர் குயின் போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் போட்டியாளர்களின் திறமையை வெளிப்படுத்த பொருத்தமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வசதியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. சாமானிய மக்களில் இருந்து 12 பேர் பல்வேறு சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு 12 சின்னத்திரை/ திரையுலக பிரபலங்களுடன் அவர்கள் இணைந்து நடனமாட உள்ளனர்.
இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 12 சாமானிய போட்டியாளர்களும் எதிர்காலத்தில் ஒரு ஸ்டாராக திரையுலகில் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடும் போட்டியாளர்களின் திறமையை மதிப்பிட தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சினேகா மற்றும் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள டான்ஸ் மாஸ்டர் பாபாபாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
ஆர் ஜே விஜய் மற்றும் கிகி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். கிளாசிக்கல், ஹிப்-ஹாப், ஃப்ரீஸ்டைல் முதல் நாட்டுப்புற நடனம் என ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ரவுண்டுகளின் மூலம் போட்டியாளர்களைஅடுத்தகட்டத்திற்குகொண்டுசெல்லஉள்ளனர். கடந்த சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்ற ரேஷ்மா, கதிர், யோகேஸ்வரன், அர்ச்சனா, அஷ்வினி, ஜீவன், காளி உள்ளிட்ட பல சிறந்த போட்டியாளர்கள் சின்னத்திரையில்இன்றுஸ்டாராகஜொலித்து வருகின்றனர்.
இவர்களைப்போல இந்த சீசனில் பங்கேற்கும் பல்வேறு போட்டியாளர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் காத்துக் கொண்டிருக்கிறது எனசொல்லலாம். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களைபோல் நான்காவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும்பெரும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil